தேவனுடைய சுற்றப்பட்ட வெகுமதி Jeffersonville, Indiana, USA 60-1225 1சகோதரன் நெவில் உம்மை ஆசீர்வதிப்பாராக. கர்த்தருடைய வீட்டிற்கு வருவது எப்பொழுதுமே நன்மையானதாகவே இருக்கிறது. ஆனால் கிறிஸ்மஸ், புத்தாண்டு மற்றும் புனிதநாட்கள், இவைகளில் மிகவும் அதிகமான நன்மையாக உள்ளதுபோன்று தென்படுகிறது. அது ஒரு சிறப்பான சிறு ஆசீர்வாதம் நமக்காகவே விடப்பட்டுள்ளது போன்றே தென்படுகிறது. மேலும் நாம் ........ எல்லா நேரத்திலும் நாம் இந்த கிறிஸ்மஸ் உணர்வை உடையவர்களாய் இருக்க முடியாமலிருப்பது மிகவும் வருந்தத்தக்கதாய் உள்ளது. ஜனங்கள் உங்களுக்கு கரம் அசைத்து, “கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக” என்கிறார்கள். அது நல்லது. கிறிஸ்மஸைக் குறித்த அந்த ஒரு காரியத்தை நான் விரும்புகிறேன். இப்பொழுது அடுத்த சனிக்கிழமை இரவிற்கான, முழு இரவு ஜெபம் அறிவிக்கப்பட்டதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன் என்று நான் நினைக்கிறேன். கர்த்தருக்கு சித்தமானால், அப்பொழுது அந்த முழு இரவு ஜெபத்தில் நான் இங்கிருக்க முயற்சிப்பேன், கர்த்தருக்கு சித்தமானால், அடுத்த சனிக்கிழமை இரவிற்கான ஒரு பொருளின் பேரில் அவர்களுக்கு உதவி செய்யும்படியாய் சற்று பேசும்படி என்னுடைய நேரத்திலே எடுத்துரைப்பேன். உண்மையிலேயே ஞாயிறு காலை நம்முடைய வழக்கமான ஞாயிறு பள்ளி உண்டு. ஞாயிற்றுக்கிழமை இரவு சுவிசேஷ ஆராதனை உள்ளது. இப்பொழுது ......... (சகோதரன் நெவில், “அடுத்த ஞாயிற்றுக்கிழமை இரவு கால்கழுவுதலுங்கூட இருக்கிறது'' என்கிறார். - ஆசி.) அடுத்த ஞாயிற்றுக்கிழமை இரவு இராப்போஜனம், கால் கழுவுதல். அது சரி. நல்ல வழியில் புத்தாண்டை துவங்க இராப்போஜனம் எடுப்பதும், கால்களை கழுவுதல் வைத்திருப்பதும் சரியே. 2இப்பொழுது, நான் இந்த அறிவிப்பை செய்யும்படி விரும்புகிறேன், அதாவது இது இந்த கூடாரத்தின் கண்காணிகளுக்கும், தர்மகர்த்தாக்களுக்கும் மற்றும் கூடாரத்தின் போதகர் களுக்கும், துணை போதகர்களுக்குமான ஒரு சீறு வரையறுக்கப் பட்ட கூட்டம் போன்றதா என்பதை நான் கேட்டறிந்து கொண்டிருக்கிறேன். எப்பொழுதாவது ஒரு தடவை, கர்த்தர் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிற விதத்தைக் கண்டறிய நம்மை ஒன்று சேர்க்கிற இது நன்மையாக உள்ளது என்றே நான் கருதுகிறேன். மேலும் அநேக சமயங்களில், வேத வாக்கியங்களில் நீங்கள் கண்டறிவது போன்றே, சிறு காரியங்கள் தோன்றுகின்றன. அவை கடினமானவைகளாக இருக்கும். நாம் ......... நாம் அதையே, அதே காரியத்தை எங்கும் பேச விரும்புகிறோம். நாம் ஒன்று சேர விரும்புகிறோம். நான் போதர்களாகிய உங்களையும், உடனிருப்பவர்களையும் விரும்புகிறேன். உண்மையிலேயே சகோதரன் நெவில் இருப்பார். நம்முடைய உடனுழைப்பாளர்களில் ஒருவரான சகோதரன் டான் ரடல் (Don Ruddle) இங்கு உள்ளார். சகோதரன் கிரகாம் ஸ்நெலிங் (Graham Snelling) ஊடிகாவிலிருந்து (Utica) வந்துள்ளார். நம்முடைய மிஷனெரி சகோதரன் ஸ்டிரிக்கர் (Stricker) இங்கு உள்ளார். போதக சகோதரர்கள், சகோதரர் .......... சகோதரன் பார்நெல் (Parnell) மற்றும் பலதரப்பட்டவர்கள் இங்குள்ளனர். இங்குள்ள உடன் உழைப்பாளர்களை நீங்கள் அறிவீர்கள். சகோதரன் ஜூனியர் ஜேக்சன் நியூ ஆல்பனியிலிருந்து வந்துள்ளார். பின்னர் கண்காணிகளும், தர்மகர்த்தாக்களும் உள்ளனர். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் உங்களுக்கு கூற விரும்புகிறேன். வருகின்றதான இந்த வாரத்தில் நீங்கள் ஒரு சிறிய துண்டுத்தாளை எடுத்து, அதில் ஆலோசனைகளை அல்லது ....... நான் கூறும் வேத வாக்கியங்களை அல்லது நீங்கள் கவனிக்க வேண்டிய ஏதோ ஒரு கடமையை எழுதிக் கொள்ளுங்கள், நீங்கள் அதை அறியாமலிருந்திருக்கலாம். 3தர்மகர்த்தாவைப் போன்ற ஒருவர், ''இந்த காரியம் எழும்புமேயானால், அப்பொழுது என்னுடைய கடமை என்ன?“ என்று கூறலாம். ஒரு கண்காணியாய் உள்ள காரணத்தால், ”இந்த காரியம் எழும்புமேயானால் என்னுடைய கடமை என்ன?“ என்று கேட்கலாம். மேலும் போதகர், ”இந்த வார்த்தையில், இங்கே, அது இன்ன - இன்ன - விதமாய் அங்கே இருந்திருக்க வேண்டும் என்பதை நான் காண்கிறேன், மேலும் நாம் அதை போதிக்கிற விதமாய் அப்படியே நான் அதை புரிந்து கொள்கிறதில்லை. அதை வேத வாக்கியத்தில் பொருத்துங்கள் என்றவாறே“ கூறலாம். பின்னர், நீங்கள் விரும்பினால், அவைகள் எல்லாவற்றையும் சகோதரன் உட்டிடம் (Wood) கொடுங்கள், ஏனென்றால் அவர் எனக்கு பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார். உங்களால் முடிந்தளவு துரிதமாக, நீங்கள் உங்களுடையவைகளை எழுதி முடித்தவுடனே, நான் அதை வேத வாக்கியங்களில் கண்டு உறுதி செய்யும்படியாய் நான் அதை சரியாக கணித்துப் பார்ப்பேன். நாம் இதைச் செய்ய முயல்வோம். இப்பொழுது, இது ஒரு பொதுவான கூட்டமாய் இருக்கவில்லை. இது கூடாரத்தின் தர்ம கர்த்தாக்களுக்கும், கண்காணிகளுக்கு மானதும், இந்த கூடாரத்தைக் குறித்ததும் மற்றும் போதகர்களுக்குமானதாய் உள்ளது. நாம் அவைகளை கண்டறிந்து கொள்ளத் துவங்கின வுடனே அது திடீரென்று வெளிப்படும். அப்பொழுது நாம் ஒரு இரவு இங்கே கூட்டம் நடைபெறப் போவதில்லையென்று அறிவிப்போம். ஆகையால் அப்பொழுது நாம் - நாம் அதில் கவனம் எடுத்துக்கொள்வோம். 4அது ஒரு நன்மையான காரியமாய் இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். சகோதரன் நெவில், சகோதரர்கள், போதகர் களாகிய நீங்கள் யாவரும், என்றிவ்வாறே நாம் சேர்ந்து அணுகலாம். நீங்கள் பாருங்கள், அதே காரியத்தை எங்கும் நாம் அதே விதமாகவே பேசமுடியும் என்பதை நாம் அறிவோம். அப்பொழுது அது ஒலிப்பதிவு செய்யப்படும். நம்முடைய கேள்விகளும், நம்முடைய பதில்களும் கூட ஒலிப்பதிவு செய்யப்படும். ஒவ்வொருவரும் ஒரு ஒலிநாடாவை பெற்றுக்கொள்ளலாம். எனவே எந்தக் காரியத்திலாவது எந்த கேள்வி எழும்பினாலும் சபை பலனடையும்படியாய் திரும்பவும் போட்டுப் பார்த்து நீங்கள் அதை அறிந்து கொள்ளலாம். இல்லையென்றால் யாராவது ஒருவர், “நல்லது, இது'' என்பார். எனவே நாம் திரும்பிச்சென்று, ஒலிநாடாவில் என்ன உள்ளது என்றும், அது என்ன கூறியுள்ளது என்பதையும் புரிந்து கொள்ளலாம். ஏற்கனவே அந்த மாதிரியான ஒலிநாடாக்களை நாம் வைத்திருக்கிறோம். இப்பொழுது நாம் புதிய தர்மகர்த்தாக்களை பெற்றுள்ளோம். இந்த வருடம் நாம் சில புதிய கண்காணிகளைப் பெற்றுள்ளோம் என்று நான் நினைக்கிறேன். எனவே நாம் அவர்களை அழைத்து அதன் பேரில் அறிவுறுத்த விரும்புகிறோம். 5நீங்கள் விரும்பினால் இந்த இளைய சகோதரன், செல்லஸ்பர்க்கிலிருந்து (Sellersburg) இங்கு வந்திருக்கிற நம்முடைய சகோதரர்களில் ஒருவரான சகோதரன் வில்லார்ட் கிரேஸ், (Willard Crase) அவர் நிச்சயமாக அதைக் குறித்த செய்தியைக் கொண்டு வருவார். ஏனென்றால் அவர் கர்த்தருக்குள்ளாக வாலிபமாக இருக்கிறார். மேலும் இந்த வாலிப நபர்களால் நிலைநாட்ட முடியும் என்று நான் எண்ணுகிறேன், நான் என்ன குறிப்பிடுகிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள், எப்படி பற்றிக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அவர்களுடைய சிந்தையில் சிறு கேள்விகள் தோன்றுகின்றன. ஏதோ ஒரு பெருங் கிளையிலிருந்து தப்பி ஓடுவதற்குப் பதிலாக, நாம் சேர்ந்து அணுகி, அது எதைக் குறித்தது என்று காண்போமாக. அப்பொழுது நாம் .... நம்முடைய கூட்டங்களில், நம்முடைய மகத்தான கூட்டு கூட்டங்களில், நாம் இந்த கடைசி கூட்டத்தொடர்பில் இருப்பது போன்று, சபைகள் ஒன்றாக இணையும்போது, என்னத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், எதை கூறவேண்டும் என்றும், எதை செய்ய வேண்டும் என்றும், அப்பொழுது நாம் - நாம் அறிந்து கொள்வோம். நாம் யாவரும் புரிந்துகொள்ளும்படியாக நாம் யாவரும் ஒரே பாஷையை பேச விரும்புகிறோம். 6இப்பொழுது மற்றொரு காரியத்தையும் நான் கூற விரும்புகிறேன். சகோதரன் நெவில் அதை மிக நன்றாக கூறியிருக்கின்ற காரணத்தால், இதுபோன்ற இந்த பரிசுத்த நாட்களைச் சுற்றியுள்ளதான இந்த ஐக்கிய வேளையில், இந்த கிறிஸ்மஸ் பண்டிகையின் செய்தியில் நாங்கள் உங்களுக்கு சிறந்த வாழ்த்துதலை கூறுகிறோம். பின்னர் நான் ஒவ்வொருவருக்கும், உங்கள் ஒவ்வொரு வருக்கும் நன்றி தெரிவிக்கும்படியாய் இந்த நேரத்தை எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். எங்களுடைய வீட்டில் பெற்றுக்கொண்ட பொருட்களுக்காகவும், வெகுமதிகளுக்காகவும், உங்களுடைய கிறிஸ்மஸ் அட்டைகளுக்காகவும் நான் எவ்வளவு நன்றியுள்ள வனாக இருக்கிறேன். நான் நிச்சயமாகவே என் முழு இருதயத் தோடு உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அது நிச்சயமாகவே இந்த காலையில் நமக்கு நன்மை செய்தது. ....... நான் ஒருவிதமாக மன நிறைவை அளிக்க ஒரு கிறிஸ்மஸ் மரத்தை விரும்புகின்ற ஒரு சிறு பையனை உடையவனாயிருந்தேன், நாங்கள் அதை அறையில் வைத்திருந்தோம். இந்த காலையிலோ அதன் கீழே சென்றபோது, இங்குள்ள என்னுடைய சபையிலிருந்தும், பல்வேறுபட்ட இடங்களைச் சுற்றிலுமுள்ள என்னுடைய நண்பர்களிடமிருந்தும் வந்திருந்த பல வகையான வெகுமதிகள் அந்த மரத்தின் கீழே இருப்பதைக் கண்டேன். நான் உங்கள் ஒவ்வொருவரையும் எவ்வளவாய் பாராட்டுகிறேன் என்பதை ........ உங்களுக்கு வெளிப்படுத்திக் கூறுவதற்கான வார்த்தைகள் என்னிடத்தில் இல்லை. பரலோகத்தின் தேவன் உங்களை அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக என்பதே என்னுடைய ஜெபமாக உள்ளது. மேலும் இப்பொழுது ........ மேலும் அது எங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். நாங்கள் வெகுமதிகளை திரும்ப அனுப்ப இயலாது. ஏனென்றால் நான் அந்த அளவு பணத்தை சம்பாதிக்க மாட்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் - நான் ஒரு வாரத்திற்கு நூறு டாலர்களே சம்பாதிக்கிறேன், மற்றும் நான் ஒரு பெரிய குடும்பத்தை உடையவனாயிருக்கிறேன், கிட்டத்தட்ட கோடி நண்பர்கள் உள்ளனர், அது அவர்களுக்கு சுற்றிலும் செல்வது நிச்சயமாகவே கடினமாயிருக்கும். ஆனால் நாங்கள் - நாங்கள் உங்களுக்கும், உங்களுடைய எண்ணங்களுக்கும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள் என்ற நிச்சயமுடையவனாய் நான் இருக்கிறேன். 7இப்பொழுது வருகின்றதான இந்த - இந்த புத்தாண்டினுடைய இரவை மறந்துவிடாதீர்கள். ஓ, நான் இந்த கூடாரத்தில் இங்கே முதல் முழு இரவு ஜெபத்தில் இருந்ததை நினைவு கூருகிறேன். இங்கே அதனை எவராவது நினைவு கூருகிறீர்கள் என்று நான் யூகிக்கவில்லை. ஆனால் ஒரு இரவு கர்த்தர் உங்களுடைய போதகரின் மிகுதியான வெற்றாச்சாரத்தை எடுத்துவிட்டார். ஆகையால் நாங்கள் அப்பொழுதிலிருந்தே ஒரு மகத்தான நேரத்திற்காக முன்னோக்கி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது நாம் ஜெபிப்பதற்கு முன்பாக, இன்றிரவு வேத பாடப்பகுதியை நான் வாசிக்க விரும்புகிறேன். நானே இன்றைக்கு ஒருவிதமாக ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். இன்றிரவு நான் இங்கு வந்து சேர்ந்தால், கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்பதன் பேரில் பேசப்போவதாக இருந்ததை நான் - நான் அறிவித்து விட்டேன். அது எனக்கு ஒருவிதமாய் நன்கு அறிந்த பகுதியாகும். நம்முடைய நல்ல நண்பர், சகோதரன் சாத்மேன், சபையின் தர்மகர்த்தாக்களில் ஒருவரை நான் கேட்டறிந்து கொண்டிருந்தேன். அப்பொழுது அவர், “சகோதரன் பிரான் ஹாம், நான் அதைக் குறித்த ஒலிநாடாவை வைத்திருக்கிறேன். நீர் அதை எங்கோ பிரசங்கித்தீர்” என்றார். நம்முடைய விலையேறப்பெற்ற நண்பர், சகோதரன் லியோ மெர்சியர் இங்குள்ளார். ஒலிப்பதிவு செய்யும் பையன், ''ஆம் கிட்டத்தட்ட ஐந்து முறை பேசியுள்ளீர்'' என்றார். எனவே நான்-நான் அதைக் கொஞ்சம் மாற்றிக்கொண்டேன். கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்பதை பிரசங்கிப்பதற்குப் பதிலாக தேவனுடைய சுற்றப்பட்ட வெகுமதி என்ற பொருளின் பேரில் இன்றிரவு நான் பேச விரும்புகிறேன். 8இப்பொழுது ஒரு வேத வாசிப்பிற்காக, பரிசுத்த மத்தேயு 2-ம் அதிகாரம், பரிசுத்த மத்தேயுவினுடைய சுவிசேஷம் 2-ம் அதிகாரத்திலிருந்து வாசிக்க விரும்புகிறேன். ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள். ஏரோதுராஜா அதைக் கேட்ட பொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள். அவன் பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர் எல்லோரையும் கூடிவரச் செய்து : கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று அவர்களிடத்தில் விசாரித்தான். அதற்கு அவர்கள் : யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே பிறப்பார்; அதேனென்றால்; யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப் பட்டிருக்கிறது என்றார்கள். அப்பொழுது ஏரோது , சாஸ்திரிகளை இரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து; நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்; நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்து கொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான். ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்கு மேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது. அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்து கொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும், தூபவர்க்கத்தையும், வெள்ளைப்போளத்தையும், அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள். பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போக வேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள். 9இப்பொழுது இன்றிரவு நான் அங்கிருந்து ஒரு பொருளை எடுக்க விரும்புகிறேன். அதாவது அங்கிருந்தல்ல, ஆனால் பரிசுத்த லூக்கா 2:7-ல் உள்ள அதே சம்பவத்திலிருந்து எடுக்க விரும்புகிறேன். அவள் தன் முதற்பேரான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். 10ஜெப வார்த்தைக்காக நாம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. பரிசுத்தமும் கிருபையுமுள்ள தேவனே, இந்த உலகம் எப்போதும் அறிந்திருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை , அந்த மகத்தான வெகுமதியை எங்களுக்கு அளித்தவரே, இந்த அற்புதமான வெகுமதிக்காக, உம்மண்டை இன்றிரவு நாங்கள் எங்களுடைய இருதயத்தின் ஆழ்ந்த வந்தனைகளோடும், எங்கள் உள்ளிந்திரியங்களிலிருந்து நன்றி கூறுதலை வெளிப்படுத்திக் கூறவும், உம்மண்டை தாழ்மையாய் வருகிறோம். நாங்கள் திரும்ப அளிக்க ஒன்று மற்றவர்களாய் இருக்கிறோம். ''வருத்தப்பட்டுப் பாரஞ் சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்கள் பாரங்களையும், பாவங்களையும் ஏற்றுக் கொண்டு, உங்களை விடுதலையாக்குவேன்“ என்று நீர் கேட்டுக் கொண்டது மிகவும் சிறியதாக இருந்தது. ஓ, என்னே ஒரு பரிமாற்றம்! எங்கள் பிதாவே, உம்மையல்லாமல் வேறொருவரும் அதை செய்திருக்க முடியாது. நீர் எங்களுக்காக அதை செய்திருக்கின்றபடியால் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர் எங்களுடைய பாரங் களையும், பாவங்களையும் எடுத்துக்கொண்டு, அதற்குப் பதிலாக சந்தோஷத்தையும், சமாதானத்தையும் எங்களுக்குக் கொடுக்கிறீர் என்பதற்கு நாங்கள் இந்த வேளையில் சாட்சிகளாய் இருக்கிறோம். கர்த்தாவே, நாங்கள் இந்த உள்ளார்ந்த, கிறிஸ்தவ அனுபவத்திற் காகவும், கிறிஸ்மஸுக்காகவும் எங்கள் இருதயங்களில் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். நாங்கள் இதற்காக மிகுந்த மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கிறோம். அந்த நாளின் அவருடைய அணுகுமுறையில் இருந்ததைப் போன்ற அடையாளங்கள் மீண்டும் தோன்றுவதை நாங்கள் காண்கையில், நாங்கள் முடிவின் நாளிலே ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். நாங்கள் உம்முடைய சமூகத்தில் எங்கள் இருதயங்களை தாழ்த்துகிறோம். ஓ, மகத்தான பிரபுவே, உம்முடைய ஆவியே எங்கள் இருதயங்களிலும், எங்கள் ஜீவியங் களிலும் மேலான ஆளுகை செய்வதாக. உலகம் இப்பொழுது சந்தித்துக் கொண்டிருக்கிற இந்த பெரிய இருண்ட வேளையில், நாங்கள் உம்முடைய ஊழியக்காரர்களாயிருக்கும்படி உட்புறத்தி லிருந்து வெளிப்புறம் வரை எங்களை பெலப்படுத்தும். கர்த்தாவே, பரிசுத்த ஆவியானவர் உம்முடைய வார்த்தையின் வாசிப்பிலிருந்து பொருத்தமாக சேர்த்து, காத்துக் கொண்டிருக்கும் உம்முடைய ஜனங்களுக்கு ஒரு கிறிஸ்மஸ் செய்தியை கொண்டு வருகையில், அது போதுமானதாய் இருக்க வேண்டும் என்ற இந்த ஒரே நோக்கத்திற்காகவே இதை நாங்கள் உம்மண்டை ஒப்புவிக்கிறோம். நாங்கள் உம்பேரில் காத்துக் கொண்டிருக்கிறோம். கர்த்தாவே, பேசப்போகும் உதடுகளையும், கேட்கவிருக்கும் செவிகளையும் விருத்தசேதனம் செய்யும். புறப்பட்டுச் செல்லுகிற வார்த்தையானது எங்களுக்கு கர்த்தராகிய இயேசுவின் மேலான அறிவைக் கொண்டுவரும்படியாய், அதில் அதிகாரத்தையும், ஜீவனையும் வையும். நாங்கள் இதை அவருடைய நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 11இங்கே குறிப்பிடும்படியாய் அநேக வேத வாக்கியங்களை எழுதி வைத்திருக்கிறேன். நேற்றைய தினம் நான் அதை கேள்விப் படுகையில் ஆச்சரியமடைந்தேன். வர்த்தக உலகம் , ''ஒரு பெரிய கிறிஸ்மஸ்' என்றழைக்கிறதை செய்தித்தாளில் கண்டு அறிந்து கொண்டேன். அதில் அநேக ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, அநேக ஆண்டுகளாக செலவழிக்கப்பட்டதைக் காட்டிலும் இந்த முறை அதிகமாக செலவழிக்கப்பட்டது என்றிருந்தது. எருசலேமுக்குள்ளே கூட்டங்கள் குவிந்திருந்தன, எப்படியாய் அது ஒரு சிறிய சமாதான வேளையாய் யூதர்களுக்கும் அரபியர்களுக்கும் இடையில் இருந்தது, அதாவது அவர்கள் ஒருவிதமாய் தங்களுடைய உணர்வை விட்டுக் கொடுத்து, யாத்திரீகர்கள் இந்த கிறிஸ்மஸ் பருவத்தில் மீண்டுமாய் நகரத்திற்குள் வருவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். பெத்லகேம், ஏன் இந்த பட்டிணமே எப்போதும் தெரிந்து கொள்ளப்பட்டது என்று நான் அடிக்கடி வியந்திருக்கிறேன். 12சற்று நேரத்திற்கு முன்னர், சிறு நபரும், அவருடைய மனைவியும் பிள்ளைகளுமாய், அந்த குடும்பத்தினர் பாடினர். அந்த சிறு பெண்ணை நான் கவனித்து ஆச்சரியமடைந்தேன். எப்படியாய் அவள் தான் வாசித்துக் கொண்டிருந்த ஒருவிதமான நரம்பியைக் கருவியில் நேரத்தை தவறாமல் கவனித்து வாசித்துக் கொண்டிருந்தாள். மேலும் அந்த சிறுபையன் ஒரு குழந்தையாய் இருந்தபோதிலும் வெறுமனே நேரத்தில் தவறாது கவனித்து ...... அதுமட்டுமன்றி, இந்த நரம்பிசைக் கருவியை பின்தொடர்ந்து பாடினான். அது ஒரு ஆதியாழ் என்றே அழைக்கப்பட்டது என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது, ஆகையால் நான் ....... 13பெத்லகேமைக் குறித்து சிந்திக்கையில், இராஜாதி ராஜாவின் பிறப்பிடமாய் இருக்கும்படி அது தெரிந்து கொள்ளப்பட இதில் என்ன சம்பவித்தது ? பெத்லகேம் ஒரு சிறிய ஸ்தலம், மிகச் சிறிய பட்டிணம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மகத்தான சம்பவத்திற்கு, சீலோவைப் போன்ற மிகுதியான பக்தியான ஸ்தலத்தை, அதற்காக ஏன் தேவன் தெரிந்து கொள்ளவில்லையென்று நான் அடிக்கடி வியந்திருக்கிறேன். யோர்தானைக் கடந்த பிறகு கூடாரம் அமைத்து, உடன்படிக்கைப் பெட்டி வைக்கப்பட்ட முதல் இடம் சீலோதான். அல்லாவிட்டால் மற்றொரு மகத்தான மதசம்பந்தமான பட்டணமான கில்கால்; அல்லாவிட்டால் சீயோன், மலையின் மேலுள்ள மற்றொரு மகத்தான பக்திமயமான பட்டிணம்; அல்லாவிட்டால் பெருமைக்கு காரணமாக கூறப்படுகின்ற தலைநகரான எருசலேம், காலத்தினூடாக வந்த பரிசுத்தவான்களையும், எல்லா சாதுரியவான்களையும் கொண்டது. தேவன் எருசலேமை தெரிந்து கொள்ளாதது ஏன்? 14ஏன் தேவன் பெத்லகேமை தெரிந்து கொண்டார்? ஒருக்கால் அவர் வேறுவிதமாக ஒரு ஸ்தலத்தை தெரிந்து கொண்டிருக்கலாம், வரப்போகிறதான ஒரு ஆபத்தான நிலையில் தம்முடைய குமாரனை பாதுகாத்திருக்கும் பெரிய அடைக்கலப் பட்டணங்களில் ஒன்றை தெரிந்து கொண்டிருக்கலாம் என்பது போல காணப்படலாம். ராமோத், கீலேயாத் போன்ற அடைக்கலப் பட்டணங்கள். ஜனங்கள் இந்த துருகங்களுக்குள்ளாக ஓடும்படி யாக கட்டப்பட்டிருந்த பெரிய ஒரு அடைக்கலமாய் இருந்தது. காதேஸ் மற்றொரு பெரிய அடைக்கலப்பட்டணமாய் இருந்தது. எபிரோன் மற்றொரு பெரிய அடைக்கலப்பட்டணமாகும். ஏன் தேவன் இந்த பெரிய பட்டணங்களை தெரிந்து கொள்ளாமல், சிறிய பெத்லகேமைத் தெரிந்து கொண்டார்? அவைகள் மகத்தான பெயர்களையும், அதிகப்படியான ஆவிக்குரிய பின்னணிகளையும் உடையவைகளாய் இருந்தன. ஆனால் தேவன் காரியங்களைச் செய்வதற்கான ஒரு வழியை, காரியங்களைப் பற்றிய தம்முடைய சொந்த வழியை உடையவராயிருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் அதை செய்கிறதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். புரிகின்றதா? சில நேரங்களில் அவர் ஒரு ஆவிக்குரிய பின்னணியே இல்லாத காரியங்களை எடுத்துக் கொள்கிறார். அல்லாவிடில் எந்த பின்னணியுமேயில்லாததை எடுத்துக் கொள்கிறார். அந்த காரணத்தினால்தான் அவர் - தேவனாய் இருக்கிறார். அவரால் ஒன்றுமேயில்லாததிலிருந்து ஏதோ ஒன்றை எடுக்க முடியும். அதிலிருந்து ஏதோ ஒன்றை உருவாக்க முடியும். அது, அதுதான் அவரை தேவனாக்குகிறது. அதுவே நாம் அவரை நேசிக்கும்படி செய்கிறது. அதுவே ஏழை ஜனங்களாகிய நாம் அவரை பாராட்டும்படி செய்கிறது. ஏனென்றால் ஏழைகளாகிய நாம் எந்த பின்னணியுமே இல்லாதிருந்தும் கூட, அவர் நம்மை தம்முடைய கட்டுப்பாட்டின் கீழ் எப்போதும் வைத்திருப்பாரானால், தேவனால் இன்னமும் நம்மைக் கொண்டு பெரிய காரியங்களைச் செய்ய முடியும். 15யோசுவா, உண்மையிலே இஸ்ரவேல் புத்திரரை நடத்திச் சென்று நிலங்களை பங்கிட்டுக் கொடுத்த ஒருவனாய் இருந்தான். யூதேயா தேசத்து வடக்கு பாகத்தின் மேல் மூலையில் உள்ள பெத்லகேம் என்னும் இந்தப் பகுதி இந்த யூதா கோத்திரத்தாருக்கு கொடுக்கப்பட்டது. ஒரு சிறுகோடு சிறிய தீபகற்பகத்திற்கு செல்வது போன்றே உள்ளது. இந்த ஸ்தலத்தில், இந்த பிரதேசத்தில், இந்த மகத்தான பிரதேசத்தில், இது கோதுமை விளையும் வடக்குப் பிரதேசமாய் இருக்கிறது. அங்கே கோதுமைக் கதிர் இருந்தது. அங்கு அவர்கள் அதிகமாக கோதுமையையும், வாற்கோதுமையையும் பயிரிடுகிறார்கள். 16காலேபின் குமாரர்களில் ஒருவன் இந்த பட்டிணத்தை ஸ்தாபித்து உருவாக்கினான். அவனுடைய பெயர் சல்மா. அவன் காலேபின் குமாரர்களில் ஒருவனாக இருந்தான். நீங்கள் அதைக் காணவேண்டுமானால் நானே அநேக வேத வாக்கியங்களை விட்டு விட்டு சென்று கொண்டிருக்கிறேன். ஆனால் சில சகோதரர்கள் அவைகளைக் குறித்துக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன். 1 நாளாகமம் 2:15 ........ நீங்கள் மத்தேயு 1: 5-லும் கூட அதை கண்டறியலாம். அங்கே அவன் இந்த மகத்தான பட்டிணத்தை ஸ்தாபித்து உருவாக்கினான். அது ஒரு சிறிய பட்டிணமாய் இருந்தது. ஆனால் இந்த பட்டிணத்திலே மகத்தான காரியங்கள் சம்பவித்ததன் காரணமாக அது மகத்தானதாக உள்ளது. நான் எப்பொழுதுமே கூறினது போன்றே, அது மகத்தான சபை அல்ல; அது மகத்தான தேவன் அந்த சபையில் இருக்கின்றதாய் இருக்கிறது. அது மகத்தான , பரிசுத்த பர்வதம் அல்ல; அது மகத்தான பரிசுத்த ஆவியானவர் அந்த பர்வதத்தின் மேல் இருந்ததாக இருக்கிறது. அது பரிசுத்த மனிதன் அல்ல; அது பரிசுத்த ஆவி அந்த மனிதனுக்குள் இருப்பதாக இருக்கிறது. புரிகின்றதா? அந்த விதமாகத்தான் இந்த பட்டிணமும் இருந்தது. அது வளர்ச்சியில் சிறியதாகவும், அதிகமாய் பள்ளத்தாக்கிலும், அதிகப் படியாய் வெளிப்படையாய் காணக்கூடாததாகவும் இருந்தது. அதனுடைய ஜனத்தொகை குறைவுள்ளதாக இருந்தது. இன்றைக்கும் அதேவண்ணமாகவே இருக்கிறது. ஆனால் தேவன் ஏதோ ஒன்றைச் செய்யும்படி அதை தெரிந்து கொண்ட காரணத்தினால் அது இருந்தது. அதைத்தான் நான் விரும்புகிறேன். ஏதோ ஒன்றை தேவன் தெரிந்து கொள்கிறார். தேவன் அதை தெரிந்து கொண்டது முதற்கொண்டு, ஜனங்களுக்கு அது எந்த விதமாக காணப்பட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை. 17ராகாப் வேசி, நாம் யாவரும் அதை நன்கு அறிந்துள்ளோம். அவள் ஒரு - ஒரு வாலிப ஸ்திரீயாக இருந்து, ஒரு அஞ்ஞான தாய், தகப்பனால் வீதியிலே துரத்திவிடப்பட்டு, அவள் அழகாய் இருந்த காரணத்தினால் வீதியிலே வீசியெறியப்பட்டு, விபச்சாரத்தினால் அவர்களுக்கு வருமானத்தைக் கொண்டுவர வேண்டியவளாய் இருந்தாள். இந்த நடத்தை கெட்ட ஸ்திரீ வீதியிலே துரத்தப்பட்டிருந்தும், அவள் ஜெபத்திற்கு பதிலளித்த தேவன் ஒருவர் இருந்தார் என்பதை கேள்விப்பட்டிருந்தாள். அவளுக்குக் கிடைத்த முதல் சந்தர்ப்பத்திலேயே அந்த தேவனை ஏற்றுக்கொள்ள அல்லது அவருக்காக ஏதோ ஒன்றைச் செய்ய வாஞ்சித்தாள். அவள் அதை செய்தாள். தேவன் அவளுடைய ஜீவனை காத்தார், அவளுடைய தாயையும், தகப்பனையும், அவளுடைய குடும்பத்தையும் காப்பாற்றினார். அவள் இஸ்ரவேலின் இராணுவத்தில் இருந்த ஒரு தளபதியோடே காதல் கொண்டாள், நாம் அதை சரித்திரத்தில் கண்டறிகிறோம். இந்த தளபதியையே மணந்து கொண்டாள். அவர்களுடைய மண முன்னிட்ட காதல் வேட்டம் அற்புதமாய் இருந்தது. முடிவிலே அவர்கள் குடியமைத்து பெத்லகேமிலே வாழ்ந்தனர். 18இந்த தளபதியின் மூலமாக அவள் உலகிற்கு ஒரு-ஒரு குமாரனை பிறப்பித்தாள். அந்த குமாரனுடைய ........ இப்பொழுது அந்த தளபதியினுடைய பெயரை என்னால் ஞாபகத்திற்கு கொண்டு வரமுடியவில்லை. நான் முயற்சித்துக் கொண்டிருந்தேன். அவனுடைய பெயரை இங்கே கீழே எழுதி வைத்திருந்தேன் என்று எண்ணினேன். ஆனால் நான் எழுதி வைக்கவில்லை. நான் அவளுடைய குமாரனின் பெயரை எழுதி வைத்திருக்கிறேன். ஆனால் அது - அது இந்த தளபதிக்குப் பிறந்த ராகாபின் குமாரனாய் இருந்தது. அவனுடைய பெயர் சல்மோன். தாவீதின் குமாரனாய், ஆலயத்தைக் கட்டின சாலமோன் அல்ல. ஆனால் மற்றொரு சல்மோன். இந்த சல்மோன் போவாஸ் எனும் பெயர் கொண்ட ஒரு குமாரனை பிறப்பித்தான். போவாஸ், ஓ, போவாஸ், ரூத்தின் அற்புதமான சம்பவத்தை நாம் யாவரும் நன்கு அறிந்துள்ளோம். 19இப்பொழுது நீங்கள் பாருங்கள். இந்த வேசி ஒரு புறஜாதியாக இருந்தாள், அவள் நம்முடைய கர்த்தராகிய இயேசுவிற்கு மூத்த பாட்டியாக இருந்தாள். போவாஸ், அவளுடைய பேரனும் கூட முன்வந்து மோவாபியளான ரூத்தை திருமணம் செய்து கொண்டான், அவனும் கூட ஒரு புறஜாதியாளையே மணந்து கொண்டான். பூமிக்குரிய பேச்சில் அது இயேசுவையும் கூட புறஜாதியின் பாகமாக ஆக்கினது. அப்பொழுது அவர்கள் தங்களுடைய பிள்ளையை பிறப்பித்தனர், அவனுடைய பெயர் ஓபேத் ஆகும். ஒபேத்திற்கு ஒரு குமாரன் இருந்தான், அவனுடைய பெயர் ஈசாய். ஈசாய் தாவீது எனும் பெயர் கொண்ட ஒரு குமாரனை உடையவனாய் இருந்தான். இவை யாவுமே சிறிய பெத்லகேமிலே சம்பவித்தன. அது என்ன? பெரிய ஆவிக்குரிய மனிதர்கள் அல்லது ஆவிக்குரிய மனிதர்கள் என்றழைக்கப்பட்ட வர்கள் கண்டு கொள்ளாமல் விட்ட அவருடைய பின்னணி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறு. 20சாமுவேல் தீர்க்கதரிசி தாவீதை இஸ்ரவேல் மீது இராஜாவாக இருக்கும்படி அபிஷேகித்திருந்தது அதே இடமாய், சரியாக பெத்லகேமாகவே இருந்தது. “தாவீதின் குமாரன்” என்ற ஒரு மகத்தான குமாரன் தாவீதினூடாக தோன்றினார். அந்த குமாரன் பட்டிணத்தின் மேற்குப்புறத்தில் உள்ள ஒரு குன்றின் ஓரத்தில் உள்ள ஒரு சிறிய தொழுவத்தின் முன்னணையில் பிறந்தார். அங்கே அந்த குன்றின் மீது தேவ தூதர்கள் தங்களுடைய முதல் கிறிஸ்மஸ் கீதத்தைப் பாடினர். பெத்லகேம் என்னும் வார்த்தையை நாம் பிரித்துப் பார்ப்போம். பெத் என்பது “வீடு” என்பதை குறிக்கிறது. ஏல் என்பது “ தேவன் ” என்பதை குறிக்கிறது. ஏலாம் என்பது “அப்பம்” என்பதை குறிக்கிறது. “தேவனுடைய அப்பத்தின் வீடு”. ஆகையால் பெத்லகேமிலிருந்து வருகிற ஜீவ அப்பம் என்பதற்கு அது எவ்வளவு பொருத்தமாயுள்ளது. “தேவனுடைய அப்பத்தின் வீடு”. ஓ! அது ஒரு அழகான நிகழ்ச்சி. 21அது இருண்டதற்கு சற்று பின்பாக இருந்திருக்க வேண்டும். சூரியன் அஸ்தமித்திருந்தது. நட்சத்திரங்கள் அநேகமாக வெளியில் இருந்திருக்கலாம், வெளிச்சம் மறைந்து கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக இருந்திருக்கலாம். அந்த சிறிய கழுதை தன்னுடைய சிறிய களைப்படைந்த பாதத்தோடு குன்றின் பின்புறம், பெத்லகேமின் மேற்கே சென்று கொண்டிருந்தது. அது தன்னுடைய குளம்புகளை அங்கே அடியெடுத்து வைக்கும்போது கவனங் கொண்டிருந்தது. ஏனெனில் அதனுடைய சுமை விலையேறப் பெற்றதாய் இருந்தது . யோசேப்பு அதை சாந்தமாக நடத்திக் கொண்டே சென்றான். காரணம் அந்த மூவர் கொண்ட சிறிய குழுவானது குன்றின் மேலே தொடங்கி அல்லது நாள் முழுக்க பயணம் செய்து, கீழாக நாசரேத்துக்கு வந்து கொண்டிருந்தது. அவள் எந்த நேரத்திலுமே தாயாகப் போவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். ஒருக்கால் பிரசவ நேரம் கடந்திருக்கலாம். 22ஆனால் எல்லா காரியங்களுமே தேவனால் முன் குறிக்கப் பட்டு, அவரை நேசிக்கிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது. அந்த நாளில் ஒரு இரக்கமற்ற ராஜா கொலை வெறி கொண்ட ஏரோது இருக்க வேண்டும் என்பது தேவனால் நியமனம் செய்யப்பட்டதாயிருந்தது. தேவன் அதைக் குறித்து அறிந்திருந்தார். தேவன் வரிகளைக் குறித்தும், ஒரு சில நாட்களில் தன்னுடைய முதற்பேரான குமாரனை பிரசவிக்க கிட்டத்தட்ட ஆயத்தமாயிருந்த அந்த ஏழைத்தாயின் மீதும் எப்படியாய் இரக்கமேயில்லாத சிந்தனைகளைக் கொண்டிருந்த இந்த கொடுமையான அரசாங்கத்தைக் குறித்தும் அறிந்திருந்தார். ஆனால் அவன், ''அவர்கள் எல்லோரும் தங்களுடைய சொந்த பிறப்பிடத்திற்கு வந்து வரி செலுத்த வேண்டும். அவள் எந்த நிலையில் இருந்தாலும் பொருட்படுத்தக்கூடாது. எப்படியாவது அவள் வந்து சேர வேண்டும்'' என்று கட்டளையிட்டிருந்தான். தேவன் அதைக் குறித்து எல்லாவற்றையும் அறிந்திருந்தார். அவர் எல்லாக் காரியங்களையுமே முன்னறிந்திருந்தார். அவர் - அவர் எல்லா காரியங்களையும் அறிந்திருக்கிறார். பாருங்கள், அவர் சகலத்தையும் நன்மைக்கு ஏதுவாக செய்கிறார். 23இந்த மூவரும் குன்றிலிருந்து வருகின்றபோது, அவர்கள் அதைக் குறித்த எந்த படபடப்பும் கொண்டிருக்கவில்லை. முடிவிலே அந்த சிறிய கழுதையின் சுமையின் காரணமாக மிகுந்த ஏங்கலுக்குப்பின், அவர்கள் குன்றின் உச்சியில் நிற்கப் போவதை என்னால் காணமுடிகிறது. அங்கே மேற்கு பாகத்திலிருந்து வருகின்றனர். நாசரேத்திலிருந்து வந்துள்ளனர். அவர்கள் குன்றின் உச்சியில் நின்ற பிறகு, அங்கிருந்து பள்ளத்தாக்கிலே எங்கே சிறிய பெத்லகேம் உள்ளது என்பதை நோக்கிப் பார்க்கிறார்கள். அநேக தீவட்டிகள் எரிந்து கொண்டிருந்தன. கலிலேயா முழுவதிலுமிருந்து அநேக ஜனங்கள், தேசம் முழுவதுமே ரோம அரசாங்கத்தின் குடிமதிப்பெழுதும்படிக்கு தங்களுடைய பிறப்பிடமான பெத்லகேமிற்கு வந்து கூடியிருந்தனர். என்ன நிலைமைகள் என்பதைக் குறித்துக் கவலைப்படாமல், அவர்கள் வீதி நெடுக வியாதியுற்றோரும், ஆதரவற்றோரும், படுக்கையாய் கிடப்போரும், குஷ்டரோகிகளும், புற்றுநோயாளிகளும், தரித்திரரும், முடமானவர்களும், நொண்டிகளும், குருடர்களுமாய் பரவிக் கிடந்தனர். அது அரசாங்க உத்தரவாக இருந்த காரணத்தால் எல்லோருமே வரவேண்டியதாக இருந்தது. அதற்குப் பின்னே ஏரோது இருந்தபடியால், அது செய்யப்பட வேண்டியதாக இருந்தது. 24நம்முடைய சிறிய குழு அந்த குன்றின் உச்சியில் நின்ற காரணத்தால் அங்கே ஒரு பெரிய கற்பாறை இருந்திருக்க வேண்டும். யோசேப்பு தன்னுடைய கரங்களில் மிருதுவாக அவளைப் பிடித்து, அந்த சிறிய கழுதையிலிருந்து அவளை இறக்க உதவி செய்து, அந்த கற்பாறையின் மேல்புறத்தில் அவளை அமரச் செய்வதை என்னால் காணமுடிகிறது. அந்த சிறிய கழுதையோ தன்னுடைய சுவாசத்திற்காக பெருமூச்சு விட்டது. பின்னர் யோசேப்பு ஒரு சில அடிகள் முன்னோக்கி நடந்து சென்றபோது, சிறிய பெத்லகேமை கீழே நோக்கிப் பார்த்து, தெருக்களில் ஜனங்கள் கூட்டமாக இருப்பதையும், கூச்சலிடுவதையும், வீதிகளில் தீவட்டிகள் எரிந்து கொண்டிருப்பதையும், ஜனங்களின் கூக்குரலையும் கண்டான்.அவர்கள் வாசல்களிலும், முற்றங்களிலும், நகர வாயில்களின் வெளிப்புறங்களிலெல்லாம் படுத்துக் கொண்டிருந்தனர். என்ன ஒரு காட்சியாய் இருந்திருக்க வேண்டும். 25யோசேப்போ இதைப் போன்ற ஏதோ ஒன்றை கூறியிருக்க வேண்டும். “மரியாளே, அன்பே சற்று சிந்தித்துப்பார். வடபாகத்திற்கு அப்பாலுள்ள அப்பட்டிணத்தில் தான், அங்குதான் மோவாபிய ஸ்திரீயான ரூத் போவாஸின் வயல்களிலே பொறுக்கினாள். அதோ, அதற்கு அப்பால், தூரத்தில் உள்ள மலையில் அங்குதான் தாவீது தன்னுடைய கவணைக் கொண்டு சிங்கத்தைக் கொன்று, அதனுடைய வாயிலிருந்து ஆட்டை இழுத்தான். அங்குதான் யோசுவா தன்னுடைய மின்னும் பட்டயத் தோடு நின்று, தைரியமுள்ள நம்முடைய ஜனங்களின் மாவீரனாய், நிலங்களை பங்கிட்டு , இந்த பரம்பரை உடைமையை யூதா கோத்திரத்தாருக்கு கொடுத்திருக்க வேண்டும். இனிய இருதயமே, நாமும் அந்த வழி மரபினராகவே உள்ளோம்.'' அவன் பல்வேறு பட்ட காரியங்களையும், அவைகள் சம்பவித்ததையுங் குறித்து எப்படியாக அவளுக்கு விளக்கிக் கூறிக்கொண்டிருந்திருக்க வேண்டும். 26அப்பொழுது அவனுக்குப் பின்னாலிருந்து எந்த சத்தமும் கேட்காததினால், அவள் அப்படியே கற்பாறையின் மேல் அமர்ந்து கொண்டுதான் இருக்கிறாளா என்று பார்க்க அவன் திரும்பிப் பார்த்திருக்க வேண்டும். அவன் திரும்பினபோது, அவளுடைய அழகான முகம் ஆகாயத்தை நோக்கியிருப்பதை அவன் கண்டான். அவனோ ஒன்றையுமே கேட்டுக் கொள்ளவில்லை. ஏனென்றால் நட்சத்திரத்தின் பிரதிபலிப்பு அவளுடைய கண்களினூடாக இருந்தது. அவள் ஏதோ ஒன்றை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதை அவன் அறிந்து கொண்டான். அவள் அவனை நோக்கிப் பார்த்து, “யோசேப்பே, அதோ தொங்கிக் கொண்டிருக்கிற நட்சத்திரத்தை நீர் கவனித்தீரா?” என்றாள். அவன் நோக்கிப் பார்த்தபொழுது, ஆச்சரியப்பட்டு, “அன்பே, இதற்கு முன் நான் அதை கவனிக்கவேயில்லை” என்றான். “நல்லது, சூரியன் அஸ்தமித்தது முதற்கொண்டிருந்தே அது நம்மைத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. நான் அதை கவனித்து வருகிறேன். அது ஏதோ ஒன்றைக் குறிக்க வேண்டும். ஏனென்றால், நான் மிக அற்புதமான உணர்வை உடையவளாயிருக்கிறேன்.'' தேவன் அதைப் போன்ற காரியங்களைச் செய்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். சில நேரங்களில், அவருடைய ஜனங்களுக்காக, நமக்காக ஒரு வெளிச்சத்தைக் காட்டுகிறார். அல்லாவிடில் அவர் காட்சியில் இருக்கிறார் என்றும், அவர் சமீபமாயிருக்கிறார் என்றும் நாம் அறிந்துகொள்ளும்படியான ஏதோ வழியைக் காட்டுகிறார். உலகம் என்ன கூறினாலும் அல்லது என்ன செய்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. அவர் இன்னமும் அங்கிருக்கிறார், எல்லா காரியமும் சரியாக இருக்கும். நாம் அதை உணரும்படியாக அவர் பரிசுத்த ஆவியினால் திரும்பவும் அதை சாட்சி பகருகிறார். 27யோசேப்பு இதைப் போன்ற ஏதோ ஒன்றை கூறியிருப்பான். “மரியாளே, என்னவென்று உனக்குத் தெரியுமா? என்னுடைய ஜீவியம் முழுவதிலுமே நான் இதுவரை இவ்வளவு சந்தோஷமா யிருந்ததேயில்லை. நான் ரோம அரசாங்கத்தால் துரத்தப் பட்டிருந்தும், இப்பொழுது நான் மிகவும் சந்தோஷமாய் இருக்கின்றதைப் போன்று ஒருபோதும் இருந்ததேயில்லை. ஏன் என்பதையும் நான் அறியேன். இன்றிரவு அந்த சிறு பட்டிணத்தின் மேலே ஒரு புனிதத்தன்மை உள்ளதுபோன்று தென்படுகிறது. முன்னர் நம்முடைய இளம் வாலிபப்பிராயத்தில், மற்றும் பள்ளிப் பருவத்தில், நாம் பையன்களாகவும், பெண்களாகவும் இருந்தபோது அங்குதான் நாம் திரிந்தோம்.'' 28கிழக்கிற்கு போகும் வழியில் அங்கிருந்து அநேக நூற்றுக் கணக்கான மைல்கள் தூரத்தில், சாஸ்திரிகள் ஏற்கனவே தங்களுடைய பாதையில் இருந்தனர். அவர்கள் அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவர் உலகிற்கு அனுப்பிக்கொண்டிருந்த தான தேவனுடைய சிறிய வெகுமதி பொட்டலத்தை ஆராதிக்க வந்து கொண்டிருந்தனர். அப்பொழுதிலிருந்து சற்று நேரத்தில், உலகமானது தான் எப்போதும் பெற்றுக்கொண்டதிலேயே மகத்தான வெகுமதியை ஒரு சிறிய சுற்றப்பட்ட பொட்டலத்தை பெற்றுக் கொள்ளப் போவதாக இருந்தது. ஒரு சிறிய, முழு உலகத்திலுமே முதன் முதலாக சுற்றப்பட்டிருந்த சிறிய கிறிஸ்மஸ் பொட்டலம். தேவன் அதை மேலே சுற்றியிருந்தார். நான் என் சிந்தையில் வெளிப்படுகிற இதை கூற விரும்புகிறேன். மானிட மாம்சத்தில் எப்போதும் சுற்றப்பட்டிருந்ததிலேயே மகத்தான காரியம் அதில் சுற்றப் பட்டிருந்தது. தேவன் தாமே தம்மையே ஒரு கிறிஸ்மஸ் பொட்டலத்திற்குள்ளாக சுற்றிக்கொண்டு, அதை உலகிற்கு அனுப்பினார். அவர்கள் ஏன் அதை மறுத்தனர்? ஏன் அவர்களால் அதை காணமுடியாமற்போயிற்று? ஏன் அவர்கள் அதை புறக்கணித்தனர் ? ஏன் அது அவர்கள் விரும்பாததாக இருக்கிறது? இன்றிரவும் அவர்கள் அதை விரும்பாததும் அதே காரணம் தான். வழக்கமாக அவர்களுக்கு வெகுமதிகள் கொடுக்கப்படுகின்ற விதத்தில் அது அவர்களுக்கு கொடுக்கப்பட வில்லை. வழக்கமாக ஜனங்கள் வெகுமதிகளை பெற்றுக் கொண்டு வருகிற விதத்தில் அது அவர்களுக்கு கொடுக்கப்படாத காரணத்தினால், அந்தக் காரணத்தினால் அது இன்னமும், இன்றைக்கும் புறக்கணிக்கப்படுகின்றது. ஆனால் தேவனே தம்முடைய சொந்த பொட்டலத்தைச் சுற்றுகிறார். அதைச் செய்ய அவருக்கு உரிமை உண்டு. அதை கொடுக்கின்ற ஒருவர் அவரே. அவர் அதைச் சுற்ற விரும்புகிற எந்த விதத்திலும் அதைச் சுற்ற அவருக்கு உரிமை உண்டு. அது எப்படியிருந்தாலும் எந்த வித்தியாசத்தையும் உண்டு பண்ணுகிற தில்லை. அதைச் செய்ய உரிமை உடையவராய் இருக்கிறார். ஏனென்றால், அந்த வெகுமதியை அளிக்கின்ற ஒருவராய் அவர் இருக்கிறார். 29அது சுற்றப்பட்டிருந்த விதத்தில் அதைப் பெற்றுக் கொள்வது அவர்களுக்கான வழக்கமாய் அப்பொழுது இல்லாதிருந்தது. அதைக் குறித்த மற்றொரு காரியமாய், காரணமாய் இருந்தது. அவர்கள் ஏதோ காரியத்தை, ஒரு வெகுமதி வருவதை, அது அக்கினிமயமான குதிரைகளை ஓட்டிவரும் ஒரு மெய்காப்பு தூதனைக் கொண்டு இரதத்தில் கீழே இறங்கிவரும் என்று எதிர் நோக்கிக் கொண்டிருந்தனர். ஆனால் அது வந்த போது, முன்னணையில் பிறந்த ஒரு சிறு குழந்தையாயும், “நான் இந்த உலகிற்கு ஒரு மேம்பட்ட அடையாளத்தைக் கொடுப்பேன்” என்று வேதம் உரைத்ததை அவர்கள் அறிந்திருந்ததாயும் இருந்தது. ஒருநாள் அவர்கள் ஒரு அடையாளத்தைக் கேட்டனர். அவர், “நான் அதை உங்களுக்குக் கொடுப்பேன், அது மேம்பட்ட அடையாளமாய் இருக்கும். காலங்களினூடாக வந்ததில் அதுவே கடைசியான ஒரு அடையாளமாக இருக்கும். ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி, ஒரு குழந்தையை, ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள். அதுதான் மேம்பட்ட அடையாளம். அந்த வெகுமதியைத்தான் நான் கொடுக்கப் போகிறேன்'' என்றார். ஆனால் அவர்கள் அதை எதிர்பார்த்துக் கொண்டிருந்த விதத்தில் அது வரவில்லை. எனவே அவர்கள் அதை புறக்கணித்தனர். 30இன்றிரவும் என் சகோதரனே, அது அவ்வண்ணமாகவே உள்ளது. ஜனங்கள் தேவனுடைய வெகுமதியானது வரவேண்டும் என்று விரும்புகிற வழியில் அது வருகின்றதில்லை. எனவே அவர்கள் அதை புறக்கணித்தனர். அவர்கள் அதை விரும்புகிற தில்லை. அவர்கள் சுற்ற விரும்புகிற விதமான பொருட்களினால் அது சுற்றப்பட்டிருக்க அவர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் அதன் பேரிலான பளபளப்பையே விரும்புகின்றனர். அவர்கள் மலர்களால் ஒப்பனை செய்யப்பட்ட ஒன்றை, நறுமணமூட்டப்பட்ட ஒன்றை, மின்னிக் கொண்டுள்ள ஒன்றை, முதல்தரமான ஏதோ ஒன்றையே விரும்புகிறார்கள். ஆனால் தேவன் அதைப் போன்று எல்லா நேரத்திலும் அதை அனுப்புகிறதில்லை. அவர் அதே வல்லமையில், அவர் அதை அனுப்ப விரும்புகிற வழியிலேயே அனுப்புகிறார். 31மற்றொரு காரியம், அது ஏழையினால் கொண்டு வரப்பட்டது. மரியாள், மார்த்தாள் - மார்த்தாள், சரியாகக் கூறினால், இல்லை ........... மரியாளும், யோசேப்பும் ஏழை ஜனங்களாய் இருந்தனர். அவர்கள் குடியானவர்களாய் இருந்தனர். அது ஏழையினால் கொண்டு வரப்பட்ட காரணத்தால் அவர்கள் அதை விரும்பவில்லை. இன்றைக்கும் அது அவ்வண்ணமாகவே உள்ளது. சபையின் இந்த மகத்தான வரமாகிய பரிசுத்த ஆவியானது ஏழ்மை யானவர்கள் மேலும், தாழ்மையானவர்கள் மேலும் விழுகிறபோது, ஐசுவரியவான்கள் அதை விரும்புகிறதில்லை. அவர்கள் தங்களை தாழ்த்திக்கொள்ள விரும்புகிறதில்லை. அவர்கள் அதனை தரத்தைக் கொண்டே விரும்புகிறார்கள். ஆனால் தேவன் அதை அனுப்புகிற விதத்தில் அவர்கள் அதை பெற்றுக் கொள்கிறதில்லை. அநேக ஜனங்கள் பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ள விரும்பு கிறார்கள். ஆனால் - ஆனால் அவர்கள் அதை விரும்புகிற விதத்தில் அதை அவர்கள் பெற்றுக்கொள்ள விரும்புகின்றனர். ஆனால் நீங்கள் அதை அந்த வழியில் பெற்றுக் கொள்ள முடியாது என்பதற்காக நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். தேவன் அதை உங்களுக்கு அனுப்புகிற வழியிலேயே நீங்கள் அதை பெற்றுக் கொள்ள வேண்டும். அதை பெற்றுக் கொள்ள நம்மை தாழ்த்த வேண்டும். 32அது மெல்லிய பஞ்சு நூல்களில் சுற்றப்பட்டிருக்கவில்லை. அது கந்தை துணிகளில் சுற்றப்பட்டிருந்தது. இயேசுவானவரும் அதே காரியத்தினால் சுற்றப்பட்டிருந்தார் என்று நான் போதிக்கப் பட்டேன். கிறிஸ்து தொழுவத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு காளையின் நுகத்தடியில் உள்ள கந்தையினால் சுற்றப்பட்டிருந்தார். அவர் கந்தைத் துணியில் சுற்றப்பட்டிருந்தார். காளையானது இழுத்துக் கொண்டு வரும்போது, அதன் மேலுள்ள உராய்வுக் காயங்களை துடைப்பதற்கு, காளையின் நுகத்தடியைச் சுற்றி ஒரு கந்தையை அவர்கள் அங்கே சுற்றி வைத்திருந்தனர். அவர்கள், அவர்களிடத்தில் அவருக்கான ஆடைகளே இல்லாதிருந்தது. அவர்கள் ...... ஓ, நான் அதைக் குறித்து சிந்திக்கும் பொழுது, அது கிட்டத்தட்ட என் இருதயத்தையே நொறுங்கச் செய்கிறது. வானங்களுக்கும், பூமிக்கும் சிருஷ்டிகரான இம்மானுவேலுக்காக ஆடைகளே இல்லாதிருந்தது. அவரைச் சுற்றுவதற்கு துணிகளே இல்லை. உழைக்கும் காளை தன்னுடைய கழுத்தினூடாக கொண்டிருந்த கந்தையினால் சுற்றப்பட வேண்டியதாய் இருந்தது. ஓ, என்ன ஒரு மேம்பட்ட அடையாளம்? 33அது உண்மையிலேயே ஜனங்களை கவர்ச்சிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். ஒரு குழந்தையைப் போல் சிறிய யெகோவா அழுதுகொண்டு, ஒரு பொட்டலத்தில் தேவன் மாம்சமானார். எல்லா இடத்தையும், காலத்தையும் நிரப்புகிற தேவன், ஒரு மூலக்கூறோ அல்லது ஒரு நட்சத்திரமோ , உலகமோ உண்டாவதற்கு முன்பிருந்தவர், அவர்தாமே ஒரு சிறு பொட்டலத்தில் சுற்றப்பட்டு ஒரு முன்னணையில் கிடத்தப்பட்டார். அங்கே தொழுவத்தில் ஆடு மாடுகளின் எருக்கள் இருந்தன. அந்த தொழுவத்திலே இந்த சிறு முன்னணையில் வைக்கோலின் மீது கிடத்தப்பட்டார். அங்கே ஒரு குழந்தையைப் போல யேகோவா அழுதுகொண்டு, படுத்துக் கிடந்தார். உங்களால் அதை கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? 34ஏன்? ஐஸ்வரியவான்கள் அதைப் போன்ற ஒன்றையும் விரும்புகிறதில்லை. மிகவும் தாழ்மையான எந்தக் காரியமும் அவர்களுடைய சொந்த சிந்தனைகளையே அசுசிப்படுத்திவிடும். ஒரு பெண்ணால், ஒரு சிறு நாட்டுப்புற பெண் என்று கருதப்பட்டவளால், அவளுக்கு அண்மையில் இருப்பவளால், ஒரு மூட மனிதாபிமானி யால் கொண்டு வரப்படும்; அநேகமாக தன்னுடைய மொழியின் முதல் எழுத்தை மட்டுமே அறிந்திருந்த ஒரு தச்சனால் கொண்டு வரப்பட்டது. எப்படி அவர்களால் புகழ்பெற்றோர்களின் கண்களை திருப்திபடுத்தக்கூடிய அல்லது ஏங்க வைக்கும் ஏதோ காரியத்தைக் கொண்டு வரமுடிந்தது? எப்படி அவர்களால் ஐஸ்வரியவான்களை இறுமாப்புள்ளவர்களை அல்லது அவர்களுடைய ஸ்தாபன நாட்களில் அவர்களை திருப்திப்படுத்தக் கூடிய அல்லது மகிழ்விக்கக் கூடியதுமான ஏதோ காரியத்தை உற்பத்தி செய்ய முடிந்தது? அவர்கள் அடிமட்டமாய் புறக்கணிக்கப்பட்டனர். 35அந்நாளில் மட்டுமல்ல, இந்நாளிலும் கூட அவ்வாறே உள்ளது. அவர்கள் மட்டாய் அதை புறக்கணிக்கிறார்கள். அவர்கள் விரும்புகிற விதத்தில் அது சுற்றப்பட்டு வருகிறதில்லை. அவர்கள், “அதில் ஒன்றுமேயில்லை” என்று கூறி, அதை தள்ளிவிட விரும்புகிறார்கள். எனவே ஐஸ்வரியவான்களும், ஸ்தாபனங்களும் அந்த வெகுமதியை நிராகரித்து விடுகின்றன. அவர்கள் அதனோடு எவ்வித சம்மந்தமும் வைத்துக் கொள்வதில்லை. ஏன்? ஏன் அவர்கள் இதைப்போன்ற ஒரு காரியத்தைச் செய்ய விரும்புகிறார்கள்? அது அவர்களுடைய கோட்பாட்டு முறையில் சுற்றப்படாதிருந்தது. ஏன்? அந்த காரணத்தினால்தான் அவர்கள் இன்றைக்கும் தேவனுடைய வெகுமதியை விரும்புகிறதில்லை. இந்த ஐக்கிய நாடுகள் தேவனை விரும்புகிறதில்லை. இந்த சபைகள் தேவனை விரும்புகிறதில்லை. அவர்கள் குழந்தைகளுக் கான கிறிஸ்மஸ் கட்டுக்கதைகளை (Santa Clause) விரும்பு கிறார்கள். அவர்கள் பளபளப்பான ஒன்றை, சிவப்பு நிறங்களை, பிரகாசமான, மினுமினுப்பான காரியத்தையே விரும்புகிறார்கள். அவர்கள் சுவிசேஷத்தின் சத்தியத்தையும், வல்லமையையும், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலையும் நிராகரிக்கிறார்கள். அது அவர்களுடைய கோட்பாட்டினால் சுற்றப்படாது. நீங்கள் ஒரு கோட்பாட்டில் கிறிஸ்துவை சுற்றமுடியாது. 36நான் அதிகாலையில் தாயாரினிடத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, வானொலியைத் திருப்பினேன். அப்பொழுது நான் இதை கேட்டுக் கொண்டிருந்தேன். ஒரு-ஒரு சபை அப்போஸ்தல பிரமாணம் என்றழைக்கப்படுகின்றதை மேற்கோள் காட்டிக்கொண்டு இல்லை கூறிக்கொண்டிருந்தது. அப்படிப்பட்ட காரியமே கிடையாது. “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக் கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள் ” என்ற ஒரே கோட்பாடே அப்போஸ்தலர்கள் எப்போதும் அறிந்திருந்ததாக அப்போஸ்தலநடபடிகள் 2 : 38-ல் கண்டறியப் படுகின்றது. அந்த ஒரு கோட்பாட்டையே அவர்கள் எப்போதும் பயன்படுத்தியதாக வேதத்தில் நான் கண்டுள்ளேன். இது மனிதனால் உண்டாக்கப்பட்ட மற்றொரு கோட்பாடாய் இருக்கிறது. நீங்கள் ஒரு பிரஸ்பிடேரியன் கோட்பாட்டில் அல்லது ஒரு பாப்டிஸ்டு கோட்பாட்டில் அல்லது ஒரு கத்தோலிக்க கோட்பாட்டில் அல்லது ஒரு பெந்தெகோஸ்தே கோட்பாட்டில் கிறிஸ்துவை சுற்ற முடியாது. ஒரு காரியத்தில்தான் கிறிஸ்து உள்ளே சுற்றப்படுவார். அது உங்களுடைய இருதயம், உங்களுடைய கோட்பாட்டில் அல்ல. அவர் உங்களுடைய இருதயத்தை விரும்புகிறார். அவர் உங்களுக்கு நித்திய ஜீவனைக் கொண்டுவர, உங்களோடு கிரியை செய்ய விரும்புகிற ஒரு கட்டுப்பாட்டுக் கோட்டையை அவர் உடையவராய் இருக்கிறார். அவர் மற்றதை ஏற்றுக்கொள்ள மாட்டார். நீங்கள் கோட்பாடுகளில் அவரை சுற்ற முடியாது. அப்பொழுதும் உங்களால் முடியவில்லை. இப்பொழுதும் உங்களால் முடியாது. உங்களால் எப்போதும் அதைச் செய்ய முடியாது. 37ஆகையால் அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் வெகுமதியைக் குறித்து சிந்தித்ததைக் காட்டிலும் தங்கள் கோட்பாடுகளைக் குறித்தே அதிகம் சிந்தித்திருந்தனர். இன்றைக்கும் அது அதே விதத்தில்தான் உள்ளது. ஜனங்கள் தங்களுடைய சபையில் அந்நிய பாஷையில் பேசுகிறதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அது அவர்களுடைய கோட்பாட்டை நாசமாக்கிவிடும். அவர்கள் தெய்வீக சுகமளித்தலையும், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும், இப்படிப்பட்ட மகத்தான சுவிசேஷ வேதாகம உபதேசங்களையும், அப்போஸ்தல சத்தியங்களையும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஏன்? ஏனென்றால் அவர்களுடைய கோட்பாடு அதை கண்டனம் செய்கிறது. ஓ, பொட்டலத்தில் சுற்றப்பட்டிருக்கிற காகிதத்தை எடுத்துக் கொண்டு, அதன் உள்ளிருக்கும் வெகுமதியை எறிந்துவிடுவது எவ்வளவு மூடத்தனம்! மூடனைப் (Moron) போன்றே, அவன் பெட்டியை எடுத்துக் கொண்டு, அதை ஏற்றுக்கொண்டு, வெகுமதியை தூர எறிந்து விட்டான். அந்தவிதமாகத்தான் இன்றைக்கு சபையும், ஜனங்களும் செய்கிறார்கள். அவர்கள் இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவனாகிய தேவனுடைய வரத்தை மறந்துவிட்டனர். அப்பொழுது அவர் புறக்கணிக்கப்பட்டதைப் போன்றே இன்றைக்கும் அவர் புறக்கணிக்கப்படுகின்றார். முதல் கிறிஸ்மஸ் இரவின்போது அவர் புறக்கணிக்கப்பட்டது போன்றே அவர் இந்த கிறிஸ்மஸ் இரவிலும் புறக்கணிக்கப்படுகின்றார். அவர்களால் அதைச் செய்ய முடியாது, ஏனென்றால் அது தங்களுடைய கோட்பாடுகளோடு இணங்காதிருக்கிறது. எல்லா காலங்களினூடாகவும் நாம் இந்த காரியத்தையே உடையவர்களாய் இருந்தோம். 38சத்திரத்தில் அவருக்காக இடமில்லாதிருந்ததில் வியப்பொன்றும் இல்லை. அது சரியாக சுற்றப்பட்டிருக்கவில்லை. அது தரமான காகிதத்தினால் சுற்றப்பட்டிருக்கவில்லை. தேவனிடத்திலிருந்து அனுப்பப்பட்ட, தேவனிடத்திலிருந்து வந்த ஒரு வெகுமதி என்ற காரணத்தினால், ஒரு வெகுமதி என்றபடியால் அது சுற்றப்பட்டிருந்தது. அவர்கள் தேவனைக் குறித்து ஒன்றையுமே அறியாதிருந்தனர். அவர்கள் அறிந்திருந்ததாக உரிமை கோரினர். அவர்கள் அவருக்காக எதிர்நோக்கிக் கொண்டிருந்ததாக உரிமை கோரினர். அவர்களுடைய கோட்பாடுகளின்படியாக அவர் வருவார் என்று அவர்கள் நினைத்திருந்த வழியில் அவர் வரவில்லை. எனவே அவர்களால் தேவனுடைய வெகுமதியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் வித்தியாசமாய் சுற்றப்பட்டிருந்தார். அவர் ஒரு குழந்தையைப் போன்று சுற்றப்பட்டிருந்தார். அவர் ஒரு முன்னணையில் பிறந்திருந்தார். அவர் ஏழை ஜனங்களிலிருந்து வந்தார். அவர் ஒரு கூட்ட “மூட மதாபிமானிகளிடமிருந்து” வந்தபடியால், அதைப் போன்ற ஒன்றை எப்படி அவர்களால் ஏற்றுக் கொள்ள முடிந்திருக்கும்? சத்திரத்தில் அவருக்காக இடமேயில்லை என்பதில் வியப்பொன்றுமில்லை. சபைகளில் இன்னமும் அவருக்காக இடமேயில்லை. அவர்கள் அவரை தள்ளிவிடுகிறார்கள். அவர்கள் அதில் விசுவாசம் கொண்டிருக்கவில்லை. அவர்கள், “அத்தகைய ஒரு காரியத்தை அகற்றுங்கள், அது மூட மதாபிமானம். நாங்கள் அதனோடு எதையும் செய்ய விரும்பவில்லை. அது எங்கள் பிதாக்களுடைய உபதேசங்களுக்கும், இந்த சபையின் உபதேசங்களுக்கும், நம்முடைய முற்பிதாக்களின் உபதேசங்களுக்கும் விரோதமாய் உள்ளது'' என்பார்கள். ஆகையால் அவர் முன்னர் புறக்கணிக்கப் பட்டது போன்றே இன்னமும் கிறிஸ்து அதேவிதமாய் புறக்கணிக்கப் படுகின்றார். இன்றிரவும் நம்முடைய நல்ல சபைகளில், நம்முடைய பெரிய சபைகளில், நம்முடைய அருமையான சபைகளில் இடமே யில்லை. இன்றைக்கும் ஒரு பரிசுத்த ஆவியின் கூட்டத்திற்கு நம்முடைய வட்டாரங்களில் இடமே இல்லை. அவர்கள் அதை விரும்புகிறதில்லை. அது, அது நாட்டுப்பிரிவுகளின் பார்வையில் அவர்களை சிறுமைப்படுத்துகிறது. அவர்கள் பீடத்தண்டை வருவதற்கு தங்களைத் தாழ்த்தவும், கதறவும், உன்னதத்திலிருந்து வரும் பெலனால் அவர்கள் நிரப்பப்படும் வரைக்கும் அங்கேயே காத்திருக்கவும், அங்கிருந்து புதிய ஜீவனோடு எழும்பவும் நினைப்பவர்களை அது இகழுகிறது. அது தங்களுடைய தலை முடியை வளரவிடும் ஸ்திரீகளை, பெண்களைப் போன்று நடந்து கொள்ள வேண்டுமென்றிருப்பவர்களை, தங்களுடைய சிகரெட்டு களை தூர வீசியெறிய வைக்கும் மனிதர்களை, தங்களுடைய குடிப்பழக்கத்தை விட்டுவிடுபவர்களை, தங்களுடைய குடும்பங்களை சரியாக நடத்துபவர்களை இகழுகிறது. அது அவர்களுக்கு மிக அதிகமானதாக இருக்கிறது. எனவே அவர்கள் தேவனுடைய வெகுமதியை, தேவனுடைய கிறிஸ்மஸ் வெகுமதியை பெற்றுக்கொள்வதற்குப் பதிலாக தங்களுடைய கோட்பாட்டை , தங்களுடைய சபையை பற்றிக் கொள்கிறார்கள். 39அவர்கள் வெகுமதியை பெற்றுக்கொள்வதைக் காட்டிலும் ஒரு கோட்பாட்டை, வெகுமதியைக் காட்டிலும் காகிதத்தையே பெற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் காகிதத்தையே விரும்புகிறார்கள். நிச்சயமாகவே முழுவதும் மினுமினுப்பாயுள்ள ஏதோ ஒன்றையே விரும்புகிறார்கள். அவர்களால் அதைப் பற்றி அதிக பரபரப்பை உண்டு பண்ண முடியும். ஆனால் அதற்குள்ளே தான் உண்மையான வெகுமதியே உள்ளது. அவர்களோ அதை விரும்புகிறதில்லை . புரிகின்றதா? அப்பொழுது அவர் ஒரு அழுக்கான துணியில், ஒரு கந்தலான துணியில் சுற்றப்பட்டிருந்தார். இன்றைக்கும் அவர்கள் பரிசுத்த உருளை, மூட மதாபிமானம், ஒரு கூட்ட மார்க்க பேத முள்ளவர்கள் என்றழைக்கின்ற அதே காரியத்தில் அவர் சுற்றப்பட்டிருக்கிறார். அது மேலே கந்தைத் துணியில் சுற்றப்பட் டிருக்கிறது. உலகமோ அதை விரும்புகிறதில்லை. ஓ! அந்தத் துணியை நீக்கிவிட நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். அதற்கு கீழே என்ன இருக்கின்றது என்பதைப் பார். நித்திய ஜீவன், தேவன் மாம்சமாகி நமது மத்தியிலே வாசம் பண்ணினார். 40இல்லை, அவர்கள் அவரை விரும்பவில்லை . அது அவர்களுடைய மத சம்மந்தமான வட்டாரங்களுடன் தலையிடுகிறது. இன்றைக்கும் அதைப் பெற்றுக்கொள்வதில், அது அவர்களுடன் தலையிடுகிறது. ஓ, யாராவது சபையில் எழும்பி நின்று சத்தமிடத் துவங்கி அல்லது தேவனை துதிக்கத் துவங்கி, அல்லது யாராவது “ஆமென்” என்று கூறினால், இங்குள்ள இந்த ஊழியர் குழு, ஏதோ ஒன்றை அல்லது கூட்டத்தில் வாயிற்காப் போனை அனுப்ப, அவர்கள் அவர்களை துரிதமாக வாசலண்டைக்கே வழிநடத்துவார்கள். உங்களுடைய பெயர் புத்தகத்தில் இருந்திருந்தால், அது உடனடியாக எடுக்கப்படும். புரிகின்றதா? தேவனுக்கே ஒரு வாய்ப்பில்லாமல் இருக்கிறது. 41தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி கென்னடி இங்கே இந்த பட்டிணத்திற்கு விஜயம் செய்வாரானால், கொடிகள் பறக்கும், பகட்டான ஆடம்பர வஸ்துக்கள் பறக்கும் மற்றும் தரைக் கம்பளங்கள் விரிக்கப்படும். நீங்கள் ஒருபோதும் கண்டிராத அத்தகைய ஒரு வரவேற்பைக் காண்பீர்கள். நீங்கள் அதைச் செய்ய விரும்பினால், அதெல்லாம் சரிதான். அவர் ஐக்கிய நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாய் இருக்கிறார். ஆனால் அவர் வருவாரானால், அவர்கள் - அவர்கள் அதைக் குறித்த எல்லாவற்றையும் செய்வார்கள். அதாவது நியூயார்க் மற்றும் பெரிய பட்டிணங்களில் உள்ள எல்லாவிடத்திலுமே , அவருக்காக அழைப்பு விடுத்துக்கொண்டு, வெறுமனே ஒரு நிமிடம் அவருடன் பேசவிருக்கும்போது, அவர் இந்தியானா, ஜெபர்சன்வில் என்ற இப்படிப்பட்டதான சிறிய பட்டணத்திற்கு வர தம்மைத் தாழ்த்திக் கொண்டாரே'' என்பதை நினைத்து அவர்கள் அவருக்கு மகத்தான வரவேற்பை அளிப்பார்கள். அவர் ஜெபர்சன்வில்லுக்கு, நம்மைப் போன்ற ஒரு ஏழ்மையான பட்டிணத்திற்கு வருவாரானால், கேவலமாய் அழைக்கப்படும் நம்மிடத்திற்கு வருவாரானால், அவர்கள் எப்படியெல்லாம் அலங்கரிப்பார்கள். அவர்கள் எல்லா வற்றையும் செய்து, வீதிகளை அலங்கரித்து, அவருக்கு வரவேற் பளிக்க எல்லாவற்றையும் செய்வார்கள். நீங்கள் ஒரு அரசியல்வாதி யாய் இருந்தால், அது சரியாய் இருக்கும். அதெல்லாம் சரிதான். 42ஆனால் இயேசுவானவர் அவருடைய வல்லமையான உயிர்த்தெழுதலின் ரூபத்தில் வரக்கூடுமானால், பரிசுத்த ஆவியில் வரக்கூடுமானால், அடையாளங்களையும், அற்புதங்களையும் காட்டக் கூடுமானால், ஒவ்வொரு செய்தித்தாளும் அதை விமர்சனம் செய்யும். ஜனங்களோ அதை, “பரிசுத்த உருளைகள்” என்றழைப்பார்கள். அவர்கள், ''ஜனங்கள் பைத்தியம் பிடித்தவர்கள்'' என்பார்கள். நம்முடைய பெயர் அணுகுண்டுகளின் மேல் எழுதப்பட்டிருக்க, நாம் அதை உடையவர்களாய் இருப்பதில் வியப்பொன்றுமில்லையே. இரக்கத்தை உதறித்தள்ளுதல், நியாயத்தீர்ப்பேயன்றி வேறொன்றும் விடப்பட்டிருக்கவில்லை. ஓ , அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அப்பொழுது அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மனதாயில்லை. இப்பொழுதும் அவர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஏன் அவர்கள் அதைச் செய்யவில்லை? வெறுமனே கேட்க விரும்புகிறேன். ஏன் தேவனுடைய கிறிஸ்மஸ் வெகுமதியை அவர்கள் ஏற்றுக்கொள்ள இடங்கொடுக்கவில்லை? ஏன் அதைச் செய்யவில்லை? அவர்கள் அதைச் செய்கிறார்களா? அவர்கள் காணமுடிந்த ஒரு வெகுமதியாய் இருந்தால், அது அவர்களுடைய சமுதாயத்திற்கு பொருந்துமானால், அப்பொழுது அது முழுவதும் சரியானதாய் இருக்கும். நம்முடைய ......... 43இந்த பரிசுத்த ஆவியின் மார்க்கம் ஜனங்களுடைய சமுதாயத்திற்கு, இன்றைக்கு பொருத்தமாய் இருக்குமானால், அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள். நல்லது, ஆகையால் ஏன் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது? ஏனென்றால் அவர்கள் கிறிஸ்துவைக் குறித்து சிந்திப்பதைக் காட்டிலும் தங்களுடைய சமுதாயத்தைக் குறித்தே அதிகம் சிந்திக்கிறார்கள். அது உண்மை. நீங்களோ, “நீர் அவரைக் குறித்து மிகவும் அச்சம் தரும் வகையில் பேசிக்கொண்டிருக்கிறீர்'' என்கிறீர்கள். நான் அவருக்காக பேச முற்படுவேன். அவர் என்னுடைய கர்த்தர். நான் ஒரு ........ நான் -நான் - நான் அவருடைய ஊழியக்காரன். தவறாய் இருக்கின்றதற்கு எதிராகக் கூக்குரலிட எனக்கு உரிமை உண்டு. அது உண்மை . கிறிஸ்தவர்கள் அதை விசுவாசிக் கிறார்கள், அதை அறிந்திருக்கிறார்கள், அதை ஏற்றுக்கொள்கிறார் கள், அது சத்தியமாய் இருக்கிறதென்பதையும் அறிந்திருக்கிறார்கள். 44இந்த சுற்றப்பட்ட பொட்டலத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளாததற்கு காரணம் என்ன? அதன் உட்புறத்தில் என்ன இருந்தது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள், ஆனாலும் அவர்கள் அதை விரும்பவில்லை. அந்த காரணத்தினால் தான் இன்றைக்கு சபைகளும், ஜனங்களும், தேசங்களில் உள்ள அரசாங்கங்களும் தேவனுடைய கிறிஸ்மஸ் அன்பளிப்பை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் அதற்குள்ளே என்ன உள்ளது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அவர்கள் அதை விரும்புகிற தில்லை. அது ஸ்திரீகளை வித்தியாசமாக செயல்பட செய்யும். அது புருஷர்களை வித்தியாசமாக செயல்பட செய்யும். நீங்கள் ஒரு “மதவெறியன்” என்ற பெயரை ஏற்றனுபவிக்க வேண்டியதாய் இருக்கும். கர்த்தருடைய நிந்திக்கப்பட்ட சிலருடைய வழியை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதாக இருக்கும். நீங்கள் உங்களுடைய ஜீவியத்தை சுத்தம் செய்ய வேண்டியதாக இருக்கும். நீங்கள் தவறு செய்வதை, ஏமாற்றுவதை, திருடுவதை, பொய்யுரைப்பதை, விபச்சாரம் செய்வதை நிறுத்த வேண்டியதா யிருக்கும். நீங்கள் இந்தக் காரியங்களை நிறுத்த வேண்டியதா யிருக்கும். ஜனங்களோ அதை விரும்புகிறதில்லை. அது சரியானது என்று அவர்கள் அறிந்தாலும்கூட, அவர்கள் அதை விரும்புகிற தில்லை. அது அவர்களுக்கு அதிகப்படியான சத்தியத்தைக் கொண்டு வருகிறது. அது அவர்களுடைய பாவங்களை வெளிப்படுத்துகிறது. எனவே அவர்கள் அதை விரும்புகிறதில்லை. அதனோடு எதையுமே செய்ய விரும்புகிறதில்லை. “அதிலிருந்து விலகியிருக்கிறார்கள்.'' அந்நாளில் அது அந்தவிதமாகத்தான் இருந்தது. அதன் உள்ளே என்ன சுற்றப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். எனவே அவர்கள், “அதனோடு விலகியிருங்கள் ” என்றனர். 45அவர்கள் அதை விரும்புகிறதில்லை. இன்றைக்கும் அது அதே காரியமாகவே உள்ளது. அதை ஒருபோதும் விரும்புகிறதே யில்லை. அதற்குள்ளே சுற்றப்பட்டிருந்தது என்னவென்பதை அவர்கள் அறிந்துள்ள காரணத்தினால் இன்றைக்கு அவர்கள் பரிசுத்த ஆவியை விரும்புகிறதில்லை. பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்கிற ஒரு நபரை அவர்கள் கவனிக்கக்கூடும். அவர்கள் அங்கே வெளியில் நின்று, அந்த ஸ்திரீயை பார்க்கிற போது, ஒருக்கால் நாய்களும்கூட அவளை ஏறிட்டுப் பார்க்கக் கூடாத அளவிற்கு அவ்வளவு இழிவானவனாக இருக்கக்கூடும். ஆனால் அந்த பீடத்திலிருந்து அந்த ஸ்திரீ வருகின்றதை காணும் போது ஒரு புதிய நபராய், காண்பதற்கு அந்த ஸ்திரீ தன்னுடைய ஜீவியத்தை சுத்தம் செய்கிறவளாய், வெளியில் சென்று, ஒரு சீமாட்டியைப் போன்று நடந்து கொள்கிறவளாயும் இருக்கிறாள். சீட்டாட்ட விளையாட்டுகளுக்கு ஓடி, ஒரேநாளில் நான்கு அல்லது ஐந்து கட்டு சிகரெட்டுகளைப் புகைத்து, மதுபான கடைகளையே சுற்றி அண்டிக்கொண்டு, ஒரு மதுக்கடை வாடிக்கையாளனாக இருப்பவரைப் பாருங்கள். அவர்கள் இந்த தேவனுடைய வெகுமதியை ஏற்றுக்கொள்வார்களேயானால், இயேசு கிறிஸ்து என்றழைக்கப்படுகின்ற பொட்டலத்திலே அது சுற்றப்பட்டுள்ளது என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். அது அவர்களுடைய உலகப்பிரகாரமான ஒவ்வொரு துளி வேடிக்கையையும் அழித்து விடும். ஏனென்றால் அவர் அதற்காக நிற்கமாட்டார். அது அவர்களுக்கு ஏதோ ஒன்றைச் செய்கிறது. அது ஜனங்களை மாற்றிவிடுகிறது. ஜனங்கள் மாற்றப்பட விரும்புகிறதில்லை . அவர் களோ, ''என்னை தனிமையாய் விட்டுவிடுங்கள்'' என்கின்றனர். 46அது பிசாசினால் பீடிக்கப்பட்ட மனிதனைக் குறித்து எனக்கு நினைப்பூட்டுகிறது. அதாவது இயேசுவானவர் கதரேனுக்கு சென்றபோது, அங்கு ஒரு மனிதன் இருந்தான், அவனுக்குள் இரண்டாயிரம் பிசாசுகள் இருந்தன. அவர்கள், “ஏன் ........ நாங்கள் உம்மோடு என்ன செய்ய வேண்டும்? நீர் ஏன் இங்கு வந்திருக்கிறீர்? எங்களுடைய நாட்டை விட்டுப் போய்விடும். நீர் இங்கிருக்க நாங்கள் விரும்பவில்லை” என்றனர். அவர்கள் தனிமையாய் விடப்பட வேண்டுமென்று விரும்பினர். ஜனங்கள் இயேசுவோடு இருப்பதைக் காட்டிலும் அவர்கள் பிசாசுகளோடு வீட்டில் இருப்பதையே மேலாக உணர்ந்தனர். எனவே அவர்கள், ''எங்களுடைய நாட்டை விட்டு வெளியே செல்லும், நீர் இங்கிருக்க நாங்கள் விரும்பவில்லை“ என்றனர். அந்த இழிவான பண்டைய லேகியோன், அவன் உதவி தேவைப்பட்ட ஒருவனாய் மட்டுமே இருந்தான். அவரை விரும்புகிற வர்களிடத்திற்கு அவர் எப்பொழுதுமே வருகிறார். அவர் தேவைப் படுகிறவர்களிடத்திற்கு வருகிறார். எனவே உதவி செய்யப்பட்ட ஒருவனாய் அவன் இருந்தான். நான் பரலோகத்திற்கு செல்லும் போது, கதரேனேயில் பன்றி வளர்ப்பவர்களிடத்தில் கூறின அவனுடைய சாட்சி எவ்வளவு - எவ்வளவு முக்கியமானதாய் இருந்தது என்பதை நான் காண விரும்புகிறேன் என்று நான் அடிக்கடி சிந்தித்துள்ளேன். அது அவர்களுடைய ஒரு கூட்ட பன்றிகளையே கிரயமாக்கிக் கொண்டபடியினால் அவர்கள் எழுப்புதலையே விரும்பவில்லை. 47அது எந்தக் காரியத்திலாவது ஜனங்களையே கிரயமாக எடுத்துக்கொள்ளப் போவதாயிருந்தால், அவர்கள் அதனோடு எதையும் செய்ய விரும்புகிறதில்லை. இன்றைக்கும் அது அந்த விதமாகவே இருக்கிறது. அது உங்களுக்கு உங்களுடைய மோசடிக் குழுவை, சிறப்பான நேரங்களை, உங்களுடைய புகை சுருட்டுகளை, உங்களுடைய அசுத்தமான கேளிக்கைகளை, உலகத்தின் காரியங்களை மற்றும் எல்லா அசுசிகளையும் கிரயமாக எடுத்துக் கொள்ளப்போவதாக இருந்தால் அவ்வாறே இருப்பீர்கள். அவர்கள் அதை விரும்பாததற்கு அதுவே காரணம். அது ஏதோ ஒன்றிற்கு அவர்களை கிரயமாக்குகிறது. பெரிய சங்கத்தில், அதன் மேல், பெரிதாக பளபளப்பாய் எழுதப்பட்ட உங்களுடைய பெயரை கிரயமாக்கிக் கொள்கிறது. 48ஆனால் அது உங்களுக்கு ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டுள்ள அழிந்துபோகாத ஒரு பெயரைக் கொடுக்கும். எனவே நீங்கள் உங்களுடைய தருணத்தை தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒரு சுயாதீன நீதி கர்த்தாவாய் இருக்கின்றீர்கள், ஓ! தேவனுடைய கிறிஸ்மஸ் வெகுமதியை பெற்றுக்கொள்ளுங்கள் என்பதே உங்களுக்கான என்னுடைய ஜெபமாக உள்ளது. ஆம். அவர்கள் அதை விரும்புகிறதில்லை. ஏனென்றால் அது அவர்களுக்கு ஏதோ ஒன்றைச் செய்கிறது. அரசாங்கம் அதைச் செய்ததா? அரசாங்கம் அவரை விரும்பவில்லை. ஏரோது அவரை விரும்பவில்லை. இல்லை ஐயா. காரணம் ஏன்? அவர்களுடைய திட்டத்தையே அவர் மாற்றப்போவதாக இருந்தார். இன்றைக்கும் அரசாங்கம் அவரை விரும்புகிறதில்லை. நாம் ஒரு கிறிஸ்தவ தேசமாக இருப்பதாகக் கருதிக்கொண்டோம். ஏன்? ஐ. நா. அவரை விரும்பவில்லை . அவர்கள் உலகத்தில் அவரைத் தவிர மற்ற எல்லா கருத்துக்களையும் ஏற்றுக் கொள்வார்கள். அவர்கள் ஜெபத்தை ஏறெடுக்க மாட்டார்கள். அவர்களுடைய சபையின் கூட்டங்களில் ஜெபமே கிடையாது. அவர்கள், “நாய் நாயையே தின்னுகிறது” என்று வீதியிலே வழங்கி வரும் பண்டைய சொற்றொடரைப் போன்று அங்கே வெறுமனே போகிறார்கள். அவர்கள் கிறிஸ்துவை விரும்புகிறதில்லை. அவர் அவர்களுடைய திட்டங்களை மாற்றியிருப்பார். ஆகையால் அவர்கள் அவரை விரும்புவதில்லை. அப்பொழுதும் அவர்கள் அவரை விரும்பவில்லை. இப்பொழுதும் அவர்கள் அவரை விரும்புகிறதில்லை . 49சபைகள் அவரை விரும்பவில்லை , ஏனென்றால் அவர் அவர்களுடைய கோட்பாடுகளோடு இணங்காதிருந்தார். அவர், “நீங்கள் விரியன் பாம்பு குட்டிகள், நீங்கள் வெள்ளையடிக்கப்பட்ட சுவர்கள்'' என்று அவர்களிடம் கூறினார். அவர் நினைத்த எல்லாவற்றினாலும் அவர்களை அழைத்தார். பண்டைய ஏரோதிடம், ”போய் அந்த நரிக்குச் சொல்லுங்கள்'' என்று சொன்னார். ஒரு நரியைக் காட்டிலும் அசுத்தமானது எது? ஒரு கிழ நரியைக் காட்டிலும் கேவலமாக மிகவும் துர்நாற்றம் வீசிக் கொண்டிருப்பது எது? இயேசுவானவர், ''அதுதான் அவன்' என்றார். எனவே அவர் - அவர் - அவர் கறுப்பை “கறுப்பு'' என்றழைத்தார், வெள்ளையை ”வெள்ளை “ என்று அழைத்தார். அவர் - அவர் - அவர் தவறை ”தவறு'' என்றழைத்தார், சரியானதை ''சரி'' என்றழைத்தார். ஆகையால் அவர்கள் அதை விரும்பவில்லை . பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்ட ஒரு போதகரை இன்றைக்கு சபைகள் விரும்புகிறதில்லை, அது உண்மையிலே அதை அனல் மூட்டச் செய்து, சரி எது என்றும், தவறு எது என்பதையும் உங்களுக்குச் சொல்லும். அவர்கள் அதை விரும்புகிறதில்லை. அவர்கள் உடனடியாக அவரை வெளியேற்றி விடுவார்கள். கண்காணிப்புக்குழு ஒன்று சேர்ந்து அவரை புறக்கணித்து விட்டு, மற்றொருவரை சேர்த்துக்கொண்டு, தங்களுடைய கோட்பாடுகளை குறித்து பேசச் செய்யும். சகோதரனே, நான் கிறிஸ்துவைத் தவிர வேறெந்த கோட்பாட்டையும் அறியேன். அன்பைத் தவிர வேறெந்த பிரமாணத்தையும் அறியேன், வேதாகமத்தைத் தவிர வேறெந்த புத்தகத்தையும் அறியேன். அதுதான் நமக்கு தேவை. அதுதான் சபைகளுக்கு தேவை. 50ஆனால் ஜனங்களோ அதை விரும்புகிறதில்லை. எனவே ஒரு நல்ல போதகரை அவர்கள் விரும்புகிற விதத்தில் புறக்கணித்துத்தள்ள ஒரு தர்மகர்த்தா குழுவை அல்லது ஒரு கண்காணிப்பு குழுவை அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளு மளவிற்கு இந்த ஸ்தாபனங்களில் அதிகமாய் சுற்றப்பட்டிருக்கும் சபையையே அவர்கள் பெற்றுள்ளனர். ஆனால் அவர்கள் தேவனை தள்ளிவிட முடியாது. அந்த ஒரு காரியம் நிச்சயம். தேவன் தேவனாகவே தரித்திருக்கப் போகிறார். அவர்கள் அவரை வரவேற்க மாட்டார்கள். அவர்கள் தங்களுடைய - தங்களுடைய நண்பர்களை, தங்களுடைய அரசியல்வாதிகள் போன்றவர்களையே வரவேற்கிறார்கள். ஆனால் அவர்கள் கிறிஸ்துவையோ வரவேற்க மாட்டார்கள். அவர்கள் எந்த நேரத்திலும் கிறிஸ்மஸ் குட்டி கட்டுக் கதைகளையே உடையவர்களாயிருக்க விரும்புவார்கள். உலகம் அவர்களை மாற்றிவிட்டது. கிறிஸ்மஸ் குட்டி கட்டுக்கதைகள் மாற்றியமைத்துவிட்டது. நல்லது, சிறுபிள்ளைகள் கிறிஸ்மஸ் எதை குறிக்கிறது என்னவென்பதையும் கூட அறிந்து கொள்கிறதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். 51அவர்கள் ஈஸ்டர் எதைக் குறிக்கிறது என்பதையும் அறிந்து கொள்கிறதில்லை. அது ஒரு - அது ஒரு ஈஸ்டர் முயலின் செல்லப் பெயர். ஏதோ ஒரு விதமான ஒரு முயல் அல்லது ஒரு சிறு மஞ்சள் நிறமுடைய கோழிக்குஞ்சு அல்லது ஏதோ ஒன்று. ஒரு கோழிக்குஞ்சோடும், அங்குள்ள அந்த அழுக்கான பறவையோடும் தேவனுக்கும், உயிர்த்தெழுதலுக்கும் என்ன சம்மந்தம் உண்டு? ஒரு கோழிக்குஞ்சைக் காட்டிலும் அசிங்கமானது வேறெது? அவர்கள் கிறிஸ்துவின் ஸ்தானத்தை எடுக்க அதை அங்கே வைக்கிறார்கள். கிறிஸ்மஸ் குட்டி கட்டுக்கதைகளைக் காட்டிலும் ஒரு கட்டுக்கதை வேறென்ன உள்ளது? அத்தகைய ஒரு காரியமே இருந்ததில்லை. பிள்ளைகளுக்கு பொய்களைக் கூறுதல், நியாயத் தீர்ப்பின் நாளிலே நீங்கள் அதற்கான உத்தரவாதமுடையவர்களாய் இருப்பீர்கள். 52என்ன செய்ய வேண்டும் என்பதை ஜனங்கள் அறியாதிருப்பதில் வியப்பொன்றுமில்லை , அவர்கள் ......... அவர்கள் - அவர்கள் உண்மையான காரியத்தை விரும்புகிறதில்லை. அவர்கள் செயற்கையான எந்த ஒரு காரியத்தையும் ஏற்றுக் கொள்ளுவார்கள், ஆனால் தேவனுடைய வெகுமதிகளை விரும்புகிறதில்லை. ஓ, என்னே! நிச்சயமாக, அவர்கள் இயேசுவை, அந்த ஒரு காரியத்தை விரும்புகிறதில்லை . அவர்கள் அவரை விரும்பாததற்கான ஒரு காரணத்தை நான் இங்கு எழுதி வைத்திருக்கிறேன். அவர் அவர்களுடைய ஆலயத்திற்குச் சென்றபோது, அவர் அவர்களுடைய அசிங்கத்தை ஆலயத்தில் கண்ட காரணத்தினால் அவர் மேஜைகளை கவிழ்த்துப் போட்டு, காசுக்காரர்களை வெளியே துரத்தினார். அவர் அதை சுத்தம் பண்ணினார். இங்கு சுற்றிலுமுள்ள இந்த பெரிய சபைகளில் ஒன்று பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள அவர்கள் எப்பொழுதாவது அனுமதித்தால் அவர் அதை சுத்தம் செய்வார். எனவே அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நீங்கள் பாருங்கள். அது அவர்கள் சூதாடுவதை விட்டுவிடச் செய்யும். அவர்களுடைய ராக்- அண்ட்-ரோல் என்ற நடன குழுக்களை நிறுத்திவிடும். 53அவர்கள் பீட்னிக்ஸ் என்ற இன்னிசைப் பாடல் குழு வினரைப் போன்றும், இங்கே கீழேயுள்ள கிளார்க்வில், ஹாவர்ட் பார்க்கில் உள்ள ஒரு மெத்தோடிஸ்டு பிரசங்கியார் செய்தது போன்று, செய்தித்தாளில் தங்களுடைய புகைப்படங்களை வெளியிடுகிறார்கள். இப்பொழுது இங்கு அமர்ந்துள்ள ஒரு சகோதரனை நினைத்துப் பார்த்தேன். அவர் அவருக்காக தன்னைப் புகழ்ந்து கொள்ளாமலிருந்திருந்தால் நலமாயிருந்திருக்கும். தன்னுடைய புகைப்படத்தை செய்தித்தாளில் வெளியிடும் எந்த மனிதனும், தேவனுடைய ஊழியக்காரனும், சபையில் ஒரு பீட்னிக் இன்னிசைப்பாடல் குழுவினரின் செயலையே உடையவனாயிருக் கிறான். ஜான்வெஸ்லி அதை அறிந்திருந்தால், அவர் தன்னுடைய கல்லறையிலிருந்து உருண்டு புரளுவார். ஏன்? ஜான் வெஸ்லி அறிந்திருந்த கிறிஸ்துவை அவர்கள் புறக்கணித்துத் தள்ளிவிட்டு, ஒரு பீட்னிக் இன்னிசைக்குழுவை ஏற்றுக் கொண்டனர். அவர்கள் ஒரு பீட்னிக் மார்க்கத்தையே பெற்றுள்ளனர். அவர்கள் பீட்னிக் பிள்ளைகளை, பீட்னிக் தகப்பனை, பீட்னிக் தாயை, பீட்னிக் ஜனாதிபதியை பெற்றுள்ளனர். அவ்விதமாகவே தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றனர். ஓ, என்ன ஒரு அவமானம்! ஏன்? அவர்கள் உண்மையை மறதலிக்கிறார்கள். 54தேவனோ, அவர்கள் ஒரு பொய்யை விசுவாசித்து, அதனால் ஆக்கினைக்குள்ளாகும்படி கொடிய வஞ்சகத்தை அவர்கள் மேல் அனுப்புவதாக அவர் கூறினார். தேவன் அதை செய்வதாகக் கூறினார். நீங்கள் சரியானதை நிராகரிக்கும் பொழுது, நீங்கள் தவறானதை தெரிந்து கொள்ள வேண்டும். வேறு வழியே கிடையாது. நீங்கள் வலப்பக்கமாக செல்ல மறுக்கும்பொழுது, நீங்கள் இடப்பக்கமாகத்தான் செல்ல வேண்டும். வலப்பக்கத்தைத் தவிர வேறு ஏதோ வழியில் செல்கிறீர்கள். ஆகையால் நீங்கள் ஒரே நேரத்தில் வலப்பக்கமாகவும், இடப்பக்கமாகவும் செல்ல முடியாது. அவர்கள் பரிசுத்த ஆவியை நிராகரிக்கும் பொழுது, அவர்கள் கிறிஸ்துவை நிராகரிக்கிறார்கள். அவர்கள் தேவனுடைய திட்டத்தை நிராகரிக்கிறார்கள். அவர்கள் செய்தியாளனை நிராகரிக்கிறார்கள், அவர்கள் ஒவ்வொரு காரியத்தையும் நிராகரிக் கிறார்கள். ஆகையால் அவர்கள் தங்களுடைய பாவங்களிலே விடப்பட்டிருக்கிறார்கள். ஆகையால் நியாயத்தீர்ப்பேயன்றி வேறொன்றும் விடப்பட்டிருக்கவில்லை. சகோதரன் பென், அது சரிதானே. அது முற்றிலும் சரியே. அவர்கள் அதையே பெற்றுக் கொண்டார்கள். அவர்கள் கிறிஸ்துவை நிராகரித்துள்ளனர். அவர்கள் அவருடைய திட்டத்தை நிராகரித்துள்ளனர். அவர்கள் அவருடைய ஆவியை நிராகரித்து விட்டனர். ஐம்பது வருடங்களாக அவர் முயற்சித்துள்ளார். அதாவது பரிசுத்த ஆவியானவர் அமெரிக்காவில் விழுந்து கொண்டிருக்கிறார். அவர்கள் அதை ஐம்பது வருடங்களாகவே நிராகரித்து வந்துள்ளனர். இன்றிரவு அது எப்போதும் இருந்ததைக் காட்டிலும் கருப்பாகவும், இருண்டும் உள்ளது. 55ஆரம்பத்தில் அது அவர்கள் மேல் விழுந்தபோது, அவர்களுடைய பிள்ளைகள் அதை ஸ்தாபித்துக் கொண்டும், ஸ்தாபனமாக்கிக் கொண்டும், தங்கள் பிதாக்கள் ஏற்றுக்கொண்ட அதே தேவனை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருக்குமளவிற்கு அதை ஸ்தாபனங்களுக்குள்ளாக பாழ்படுத்தி விட்டார்கள். ஆமென். பின்னர் அவர்கள் பெந்தேகோஸ்துக்கள் என்று உரிமை கோருகிறார்கள். ஓ, இல்லை. ஒரு களஞ்சியத்தில் ஜீவிக்க ஒரு பன்றியை ஒரு குதிரையாக்குகிறதில்லை. உண்மையாகவே இல்லை. எனவே ஒரு பெந்தேகோஸ்தே சபையை சேர்ந்தவனா யிருக்க, பாப்டிஸ்டை சேர்ந்தவனாயிருக்க, பிரஸ்பிடேரியனை, வேறெதோ ஒன்றை சார்ந்தவனாயிருக்க அது ஒரு மனிதனை ஒரு கிறிஸ்தவனாக ஒருபோதும் ஆக்குகிறதேயில்லை. அவன் மனமாற்றமடைகின்றபொழுது அவன் மீண்டும் பிறந்து, தேவனுடைய ஆவியைப் பெற்று முழுவதும் மாற்றப்படுகின்றான். அவன் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது, பரிசுத்த ஆவியானவர் அவனுக்குள்ளாக வந்து, அவனை ஒரு புது சிருஷ்டியாக, ஒரு புதிய சிருஷ்டிப்பாக ஆக்கிவிடுகிறார். எனவே அப்பொழுது அவர்கள் அதை நிராகரித்தனர். அவர்கள் இப்பொழுதும் அதை நிராகரிக்கிறார்கள். அவர் அவர் களுடைய பணமேசைகளை கவிழ்த்துப் போடுவார். அவர் அவர் களுடைய தர்மகர்த்தா குழுவை, அவர்களுடைய- அவர்களுடைய போதகக் குழுவை கவிழ்த்துப் போடுவார். அவர்கள் - அவர்கள் இருக்கவே மாட்டார்கள். அவர் ......... அவர்கள் ஒரு குழுவை அமைத்துக் கொள்வார்கள். சரி. ஓ , இன்றைக்கு அவர் சபைக்குள்ளாக வருவாரானால், அது என்ன ஒரு வித்தியாசமாய் இருக்கும். ஆனால் அவரால் உள்ளே நுழைய முடியவில்லை. 56மற்றொரு இரவு இந்த சபைக் காலத்தில் அவர் தம்முடைய சொந்த சபையினால் வெளியே தள்ளப்பட்டதையும், வாசலிலே நின்று தட்டிக்கொண்டு, மீண்டுமாய் உள்ளே திரும்பிவர முயற்சிப் பதையும் நாம் கண்டறிந்தோம். ஒரு இரக்கமுள்ள பிதா! அவருடைய சொந்த ஜனங்களால் வெளியே தள்ளப்பட்ட பிறகும், மீண்டுமாக தம்முடைய சபைக்கு திரும்பிவர முயற்சிக்கிறாரே! அவர், “ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியில் உலாவிக் கொண்டிருக்கிற ஒருவர் நான்தான்” என்றார். இங்கோ கடைசி சபையின் காலத்தில் அவர் வெளியே இருந்தார். அவர்கள் அவரை வெளியே தள்ளிவிட்டனர். இந்த லவோதிக்கேயா காலத்தில் இருப்பிடம் எங்கே? அவருடைய சொந்த வாசலில் மீண்டுமாய் நின்று, தம்முடைய சொந்த சபைக்கு மீண்டும் திரும்பி வர முயற்சிக்கிறார். என்ன ஒரு பரிதாபமான காரியம்! வேதாகமம் சித்தரித்துக் காட்டுகிற பரிதாபமான காட்சிகளிலேயே மிகவும் பரிதாபமானது. வெளிப்படுத்தின விசேஷம் 2-ம் அதிகாரம், சரியாகக் கூறினால் அது 3-ம் அதிகாரமாக உள்ளது. கிறிஸ்து தள்ளப்பட்டது எப்படியாய் உள்ளது. மற்றொரு சோகமான காரியம் உண்டு. இயேசு, “பிதாவே, அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்'' என்று உரைத்தபோது, அதுவே அவர் எப்போது உரைத்த வார்த்தைகளிலேயே மிகவும் சோகமான ஒன்றாய் இருந்தது என்று நான் கருதுகிறேன். வேறு வார்த்தைகளில் கூறினால், அவருக்கு ஒரு உரிமை இருந்தது. அவர் மனிதனாய் இருந்தார். அவருக்கு ஒரு வீடு இருக்க உரிமை இருந்தது. அவருக்கு ஒரு குடும்பம் இருக்க உரிமை இருந்தது. உங்களைப் போன்று அல்லது என்னைப் போல, நம்மைப் போன்ற மனுஷீகத்தன்மையில் பெரும்பாலும் மனித இயல்புடையவராகவே இருந்தார். அதைச் செய்ய அவருக்கு உரிமை இருந்தது. ஆனால் அவர் உலகம் முழுவதிலும் சுவிசேஷத்தைக் கொண்டு செல்ல விருந்த பன்னிரெண்டு மனிதர்களை பயிற்றுவித்துக் கொண்டிருந்தார். ஆகையால் அவர் அவர்களின் நிமித்தமாக தம்மை பரிசுத்தமாக்கிக் கொண்டார். ”அவர்களின் நிமித்தமாக நான் என்னையே பரிசுத்தமாக்குகிறேன்.'' தன்னையே பரிசுத்த மாக்கிக் கொள்ளும்படி காத்துக்கொள்ளுதல் ஒரு தேவனுடைய வரமாக உள்ளது. 57ஓ, தேவனுடைய வரங்கள், அவருடைய ஆவியைப் பெற்றுள்ளீர்கள் என்று உரிமை கோருகிற ஜனங்களாகிய நீங்கள், உங்களையே பரிசுத்தமாக்கும்படி காத்துக் கொள்ளுங்கள். ஆம், பரிசுத்தமடையும்படி உலகத்தின் காரியங்களிலிருந்து விலகியிருங்கள். ஓ! இந்த வெகுமதி பொட்டலத்தின் உள்ளே என்ன இருந்தது என்பதை யார் அறிந்திருந்தனர்? அதன் உள்ளே என்ன இருந்தது என்பதை எப்போதாவது எவராவது கண்டறிந்தார்களா? நான் அங்கு இருந்ததைக் கண்டதற்காக மகிழ்ச்சியடைகிறேன். அதை அறிந்தது யார்? அது ஒரு மறைக்கப்பட்ட காரியமாக, ஒரு புறக்கணிக்கப்பட்ட கல்லாக இருந்தது. ஆனால் அதன் உள்ளே என்ன இருந்தது என்பதை யாரோ கண்டறிந்தனர். அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 58நான் காரியங்களை ஆராய்ந்து பார்க்க விரும்புகிறேன். நீங்கள் விரும்பவில்லையா? (சபையோர், “ஆமென்'' என்கிறார்கள். - ஆசி.) நான் தங்கத் துணுக்குகளை தோண்டியெடுத்து, அவைகளுக்கு மெருகேற்றி, அவைகளுக்கு உள்ளே என்ன உள்ளது என்பதைக் கண்டு, அதை கதிர் இயக்கத்தை கண்டறியும் கருவியின் முன் வைக்க விரும்புகிறேன். 59அவரும் கூட கல்வாரியிலே கதிர் இயக்கத்தைக் கண்டறியும் கருவியின் முன் நிறுத்தப்பட்டார். அவர் நூறு சதவீதமாக இருந்தார். நிச்சயமாக. அவர்கள் எப்போதும் கண்டு பிடித்திருந்ததிலேயே மிகவும் மகத்தான தங்கமாகவும், எப்போதும் இருந்ததிலேயே மிகவும் விலையுயர்ந்த வைரமாகவும் அவர் இருந்தார். வேதம், ''பரலோகராஜ்யம் வைரங்களை வாங்குகிற ஒரு மனிதனுக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் இந்த மகத்தான ஒன்றைக் கண்டு, தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று அதை கொள்கிறான்“ என்று கூறியுள்ளது. அவர் பூமியின் தூளிலிருந்து எப்போதும் கொண்டுவரப்பட்ட வைரத்திலேயே மிகவும் முழு நிறைவான பொன்மாற்றளவுள்ள வைரமாகவும், தூசியிலிருந்து எப்போதும் கொண்டு வரப்பட்ட தங்கத்திலேயே மிகவும் விலையுயர்ந்த தங்கமாகவும் இருந்தார். அவர் ஒரு இரத்தினமாக, பரலோகத்தின் இரத்தினமாக, ஒரு பெரிய வைரமாக இருந்தார். 60ஒரு பெரிய வைரக்கல் தென் ஆப்பிரிக்காவில் கண்டு பிடிக்கப்படுகிறது. நான் கிம்பர்லியில் உள்ள பெரிய வைர சுரங்கங்களுக்கு சென்று வந்துள்ளேன். அவர்கள் அந்த வைரக் கற்களை எடுத்து, அவைகளை புழுதியிலிருந்தும், பண்படுத்தாதது மானதை எடுத்து, பின்னர் அவைகளை துண்டுகளாக்குகிறார்கள். அவர்கள் அவைகளை செதுக்குகிறார்கள். அவைகளை செதுக்க காரணமென்னவெனில், ஒளிக்கதிர்களை பிரதிபரலிக்கச் செய்வதற்காகும். அதிலிருந்து ஒளிக்கதிர்கள் வெளிப்படும்போது அதனுடைய பொன்மாற்று அளவு, அந்த வைரத்தில் எந்த அளவு பொன்மாற்று அளவு உள்ளது என்பதைக் காட்டுகிறது. அது அதிகப்படியான தீயையும், தீப்பொறியை உடையதாக இல்லை யென்றால், அதில் அதிக அளவு வைரம் இல்லையென்பதாகும். ஆனால் அது அவைகளை உடையதாயிருக்கும்பொழுது .... அது கண்ணாடியாய் உள்ளது. ஆனால் அது ஒரு உண்மையான வைரக் கல்லாக இருக்கும்பொழுது, அசலான பொன்மாற்று அளவைக் கொண்ட வைரக்கல்லாக இருக்கும்பொழுது, அது வித்தியாசமான வண்ணங்களை பிரதிபலிக்கும். அந்த விதமாகத்தான் அவர் இருந்தார். அவர் ஒரு வைரக் கல்லாக இருந்தார். “நம்முடைய மீறதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப் பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.' ஓ , அவைகள் தேவனுடைய அன்பின் கதிர்களாகவும், அவரிடமிருந்து ஒளியை பிரதிபலிக்கிறதாயும் இருக்கிறது. சுகமளிக்கும் வல்லமை, அன்பு, உயிர்த்தெழுதல். தேவன் அவருடைய விலா எலும்புகள் பிளவுண்டாக்கப்படுமட்டாய் ஒரு ரோம பட்டயத்தால், ஒரு ரோம சவுக்கடியால் அவரை காயப்படுத்தி, அவரை நொறுக்கி, அவரை துண்டித்து, அவரை வெட்டினார். அவருடைய முதுகிலிருந்து இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்தது. அவருடைய தலையிலிருந்து இரத்தம் வழிந்து, அவருடைய தடியினூடாக ஓடி, அவருடைய பாதங்களிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. ஓ! அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? அவர் அன்பை பிரதிபலித்துக் கொண்டிருந்தார். சிலுவையை தழுவிக்கொண்டாரே. ஒரு மிருதுவான, சிறகுகளால் மூடப்பட்ட தலையணைக்குப் பதிலாக ஒரு வைக்கோல் முன்னணை. ஒரு சிறிய, இளஞ்சிவப்பு அங்கியை அணிவதற்குப் பதிலாக ஒரு கந்தலான பொதியாடை. 61ஓ, சகோதரனே, அந்த அன்பின் ஆழத்தை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? நான் என்னுடைய வீட்டில் அன்றொரு இரவு சில ஜனங்களிடத்தில் பேசிக் கொண்டிருந்தேன். தேவ னுடைய அன்பு எவ்வளவு ஆழம் என்பதனை எவருமே ஒருபோதும் அறிந்துகொள்ள முடியவில்லை . அதாவது, “ஓ, தேவனுடைய அன்பு, எவ்வளவு ஐஸ்வரியமானது, எவ்வளவு உத்தமமானது !” அது அந்த கடைசி செய்யுளின் அடி இல்லை முதல் அடி என்று நான் நினைக்கிறேன். அது புத்தி சுயாதீனமற்றோர் விடுதியின் சுவற்றின்மேல் காணப்பட்டது. நான் மையினால் சமுத்திரத்தை நிரப்பி, வரைதோல் ஆகாயங்கள் உண்டாக்கப்பட, புவியின் மீதுள்ள ஒவ்வொரு தண்டும் ஒரு இறகு மைக்கோலாகி, பரத்திலுள்ள தேவனுடைய அன்பை எழுதுவதற்கு, ஒவ்வொரு மனிதனும் ஒரு எழுத்தாளர் பணியை மேற்கொண்டால், சமுத்திரமே வடிந்து வற்றிவிடும்; அல்லாவிடில் ஆகாயத்திலிருந்து ஆகாயத்திற்கு நீட்டப்பட்டிருந்தாலும் முழுவதையும் சுருள்வடிச்சுவடி அடக்கிக் கொள்ளக்கூடுமோ? 62பூமியின் மேல் தண்டாயிருக்கின்றவைகள் இறகு மைக்கோலாகுவதைக் குறித்து நினைத்துப் பாருங்கள். கோடான கோடி மனிதர் எழுத்தாளர் பணியை மேற்கொள்கிறார்கள். அன்பு என்ற ஆங்கிலத்தில் உள்ள சிறிய ஐந்து எழுத்துக்களை எழுத, நான் ஆங்கிலத்தில் உள்ள நான்கு சிறிய எழுத்துக்களை குறிப்பிடுகிறேன். “அன்பு” தேவனுடைய அன்பை எழுதினால் சமுத்திரங்களே வடிந்து வற்றிவிடும். பூமியின் ஐந்து பாகத்தில் நான்கு பாகம் தண்ணீரில் இருக்கும் போதே நான் அப்பாலுள்ள பால்மோர் மலையின்மேல் நின்று அந்த கண்ணாடியினூடாக நோக்கிப் பார்த்தபோது, நூற்றிருபது கோடி ஆண்டுகளின் ஒளி ஆண்டுகளைக் காணமுடிந்தது. அல்லாவிடில், ஆகாயத்திலிருந்து ஆகாயத்திற்கு நீட்டப்பட்டிருந்தாலும் முழுவதையும் சுருள்வடிச்சுவடி அடக்கிக் கொள்ள கூடுமோ? 63தேவனுடைய அன்பு. எப்படியாய் தேவன் தம்மையே வெளிப் படுத்தி, வைக்கோலின் மீது வைக்கப்பட்டிருந்த கிறிஸ்மஸ் பொட்டலத்தில் வந்தார். அவருக்கு இருந்த முதல் காரியமே, தன்னுடைய சிறிய தலையை வைக்கோலின் மேலே அழுத்த வேண்டியதாய் இருந்ததே. அவரைச் சுற்றிலும் ஒரு துண்டு அழுக்கடைந்த கந்தையான பொதியாடை சுற்றப்பட்டிருந்தது. கடைசி காரியமாக அவர் ஒரு முட்கிரீடத்தை பெற்றுக் கொள்ள வேண்டியதாயிருந்தது. அவருடைய கண்களின் மேல் ஒரு அழுக்கான கந்தையினால் சுற்றி, தலையின் மேல் அடித்து, “நீர் தீர்க்கதரிசியாக இருந்தால், உம்மை அடித்தது யார் என்று எங்களுக்குச் சொல்லும்'' என்றனர். பின்னர் ஒரு சிலுவையிலே அறைந்தனர். அன்பு, நோக்கத்தை நிறைவேற்றுதல்! அவருடைய சொந்தப் பிள்ளைகளே அவருடைய இரத்தத்திற்காக கூக்குரலிட்டுக் கொண்டிருக்கும்போது, அவரோ, ”பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே'' என்று கதறினார். அதுதான் அன்பு. சபையானது அதை விரும்புகிறதில்லை. அவர்களுக்கு கோட்பாடே தேவையாயுள்ளது. நமக்கு அன்பு தேவைப்படுகிறது. சபையானது கோட்பாடுகளினால் மரித்துக் கொண்டிருக்கிறது. அது அன்பினால் மட்டுமே ஜீவிக்க முடியும். ஏனென்றால் அன்பு நித்திய ஜீவனாய் உள்ளது. அன்பு எல்லா காரியங்களையும் ஜெயங் கொள்கிறது. அன்பே மிகவும் வலிமை வாய்ந்த சக்தியாய் உள்ளது. இல்லை, அவர்கள் அவரை விரும்பவில்லை. ஏனென்றால், அவர்கள் வெகுமதியின் உள்ளே என்ன இருந்தது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். 64ஆனால் அவர்களில் சிலருக்கு இந்த வெகுமதி என்னவா யிருந்தது என்றும், அதன் உள்ளே என்ன இருந்தது என்பதும் அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்தது. அவர்களில் சிலர் அதற்குள்ளாக நோக்கிப் பார்த்தனர். அந்த கிறிஸ்மஸ் பொட்டலத்திற்குள் முதலில் உற்றுப்பார்த்தவர்கள் யாராயிருந்தனர் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று நான் நினைக்கிறேன். அது தேவதூதர்களாய் இருந்தது என்று நான் விசுவாசிக்கிறேன். தேவ தூதர்கள் அதை அறிந்திருந்தனர். அது அவர்களுக்கு வெளிப் படுத்தப்பட்டிருந்தது. அவர்கள் அதை அறிந்திருந்தனர். ஏனென்றால் அவர்கள் குன்றின் மீதிருந்து வந்தனர். ஒருவேளை சிறிய மரியாள் அங்கே களைப்படைந்து புழுதியாய் உட்கார்ந்து கொண்டிருந்திருக்கலாம். ஒரு பரிதாபமான பண்டைய ஆடுமேய்க்கும் பையன் ஆட்டைப்போல துர்நாற்றம் வீச அருகில் வந்து, ஏதோ ஒன்றை மனதில் கொண்டவனாய் அந்த இரவு அங்கு அமர்ந்திருந்த அந்த சிறு தாயாரைக் கண்டான். இன்றைக்கு ஏதோ ஒன்று சம்பவிக்கப்போவதை ஜனங்கள் காணக் கூடியது போன்றே பயங்கரமான நேரங்களில் ஜனங்கள் எந்த வழியாய் திரும்ப வேண்டும் என்பதை அறிந்து கொள்கிறதில்லை. ஒருக்கால் பண்டைய ஆடு மேய்க்கும் சிறுவன் அருகில் வந்து அந்த சிறிய தாயாரைக் கண்டிருக்கலாம். ஏதோ ஒன்று அவனுக்கு மனதில்பட்டது. அவன், “நான் இந்த துருத்தியில் இங்கே கொஞ்சம் குளிர்ந்த தண்ணீரை வைத்திருக்கிறேன். நீங்கள் அதை குடிக்க விரும்புகிறீர்களா?'' என்றான். தாயாகவிருந்தவள் அந்த குடிதண்ணீ ரைப் பருக, சிறு குடும்பமே அவனுக்கு நன்றி கூறினது. 65ஒருக்கால் அது அன்றிரவு அந்த குன்றின் மேல் அங்கே படுத்துக் கொண்டிருந்த ஆடு மேய்ப்பவர்களில் ஒருவனாய் இருக்கலாம். அங்கே கீழே தொழுவத்திலோ ஒரு சிறு குழந்தை அழுது கொண்டிருந்தது. ஓ, அப்பொழுதோ, உலகத்தில், அவருக்கு இடமே இல்லாதிருந்தது. யாருக்குமே அவர் தேவைப்படவில்லை. ஆனால் அதே சமயத்தில் குன்றின் மீது இருந்த ஒரு மேய்ப்பனிடத்தில் தேவ தூதர்கள் வந்திறங்கி, “இன்று கிறிஸ்து எனும் இரட்சகர் உங்களுக்கு தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” என்று முதல் கிறிஸ்மஸ் பாடலை பாடத் துவங்கினர். அது வெளிப் படுத்தப்பட்டது. அதுவே இந்த உலகத்தில் உள்ள எவரும் அந்த பொட்டலத்தில் என்ன உள்ளது என்பதை எப்போதுமே அறிந்து கொள்வதற்கான வழியாய் உள்ளது. அது உங்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டியதாக உள்ளது. நீங்களே அது ஒருஅது ஒரு மூட மதாபிமானம் என்று கூறி, அதை புறக்கணித்து விடுவீர்கள். ஆனால் நீங்கள் வெளிப்பாட்டை பெற்றுக்கொள்ளும் போது, நீங்கள் அதற்காக தேடுவீர்கள். அப்பொழுது நீங்களே திறந்து பார்ப்பீர்கள். நீங்கள் அவரை உள்ளே அனுமதிக்கும்படி வாசலைத் திறக்க ஆயத்தமாகிற போது தேவன் உள்ளே வந்து, உங்களோடே போஜனம் பண்ணுவார். நீங்கள் அவரோடே இருப்பீர்கள். அந்த சிறு பொட்டலம் உங்களுடைய இருதயத்தை தட்டுகிறது. அது முதலான ஒன்றும், மகத்தான ஒன்றும், எப்போதும் கொடுக்கப்பட்டதிலேயே மகத்தான கிறிஸ்மஸ் வெகுமதியாய் உள்ளது. அந்த சிறு பொட்டலம் மனிதனுடைய இருதயத்தைத் தட்டி, ''நான் உள்ளே வந்து போஜனம் பண்ணுவேன்'' என்கிறது. அது உங்களுக்கு வெளிப்படுத்தப் படுகின்ற வரையிலும் நீங்கள் அதை ஒருபோதும் அறிந்து கொள்ளவே மாட்டீர்கள். அது உங்களுக்கே வெளிப்படுத்தப் படுகின்றபோது, அப்பொழுது நீங்கள் அதற்காக தேடச் செல்வீர்கள். 66அது ஜீவனாய் உள்ளது என்பதை நீங்கள் காணும்போது, அது மட்டுமே ஜீவ வழியாய் உள்ளது என்பதை காணும்போது, உங்களுடைய சபையானது உலர்ந்ததாயும், மரித்ததாயுமிருக்கும் போது, ஒரு போதகரோடு உங்களுடைய - உங்களுடைய கரங்குலுக்குதலை செய்கிறதை நீங்கள் காணும்போது அல்லது ஒரு உப்புத்தெளித்தலை நீங்கள் காணும்போது, அதனோடு செய்ய வேண்டியது ஒன்றுமேயில்லை. அப்பொழுதே நீங்கள் அலசி ஆராயச் செல்வீர்கள். நீங்கள் படுக்கையின் மேல் படுத்து மரித்துக் கொண்டிருக்கும் பொழுது மருத்துவர், ''உங்களுக்காக ஒன்றுமே விடப்பட்டிருக்கவில்லை. நீங்கள் ஒரு சில நிமிடங்களில் மரித்து விடுவீர்கள்“ என்று கூறுகிறபோது, அப்பொழுது நீங்கள் அந்த பொட்டலத்திற்குள்ளே நோக்கிப் பார்க்க விரும்புவீர்கள். இன்றிரவே அதற்குள்ளே நோக்கிப் பாருங்கள், ஏனெனில் அப்பொழுது அது உங்களிடத்திலிருந்து திருப்பப்படும். வேதம், ”இப்பொழுது நீங்கள் இருக்கின்றதைப் போன்ற, உங்களுடைய சுக ஜீவிய நாட்களில் நீங்கள் என்னை புறக்கணித்துத் தள்ளினால், ஆபத்து வருகின்றபோது, நானும் உங்களைப் பார்த்து நகைப்பேன்“ என்று கூறியுள்ளது. எனவே நீங்கள் இன்றிரவே அந்தப் பொட்டலத்தை அலசி ஆராய்ந்து பார்ப்பது மேலானது. 67இவை யாவையும் குறித்தென்ன? ஒளிகள், பரலோகத்தில் இருந்து வருகின்ற புனிதமான ஒளிகள், புகைப்படங்களாய் எடுக்கப் பட்டுள்ளன. மகத்தான அடையாளங்கள், பகுத்தறிதல்கள், வல்லமை, அந்நிய பாஷையில் பேசுதல், வியாக்கியானம் செய்தல், வரப்போகும் காரியங்களை கூறுதல், சுவிசேஷத்தின் வல்லமை, வியாதியஸ்தர் சுகமடைதல், புற்றுநோய் குணமடைதல், பார்வையற்ற கண்கள் திறக்கப்படுதல், இந்த எல்லா வகையான காரியங்களுமே உள்ளன. இவை யாவையும் குறித்தென்ன? “ஏன்? அது ஒரு கூட்ட பரிசுத்த உருளைகள்'' கவனமாயிருங்கள் ! அது கந்தலான ஆடையாய் இருக்கலாம். பிலேயாம் அவ்வண்ணமே செய்தான். இஸ்ரவேலைப் போன்ற ஜனத்தை தேவன் சபிக்கமாட்டார் என்பதை அவன் எப்படி சிந்தித்தான்? ஆனால் அவன் காண்பதற்கு தவறிப்போனான். பாவநிவர்த்தி செய்யும்படியாக அவர்களுக்கு முன்பாக சென்று கொண்டிருந்த வெண்கல சர்ப்பத்தையும், அடிக்கப்பட்ட கன்மலையையும் காண்பதற்குப் பதிலாக அவன் கந்தலான ஆடையையே கண்டான். 68அது இன்றைக்கும் அவ்வாறே உள்ளது. அவர் கடைசி நாட்களில் செய்வதாக வாக்களித்தபடியே ஜனங்களின் மத்தியிலே அற்புதங்களையும், பரிசுத்த ஆவியின் வல்லமையானது மேசியாவாகிய அவருடைய அடையாளங்களையும் செய்கிறதை காண்பதற்குப் பதிலாக கந்தையான ஆடையையே காண்கின்றனர். அவர், “லோத்தின் நாட்களில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷ குமாரன் வரும் நாட்களிலும் நடக்கும்” என்று கூறியுள்ளதுபோல, அவர் ஜனங்களின் மத்தியில் அதிசயங்களையும், இந்த அடையாளங்களையும் செய்யத் துவங்கும்போது, அவர் தம்மைத் தாமே ஜீவிக்கிறவராக காண்பிக்கிறார். அது என்ன ? ஏழ்மையும், தாழ்மையும் உள்ள ஏழ்மையான ஜனங்கள் மத்தியில்தானே! அவர்களோ அதை “மூடமதாபிமானம்” என்றழைத்துவிட்டு, அதை தள்ளிவிட்டுப் போய்விடுகிறார்கள். அது உங்களிடத்தி லிருந்து தூரச்செல்வதற்கு முன்பே கலந்தாராய்வது மேலானது. ஆம். 69இந்த துர்நாற்றம் கொண்ட மேய்ப்பர்களை, ஜனங்கள் அவர்களைச் சுற்றியிருப்பது கடினமாய் இருக்கும். அவர்கள் அங்கே படுத்துக்கிடப்பார்கள். அந்த ஆடுகளோடே, அவைகள் படுத்துக் கிடக்கிற அதே மரசட்டத்தின் மேலே, அதே இடத்தில் படுத்து உறங்குவார்கள். சரியாகக் கூறினால் அவைகளுக்கு உகந்ததாகும் வரையில், அவர்களை, நீங்கள் அவர்களை ஆடு வருவதை, நுகர்வதைப் போன்றே நுகர்ந்து அறிந்து கொள்ளக்கூடும். ஒரு மேய்ப்பன் ஆடுகளை மந்தையாகக் கூட்டி, அந்த ஆடுகளோடே சரியாக வாசலண்டையிலேயே படுத்துக் கொள்கிறான். அவைகளுக்கு மத்தியிலே படுத்துக்கொள்கிறான் என்பதை எவரும் அறிவர். இயேசு, “நானே ஆட்டுத் தொழுவத் திற்கு வாசல்” என்றார். நான் புனித தேசங்களில் .......... இல்லை சரியாகக் கூறினால் கிழக்கு தேசங்களில் இருக்கும் வரையில் அது எப்படி அவ்விதம் இருக்கும் என்று நான் அடிக்கடி வியந்திருக்கிறேன். மேய்ப்பனானவன் எவ்வாறு ஆடுகளை உள்ளே அனுப்பிய பின்னர் கதவண்டை படுத்துக் கொள்கிறான் என்பதை கண்டறிந்தேன். ஆடு அவனைக் கடந்து செல்லாமல் வெளியேற முடியாது. ஓநாய் அவனைக் கடந்து செல்லாமல் உள்ளே வரமுடியாது. அவனே வாசலாய் இருக்கிறான். 70நம்முடைய இருதயத்தின் வாசலில் இயேசுவானவர் படுத்திருக்கிறார் என்பதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். அவருக்குத் தெரியாமல் நாம் வெளியே செல்லவோ அல்லது எந்தக் காரியத்தையும் செய்யவோ முடியாது. எனவே அவரிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்க அவர் சகலத்தையும் நன்மைக்கேதுவாக செய்கிறார். அதுவோ, “ஏதோ காரியம் வந்து கொண்டிருக்கும் போது அதற்காக ஆயத்தப்படும்படி நம்மை எச்சரித்து, நம்முடைய இருதயத்தின் வாசலண்டையிலே படுத்துக்கிடக்கும் ஒரு - ஒரு - ஒரு மேய்ப்பனுக்காக, ஒரு இரட்சகருக்காக தேவனுக்கு நன்றி செலுத்தக் ” கூறி, தேவனைத் துதித்து, ஆரவாரமிட்டு நம்மை கூச்சலிடும்படி செய்ய வேண்டியதாய் உள்ளது. ஆம். 71தொலை தூரம் தேசத்தைக் கடந்து வந்திருந்த சில தாழ்மையான, வான சாஸ்திரிகள் இருந்தனர். அவர்கள் ஞானவான்கள், ''விண்மீன்களை உற்றுநோக்குபவர்கள்'' என்றே அழைக்கப்பட்டனர். அண்மையில் நான் கிழக்கில் இருந்தபோது அவர்கள் இன்னமும் அதேவிதமாகவே அமர்ந்திருந்தனர். அவர்கள் மிகவும் ஏழ்மையானவர்களாயும், ஒரு வகையான ஜனங்களாயும் இருக்கிறார்கள். அவர்கள் மூவராகவே செல்கிறார்கள். அவர்கள் வீதியிலே அமர்ந்திருக்கின்றனர். நானும், பில்லியும் இந்தியாவில் இருந்தோம். அவர்கள் அங்கே தூரத்தில் உள்ள இந்தியாவி லிருந்து அங்கிருந்துதான் வந்தனர். இப்பொழுது அவர்கள், “நாங்கள் கிழக்கிலே நட்சத்திரத்தைக் கண்டோம்'' என்றனர். அவர்கள் நட்சத்திரத்தைக் கண்டபோது, அவர்கள் கிழக்கிலே இருந்தனர். எருசலேம் மேற்கில் உள்ளது. எனவே இந்தியாவின் மேற்கே பாலஸ்தீனம் உள்ளது. எனவே அவர்கள் கிழக்கில் இருந்தபோது, அவர்கள் அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தனர். 72இப்பொழுது, இந்த வான சாஸ்திரிகள் கீழே சமமாய் ஒருபோதும் அமருகிறதில்லை. அவர்கள் அப்படியே குந்தியிருக்கும் நிலையிலேயே இருக்கிறார்கள். அவர்கள் பகல் நேரம் முழுவதும் அங்கு படுத்துக்கிடக்கிறார்கள். இரவு நேரத்திலோ, அவர்களுக்கு ஒரு கோபுரம் உள்ளது. அவர்கள் அங்கே போய் இந்த கோபுரத்திலே தரித்திருக்கிறார்கள். அவர்கள் தீயை எரியவிட்டு, தேசங்களைக் குறித்தும், இராஜ்ஜியங்களின் வீழ்ச்சியைக் குறித்தும், பேரரசர்களின் வீழ்ச்சியைக் குறித்தும் பேசுகிறார்கள். அவர்கள் - அவர்கள் ஒரே மெய் தேவனை ஆராதிக்கிறார்கள். அது உண்மை . அவர்கள் - அவர்கள் விசுவாசிகளாய் உள்ளனர். அவர்கள் முகமதியர்கள். உண்மையிலே, அது முன்னர் தானியேலின் நாட்களில் இருந்த மேதினிய பெர்சியர்களிடமிருந்து தோன்றியது. அவர்க ள் .......... பேதுரு அப்போஸ்தலர் நடபடிகள் 10 : 35-ல் கூறியுள்ளான், அதாவது அவன், “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ, அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன்'' என்றான். தேவனுக்கு பயப்படும் எந்த மனிதனுமே. அங்கிருந்த அந்த வானசாஸ்திரிகளைப் பாருங்கள், பக்தியான ஜனங்கள் மத்தியிலும், எருசலேமிலே ஆலயத்தில் இருந்த ஆசாரியர்களுக்கு முன்னமே, தேவனுடைய வெகுமதியான நட்சத்திரத்தைக் கண்டு, அதை அடையாளம் கண்டு கொண்டனர். ஆம், ஐயா. ஆமென். 73ஒரு வானசாஸ்திரி, ஒருநாள் இரவு அவர்கள் அந்த புனித அக்கினியைச் சுற்றிலுமாய் அமர்ந்திருப்பதை என்னால் காண முடிகிறது. (நமக்கு இன்னும் சற்று நேரம் உண்டாயிருக்கிறதா? ஆம்) அந்த புனிதத் தீயைச் சுற்றி அமர்ந்து கொண்டும், அப்பொழுது அவர்கள் போகவிருந்ததை பேசிக்கொண்டிருக்கிற தையும் காணமுடிகிறது. ஓ, அவர்கள் வானொளிக் கோளங்களை (Heavenly Body) ஆராய்ந்திருந்தனர். அவர்கள் அவைகள் எல்லாவற்றையும் குறித்து நன்கு அறிந்திருந்தனர். அவர்கள் அதைக் குறித்த ஒவ்வொரு அசைவையும் அறிந்திருந்தனர். எனவே ஓர் இரவு அவர்கள் அங்கு அமர்ந்துகொண்டு, ஞானப் பாட்டுகளை பாடிக்கொண்டிருந்திருக்கலாம். அவர்கள் இந்த மகத் தான காரியங்களைக் குறித்து மேலே சென்று ஆராய்ந்திருக்கலாம். அவர்கள் ஒவ்வொரு நட்சத்திரத்தையும், அது எங்கே தரித்திருந்தது என்பதையும் அறிந்திருந்தனர். அவர்கள் அந்த வானொளிக் கோளங்களை படித்து ஆராய்ந்திருந்தபடியால், அதன் பெயரைக் கொண்டே அறிந்திருந்தனர். அந்த வானொளிக் கோளங்களுக்கு மத்தியில் இருந்த விநோதமான ஒன்று அவர்களை கிளர்ச்சி யூட்டியதில் வியப்பொன்றுமில்லை. அவர்களோ, “நல்லது'', ”இங்குள்ள இந்த புதிய கூட்டாளி யார்?“ என்று வியந்தனர். ஓ, என்னே! ”ஏதோவொன்று புதியதாய் சம்பவித்துள்ளது, அது இயற்கைக்கு மேம்பட்டதாய் உள்ளது“. அதாவது அதை என்ன வென்று அழைத்தனர்? வேதாகமத்திற்கு திரும்பிச் சென்றனர். 74இப்பொழுது, அவர்கள் வேத வாக்கியங்களை அறிந்திருந்தனர். ஏனென்றால் தானியேல் அவர்களுடைய தலைவனாய் இருந்தான். நீங்கள் அதை அறிவீர்கள். அவன் அவர்களுக்கு தலைவனாக வைக்கப்பட்டான் என்று தானியேல் 2-ம் அதிகாரம் நமக்கு கூறுகிறது. எனவே அவன் அவர்களுக்கு போதித்தான். ஓர் இரவு அவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி அங்கே அமர்ந்துகொண்டு, தானியேல் கண்ட இந்த எல்லா இராஜ்ஜியங்களைக் குறித்தும், முடிவிலே அவைகள் என்ன வாயிருக்கும் என்றும், அவை ஒவ்வொன்றையுங் குறித்தும், மேதிய - பெர்சியர்கள் மற்றும் அவை வீழ்ச்சியுற்று ரோமாபுரி யண்டைக்குள்ளாக வந்து சேரும் என்று அவன் கூறினதைக் குறித்து வேத வாக்கியங்களில் வாசித்துக் கொண்டிருந்தனர். பின்னர் முடிவிலே அவன், “கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல்லைக் கண்டான்.'' அவர்கள், ''அது அந்த நேரத்தைப் பற்றியதாய் இருக்க வேண்டும்” என்றனர். பின்னர் அவர்கள் அந்த காலத்தில் முன்பிருந்தவர்கள் முதல் தொடங்கி முடிவுமட்டுமாய் நினைத்துப் பார்த்து, பின்னர் இஸ்ரவேலின் யாத்திரை நாட்களில், அவர்கள் வந்தபோது, அவன், ''ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும்“ என்று கூறினதையும் நினைவு கூர்ந்தனர். ஆமென். அது அந்த நேரத்தைக் குறித்ததாய் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் அந்த காரியங்களை குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கும் போது, அந்த புதிய வருகையாளன் தோன்றினான். 75வழக்கமாகவே, நீங்கள் உங்கள் சிந்தையை கிறிஸ்துவின் மேல் வைக்கின்றபோதே அவர் உங்களிடத்திற்கு வருகிறார். வழக்கமாகவே, சாதாரண நேரங்களிலேயே, நீங்கள் அவரைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கும்போது அவர் தோன்றுகிறார். நீங்கள் சரியானதை பெற்றுக்கொள்வதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது, சரியான ஏதோ ஒன்றை செய்ய சிந்தித்துக் கொண்டிருக்கும்பொழுது அப்பொழுதுதான் அவர் உங்களுக்கு உதவி செய்ய உங்களிடத்திற்கு வருகிறார். அது அந்த நேரமாய் இருந்திருக்க வேண்டும். அவர்கள் - அவர்கள் மேலே நோக்கிப்பார்த்து இந்த புதிய வருகையாளனை கண்டிருக்க வேண்டும். அது அவர்களை மேற்கு நோக்கி வழி நடத்தத் துவங்கினது. அவர்கள் துரிதமாக மேற்கு நோக்கி செல்லத் துவங்கினர். அது அவர்களை டைகிரீஸ் நதியினைக் கடந்து, பாலைவனங்களினூடாகவும், மலைகளினூடாகவும், நீர்நிலைகளி னூடாகவும், ஓ, என்னே தொடர்ந்து வழிநடத்திக் கொண்டே சென்றது. ஏதோ காரியம் சம்பவித்துக் கொண்டிருந்தது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். இயற்கைக்கு மேம்பட்ட ஒரு காரியம் சம்பவித்திருந்தது. 76அவர்கள் எங்கே வந்தனர்? அவர்கள், “நிச்சயமாகவே, இது தானியேலினுடைய தீர்க்கதரிசனமாக இருக்கின்றபடியால், அந்த மகத்தான எருசலேம் நகரம், அந்த தேச ஜனங்களின் மத சம்மந்தமான தலைநகரம் தங்களுடைய இராஜாவை ஏற்றுக் கொள்ள ஆயத்தமாய் இருக்கும். நாம் அங்கு சென்றடையும் போது அவர்கள் அதைக்குறித்த எல்லாவற்றையும் அறிந்து கொள்வார்கள். அது எவ்வாறாக இருப்பினும் நாமும் கூட அதை புரிந்து கொள்ளவில்லையே. நாம் வானசாஸ்திரிகள், ஏழ்மையான, தாழ்மையான ஜனங்கள். ஆனால் நாம் ஏதோ ஒன்றிற்காக எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறோம். நாம் நமக்கு மத்தியிலே ஏதோ ஒன்று எழும்புவதை காண்கிறோம். அது சற்று இயற்கைக்கு மேம்பட்ட ஒன்றாய் உள்ளது' என்றனர். ஒ, என்னே! அவர்கள் ஆயத்தமாய் இருந்தனர். அல்லேலூயா! அவர்கள் தேவனுடைய நட்சத்திர-தூதனைக் கண்டறிய தாழ்மையான மனிதர்களாய் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் அந்த பரிபூரண ஒளியண்டை வரும்மட்டாக அவர்கள் தேவனுடைய நட்சத்திர - தூதனை பின்தொடர்ந்து சென்றுகொண்டேயிருந்தனர். ஓ! 77வெளிப்படுத்தின விசேஷம், வெளிப்படுத்தின விசேஷம் 1:20, “இந்த சபைகளின் நட்சத்திரங்கள்'' என்று கூறியுள்ளது. நாம் அந்த நட்சத்திர ஒளியைக் கண்டறிய இன்றைக்கு என்ன செய்ய வேண்டியவர்களாய் இருக்கிறோம். ஆமென். அது அவருடைய மகிமையை பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது. அது அவருடைய வல்லமையை பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது. அது அவருடைய தெய்வத்துவத்தை பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது. நாம் அந்த பரிபூரண ஒளியைக் கண்டறியுமட்டாய் பின்தொடருவோம். ”தொடர்ந்து மேற்கு நோக்கி வழிநடத்தும், அப்படியே வழிநடத்திச் செல்லும். அந்த பரிபூரண ஒளியண்டைக்கு எங்களை வழிநடத்தும்.'' ஓ, அப்படியே தொடர்ந்து செல்லுவோம், கிரயம் என்னவானாலும் கவலையில்லை; மலைகளின் மேலும், கீழே காடுகளினூடாகவும் எல்லாவிடத்திலும் தொடர்ந்து செல்வோம். 78முடிவிலே அவர்கள் எருசலேமை சென்றடைந்தனர். அவர்கள் இந்த மகத்தான பெரிய ஸ்தாபன சபையை சென்றடைந்த வுடனே, நட்சத்திரம் அவர்களை விட்டுச் சென்றது. வினோதம். அவர்கள், “அது இங்கிருக்க வேண்டும்” என்று எண்ணினர். எனவே அவர்கள் நகரத்திற்குள் சென்று, ஒவ்வொரு சந்திலும், தெருக்களினூடாகவும் மேலும் கீழுமாய், ஓடி, பாடி கூச்சலிட்டனர். ''யூதருக்கு ராஜாவாக பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம். அவர் எங்கே?“ என்றனர். அவர்கள் தங்கள் சொந்த வட்டாரங்களில் சரியான பதிலை பெற்றுக்கொள்ளாதிருந்தது விநோதமே. ஓ , என்னே! இப்பொழுது ஏறக்குறைய என்னால் அந்நிய பாஷைகளில் பேசக்கூடும். அவர்கள் பதிலை பெற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது அவர்கள் பதிலை பெற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் இப்பொழுதும் அதை பெற்றிருக்கவில்லை. அவர்கள் அறிந்து கொள்ளவில்லை. சாஸ்திரிகள் அவர்களுடைய மார்க்க வட்டாரத்தில் இயேசுவைக் கண்டறியவில்லை. அவர்களுடைய மார்க்கத்திற்குப் புறம்பே அவர் கண்டறியப்பட்டார். இன்றைய ஞானவான்கள், இருதயத்தில் ஞான முள்ளவர்கள். அதை இந்த பெரிய ஸ்தாபனங்களில் கண்டறிகிற தில்லை. அவர்கள் அதைக் குறித்து ஒன்றுமே அறிந்திருப்பதில்லை. அவர்கள் பதிலை பெற்றிருக்கவில்லை. ''சம்பவித்துக் கொண்டிருக்கிற இந்த தெய்வீக சுகமளித்தல் யாவையுங்குறித்து என்ன?“ அவர்கள், ”அந்நிய பாஷைகள், வியாக்கியானங்கள், தீர்க்கதரிசனங்கள் மற்றும் இது, அந்த ....... மேசியாவின் அடையாளங்கள் இவை யாவையுங் குறித்து என்ன? ஓ, அது அர்த்தமற்றது. அது ஒன்றுமற்றதாய் உள்ளது. இல்லை ........ அது ஒன்றுமற்றதாய் உள்ளது'' என்கிறார்கள். புரிகின்றதா? அவர்கள் பதிலை பெற்றிருக்கவில்லை. அப்பொழுதும் அவர்கள் அதன் பதிலை பெற்றிருக்கவில்லை. இப்பொழுதும் அதன் பதிலை பெற்றிருக்கவில்லை. 79ஆனால் அது ஒரு காரியத்தைச் செய்தது. அது அவர்களை ஆராய்ச்சி செய்யத் துவக்கினது. இப்பொழுது நம்முடைய சகோதரர் டியூப்பிளிஸஸ் (Duplisus) அதன்பேரில் சரியான விதமாக பேச முற்பட்டார் என்று நான் கருதுகிறேன். அவர்கள் திரும்பிச் சென்றனர். உறங்கும் கன்னிகைகள் எண்ணெய் வாங்குவதற்கு திரும்பிச் சென்றுவிட்டனர். ஆனால் அவர்கள் அதனை வாங்கும்படி சென்றுவிட்டபொழுதுதானே அவர் வந்தார். எனவே நாம் இந்த பெரிய சபைகள் திரும்பிச் சென்று, “நல்லது, நாம் ஏதோ ஒன்றை விட்டுவிட்டிருக்கலாம். நாம் அதைக் கண்டறிவது நலமாயிருக்குமல்லவா?'' என்று கூறுகிறதைக் காணும்போது நாம் இப்பொழுது எவ்வளவு சமீபமாய் இருக்கிறோம். அவர்கள் அதை ஒருபோதும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். அதை அப்படியே நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் ஒருபோதும், அதை ஒருபோதும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் மரித்து விட்டனர். அவர்கள் மரித்து விட்டனர். மரித்தே போய் விட்டனர். அவ்வளவுதான். அவர்கள் ஒருபோதும் உயிர்த்தெழ மாட்டார்கள். நினைவிருக்கட்டும், நான் கர்த்தருடைய நாமத்தில் உரைக்கிறேன். இது ஒலிநாடாவில் பதிவாகிறது. ஆம் ஐயா. அவர்கள் ஒருபோதும் உயிர்த்தெழவேமாட்டார்கள். அவர்கள் தீர்ந்துவிட்டனர். ஆகையால் அந்த காரணத்தினால்தான் நான் அவர்களுடைய நிகழ்ச்சியில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. நான் ஒரு காரியத்தில் ஆர்வம் கொண்டிருக்கிறேன். அதாவது ”விருப்பமுள்ளவன் எவனோ“ என்பதை என்னால் முடிந்த அளவு முழக்கமிடுவதில் மட்டுமே. ஒரு ஸ்தாபனத்தை உயிர்த்தெழச் செய்ய அல்ல, ஆனால் இயேசு கிறிஸ்துவண்டை திரும்ப கொண்டு வருவதற்காகும். ஆம் ஐயா. ஒருபோதும் ஒரு ஸ்தாபனத்தில் அல்ல! அது தேவனுக்கு விரோதமாய் உள்ளது. எப்பொழுதுமே விரோதமாக இருந்து வருகிறது. எப்பொழுதும் விரோதமாகவே இருக்கும்; அது தேவனை வெளிப்புறத்தில் கட்டுப்படுத்தி, தேவ பக்தியாயிருக்கிற ஒவ்வொரு காரியத்தையும் புறக்கணிக்கிறது. அது ஒருபோதும் உயிர்த்தெழாது. எனவே இந்த கிறிஸ்மஸில் வித்தியாசம் ஒன்றுமேயில்லை. அது முதல் கிறிஸ்மஸாக இருந்தது. இதுவும் அதே காரியம்தான். அந்த வானசாஸ்திரிகள் நகரத்தில் மேலும் கீழுமாக சென்று கொண்டு , ” அவர் எங்கே? அவர் எங்கே?“ என்றனர். ஒ, என்னே! 80அப்படியே ஒரு நிமிடம் நான் இங்கே நிறுத்தட்டும். நான் ஒரு திரைப்படம் வைத்திருக்கிறேன். இப்பொழுது நான் அதை இங்கே வைத்திருக்கவில்லை. யாரோ ஒரு வைத்தியர் அதை வைத்திருக்கிறார். வைத்தியர் டில்லி (Dillie) என்னுடைய கூட்டத்தில் சுகமடைந்த ஒரு - ஒரு - ஒரு பெண் வைத்தியர் அதை வைத்திருக்கிறார். நள்ளிரவிற்கு மூன்று நிமிடங்கள் என்று பெயரிடப்பட்ட அந்த ஒளிநாடாவை இப்பொழுது அவள் வைத்திருக் கிறாள். யூதர்கள், இப்பொழுது அவர்கள் அங்கே தங்களுடைய தேசத்திற்குள்ளாக வருகிறதை நாம் கண்டபோது, இப்பொழுது சரியாக பாலஸ்தீனாவில் உள்ளனர். அவர்கள் அதைச் செய்வார்கள் என்று கர்த்தரால் உரைக்கப்பட்டது. அவருடைய இரண்டாம் வருகைக்கு முன்னதாக அவர்கள் அதைச் செய்வார்கள். அன்றொரு நாள் இங்குள்ள ஒரு சகோதரன் இஸ்ரவேலுக்கு செல்லும்படியாக, “நான் அங்கு செல்லமுடியுமா?” என்று கேட்டார். அவர் கூறினதை மறுத்துவிட்டேன். இஸ்ரவேல் ஒரு தேசமாகவே இரட்சிக்கப்படுமேயன்றி தனிப்பட்ட நபராய் அல்ல. “ஒரு தேசமாய் பிறப்பிக்கப்படும்”. அது ஒரு தேசமாய் இரட்சிக்கப்படும். 81ஆனால் பாருங்கள், அந்த ஏழ்மையான யூதர்கள் முன்னர் அங்கே ஈரானிலும் மற்றும் வெவ்வேறு இடங்களிலும் இருந்தனர். நீங்கள் அதை லைப் பத்திரிக்கையில் (Life Magazine) வாசித்திருக்கிறீர்கள். அவர்கள் ஆகாய விமானங்களில் ஏறிச் செல்ல விரும்பவில்லை. அவர்கள் அதைப்போன்ற ஒன்றை கண்டதேயில்லை. அவர்கள் பண்டைய மரத்தால் செய்யப்பட்ட ஏர் கலப்பைகளையும், பொருட்களையும் கொண்டே உழுது கொண்டிருந்தனர். அவர்கள் கூறினர் ....... ஏன்? அங்கு ரபி ஒருவர் அடியெடுத்து வைத்து, “ஒரு நிமிடம் பொறுங்கள். நாங்கள் தாய்நாட்டிற்கு திரும்பிச் செல்லும்போது, நாங்கள் கழுகின் செட்டைகளின் மேலே செல்லுவோம் என்று எங்களுடைய தீர்க்கதரிசி எங்களுக்குச் சொல்லவில்லையா?'' என்றார். ஓ, என்னே ! அவர்கள் வந்து (TWA) ஆகாயவிமானங்களில் ஏறி பறந்து சென்றனர். அவைகள் விசைப்பொறியால் இயக்கப்பட்டன என்பதை தீர்க்கதரிசி அறிந்திருக்கவில்லை. அவை பெரிய கழுகுகளைப் போன்றே காணப்பட்டன. அவைகள் கழுகுகளைப் போலவே ஆகாயமார்க்கத்தில் சென்றன. ஆகையால் தீர்க்கதரிசி, “நீங்கள் திரும்பிவரும்போது .......” என்று கூறினாள். அது இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்தது. ஓ, தேவனே! இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு, அவர்கள் ரோமர் களால் சிறைப்படுத்தப்பட்டு கொண்டு செல்லப்பட்ட போது, உலகத்தின் திசைகளில் சிதறடிக்கப்பட்டனர். அவர், “அவர்களை ......... நான் அவர்களை மறக்க மாட்டேன். நான் அவர்களை மீண்டும் திரும்ப அழைத்து வருவேன். ஆனால் நான் அவர் களுடைய கண்களை குருடாக்கப் போகிறேன். அதனால் புறஜாதி யாரை, அவர்களை என் நாமம் தரிக்கப்பட்டவர்களாக, என் நாமத்தின் நிமித்தமாக அங்கிருந்து நான் ஒரு கூட்ட ஜனத்தை தெரிந்து கொள்ள முடியும். அந்த நாள் முடிவுறும்போது நான் அவர்களை மீண்டுமாய் கூட்டிச் சேர்ப்பேன். அவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பும்போது அவர்கள் இந்த விதமான இயந்திரக்கருவிகளால் வருவார்கள்'' என்றார். அவர்கள் எழும்பி, கடந்து வருவதை ஏசாயா கண்டான். அவன், ”கழுகுகளின் செட்டைகளின் மேலே'' என்றான். 82அந்த வயோதிப ரபீ அங்கே நின்று, “நாங்கள் முடிவு காலத்தின்போது 'கழுகின் செட்டைகளின் மேல்' செல்வோம் என்று எங்கள் தீர்க்கதரிசி கூறினாரே'' என்றார். அவர்கள் ஆகாய விமானத்தின் மீது ஏறினர். அவர்கள் அங்கிருந்து இறங்கினவுடன், வயோதிபர்களையும், குருடர்களையும், முடமானவர்களையும் தங்களுடைய தோள்களின் மேல் சுமந்து கொண்டே அவர்கள் அங்கிருந்து நடந்து சென்றனர். அவர்கள் இவர்களோடே பேட்டி கண்டனர். நான் அந்த ஒளிநாடாவை வைத்திருக்கிறேன். அதில், “நீங்கள் இங்கு வீட்டிற்கு, தாய்நாட்டிற்கு, தாய்நாட்டில் மரிப்பதற்காகவா வந்துள்ளீர்கள்?” என்று கேட்டனர். அதற்கு, “இல்லை, நாங்கள் மேசியாவைக் காண வருகிறோம்” என்றனர். ஓ, சகோதரனே, காரியம் என்ன? அவர்களுடைய சபையானது பதிலை பெற்றிருக்கவில்லை. காரியம் என்ன? சகோதரனே நாம் கடைசி காலத்தில் இருக்கிறோம். சாயங்கால வெளிச்சங்கள் பிரகாசித்துக் கொண்டிருக்கும்போது, பரிசுத்த ஆவியின் வல்லமையானது மீண்டுமாய் திரும்பவும் அது ஆரம்பத்தி லிருந்தது போன்றே அதே விதமாக சபையில் உள்ளது. தீர்க்கதரிசி, “சாயங்கால நேரத்திலே வெளிச்சம் உண்டாகும் ” என்றுரைத்தார். அவர்கள் ஏன் அங்கே கூடுகின்றார்கள் என்பதை சபையானது அறிந்து கொள்ளவில்லை. அவர்கள் பதிலை பெற்றிருக்கவில்லை. அது எவ்வாறாயினும் அணுகுண்டு அங்கே மேலே அவர்களுக்கான பதிலை பெற்றுள்ளது. நிச்சயமாக பெற்றுள்ளன. ஆனால் நாம் சாயங்கால நேரத்தில் உள்ளோம். நாம் நினைப்பதைக் காட்டிலும் காலதாமதமாய் உள்ளோம். நிச்சயமாக. 83இந்த வானசாஸ்திரிகள் தெருவில் மேலும் கீழுமாக நடந்தனர். அவர்களோ பதிலை பெற்றுக்கொள்ளவில்லை. “என்ன சம்பவித்தது? என்ன நேர்ந்தது?” முடிவாக அவர்கள் இதை பின் தொடரத் துவங்கினர் என்பதை நாம் கண்டறிகிறோம். அது அங்கே சென்றபோதும் அவர்கள் அதை கண்டறிய முடியாதிருந்தது. அவர்கள் நகரத்தில், தங்களுடைய மார்க்கரீதியான பிரிவுகளில் பதிலையே கண்டறிய முடியவில்லை. இல்லை. இப்பொழுதும் அவர்கள் ஒருபோதும் கண்டடைவதில்லை. அவர்களுக்கு என்ன? எருசலேமே, அவர்கள் இயற்கைக்கு மேம்பட்ட எந்த அடையாளத்தைக் குறித்தும் ஒன்றுமே அறிந்திருக்கவில்லை. “நீங்கள் எந்தவிதமான இயற்கைக்கு மேம்பட்ட ஒரு அடையாளத்தைக் குறித்துப் பேசுகிறீர்கள்?” “ஓ, நாங்கள் தூரத்தில் கிழக்கில் இருந்தபோது, நாங்கள் ஒரு நட்சத்திரத்தைக் கண்டோம். நாங்கள் அதை பின் தொடருகிறோம்.'' “அது எங்கே இருக்கிறது? நான் அதை காணவில்லை . நல்லது, நாங்கள் அதைக்குறித்து ஒன்றையுமே அறியோம்.'' அது வேத வாக்கியத்தை சரியாக நிறைவேற்றிக் கொண்டிருந்தது. 84ஆனால் அவர்கள் தங்களுடைய மார்க்கரீதியான குழுக்களிடத்தில் பதிலை பெற்றுக்கொள்ளவில்லை. இன்றைக்கும் அவர்கள் அதை பெற்றுக்கொள்ளவில்லை. அந்நிய பாஷைகளில் பேசுதல் என்பது என்ன? வியாதியஸ்தரை சுகப்படுத்தி, இந்த எல்லா அற்புதங்களையும் மற்ற காரியங்களையும் செய்து, சத்தமிட்டு, கூச்சலிட்டு, இந்த விதமான எல்லா காரியங்களையும் செய்யும்படி எழும்பியுள்ள இந்த கூட்ட ஜனங்கள் யார்? அங்கே முன்பு வேதாகமத்தில் அவர்கள் செய்தது போன்றே தோன்றுகிறது. “ஆ, அர்த்தமற்றது. அது ஒன்றுமே இல்லை .'' அவர்கள் இயற்கைக்கு மேம்பட்டதைக் குறித்து ஒன்றுமே அறியாதிருக்கிறார்கள். ஏன்? இதோ அது வருகிறது. அவர்கள் நட்சத்திர ஒளியை, ஒளியான நட்சத்திரத்தை, அந்த பரிபூரண ஒளியினிடத்திற்கு நடத்தும் தேவனுடைய திசைகாட்டியை பின்தொடர மாட்டார்கள். ஓ! “ஓ பெத்லகேமின் நட்சத்திரமே, மேற்கு நோக்கி வழிநடத்தும், தொடர்ந்து வழிநடத்தும், அந்த பரிபூரண ஒளியினிடத்திற்கு எங்களை வழிநடத்தும்.'' நாங்கள் இங்கு மேற்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டோம். எந்த விதமான ஒரு நட்சத்திரம்? அவருடைய சபை நட்சத்திரத்தை, பரிசுத்த ஆவியானவரை மானிடவர்க்கங்களுக்குள் அசைவாடு தலையே கண்டோம். நாங்கள் அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, நாங்கள் அவரை பணிந்து கொள்ள வந்திருக்கிறோம். ஆமென். அதுதான் இது. ஞானவான்கள், ஞானமுள்ள ஸ்திரீகள், இருதயத்தில் தாழ்மையாய் உள்ளவர்கள். நாங்கள் அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரை பணிந்து கொள்ள வந்திருக்கிறோம். 85ஓ, அவர்கள் அந்த இயற்கைக்கு மேம்பட்ட காரியங்களைக் குறித்து ஒன்றுமே அறிந்து கொள்ளவில்லை. அவர்கள் ஒளிகளையும் மற்ற காரியங்களையும் குறித்து ஒன்றுமே அறிந்து கொள்ளவில்லை. அவர்கள், அவர்கள் அதைக்குறித்து ஒன்றுமே அறியார்கள். அது அவர்களை கலக்கியது. நிச்சயமாக. இன்றைக்கும் அது அதே வண்ணமாக உள்ளது. எவ்வாறாயினும் அவர்கள் அதைக் குறித்து அறிந்திருக்கவில்லை. இன்றைக்கும் அவர்கள் அதைப் பற்றிய எந்த காரியத்தையுமே அறிந்து கொள்ளவில்லை. கவனியுங்கள். நான் இதை விரும்புகிறேன். ஓ! இதுதான் அருமையாய் உள்ளது. 86அவர்கள் அவர்களுடைய ஸ்தாபன பிரிவுகளில் இருந்த வரையிலும் நட்சத்திரம் அவர்களுக்கு தோன்றவேயில்லை. அது எருசலேமின் வாசல்களுக்கு வெளியே சென்று, வெளியிலேயே தங்கிவிட்டது. சகோதரனே! அவர்கள் அந்த ஸ்தாபன பிரிவுகளினூடாக நடந்த வரையிலும் வெளியிலேயே தரித்திருந்தது. “அவர் எங்கே? நிச்சயமாகவே போதகர்களாகிய நீங்கள் அதைக் குறித்து ஏதோ ஒன்றை அறிந்து கொண்டிருக்க வேண்டும். ரபீகளே உங்களைத்தான் , ஆசாரியர்களே உங்களைத்தான் இவை யாவையும் குறித்து என்ன? உங்களைத்தான், மெத்தோடிஸ்டு களாகிய உங்களைத்தான், பாப்டிஸ்டுகளே, பிரஸ்பிடேரியன்களே, கத்தோலிக்கர்களே உங்களைத்தான், அதைப்போன்ற பண்டைய சபைகளே உங்களைத்தான். நிச்சயமாகவே நீங்கள் அதற்கான பதிலை பெற்றிருக்கத்தான் வேண்டும். அவர் எங்கே?'' ஓ, என்னே! புரிகின்றதா? அவர்கள் அதைக் குறித்து ஒன்றையுமே அறிந்திருக்கவில்லை. அவர்கள் அதிலிருந்து வெளியே வரும் வரை அங்கே அவர்கள் அவர்களுடைய அந்தகாரத்திலேயே தரித்திருந்தனர். அவர்கள் அந்த நகரத்தை விட்டு வெளியேறின வுடனே, மீண்டுமாக அங்கு நட்சத்திரம் காணப்பட்டது. மகிமை! 87“என் ஜனங்களே, அவளை விட்டு வெளியே வாருங்கள்” என்று கர்த்தர் கூறினார். பாபிலோனை விட்டு வெளியே வா, குழப்பத்தை விட்டு வெளியே வா. உன்னுடைய கோட்பாடுகளையும் உன்னுடைய தற்புனைவான காரியங்களையும் விட்டு வெளியே வா. அப்பொழுது நான் உன்னை ஏற்றுக்கொள்வேன்“ என்று கர்த்தர் உரைக்கிறார். ”அவர்களுடைய அசுத்தமான காரியங்களை தொடாதே,“ சபையில் உள்ள அவர்களுடைய பீட்னிக் இன்னிசைக் குழுக்களிலும், பித்தலாட்டத்திலும் மற்றும் வேறு வகையான காரியத்திலும், நடனங்களிலும் பங்கு பெறாதே. 88இங்கு அண்மையில் என்னுடைய தாயார் என்னை அழைத்து, “பில், இங்கே கொஞ்சம் வா” என்றார். இன்றிரவு அவள் இங்கு எங்கோ அமர்ந்து கொண்டிருக்கிறாள் என்று நான் நினைக்கிறேன். நான் சென்றேன். நான் “காரியம் என்ன?” என்றேன். அவர்கள் என்னை அங்கே அழைத்திருந்தனர். இங்கே இந்தியானாவில் மேலே ஒரு பெரிய மெத்தோடிஸ்டு சபை இருந்தது. அதில் ஒரு ராக் அன்ட் ரோல் (Rock and Roll) நடனக்குழு இருந்தது. அவர்கள் போதகரை பேட்டி கண்டனர். அவர், ''நீண்ட காலமாகவே மெத்தோடிஸ்டு சபையானது அழகிய கலையான ராக் அன்ட் ரோல் நடனத்தை மறந்துள்ளது'' என்றார். பிசாசினால் பீடிக்கப்பட்டவர்களாயிற்றே! தேவனைக் குறித்து ஒன்றுமே அறியாதிருக்கிறார்கள். ஒரு மேய்ச்சல் தொழில் கொண்ட தென்னாப்பிரிக்கா நாடோடிக்கு எகிப்திய இரவு கதை பற்றி தெரிந்திருப்பதைக் காட்டிலும் தேவனைக் குறித்து ஒன்றுமே அறியாதிருக்கிறார்கள். அவர்கள் வெறுமனே ....... ஒரு முயல் பனிமிதியடிகளைக் குறித்து அறிந்துள்ளதைக் காட்டிலும் ஒன்றுமே அறியாதவர்கள். நீங்கள் 'அறிந்த ஒரே காரியம் வேத சாஸ்திரம். ஏதோ ஒரு மனிதனால் உண்டாக்கப்பட்ட கோட்பாடு என்ற ஒரு இடத்திற்கே நீங்கள் வருகின்றீர்கள். 89பரிசுத்த ஆவியின் வல்லமை உள்ளே வருகின்றபோது, நீங்கள் தேவனுடைய தீர்க்கதரிசியை ஏற்றுக் கொள்கிறீர்கள். நீங்கள் தேவனுடைய வெகுமதியாகிய பரிசுத்த ஆவியை ஏற்றுக் கொள்ளும்போது, ஒரு சபையில் எந்த அளவு ராக் அன்ட் ரோல் நடனத்தை கொண்டவர்களாய் இருக்க முடியும் என்பதை பாருங்கள். ஜான் வெஸ்லி பிரசங்கித்த சுவிசேஷத்திற்கு நீங்கள் திரும்பிச் செல்லும்போது, அதில் நீங்கள் எந்த அளவு அதை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை பாருங்கள். தேய்ந்துபோன பாதைகளிலிருந்து விலகிச் செல்லுங்கள். ஜான் ஸ்மித்தி னிடத்திற்கு திரும்பிச் செல்லுங்கள், இல்லையென்றால் பாப்டிஸ்டுகளே, மார்டின் லூதரண்டை திரும்பிச் செல்லுங்கள். ஆனால் அது என்ன? இன்றைக்கு அவர்கள் இயற்கைக்கு மேம்பட்டதைக் குறித்து ஒன்றையுமே அறியாதிருக்கிறார்கள். அது உண்மை. மெத்தோடிஸ்டு சபையானது தெய்வீக சுகமளித்தலைக் குறித்து ஒன்றுமே அறியாதிருக்கிறது. ஜான் அங்கே நின்றுகொண்டு தெய்வீக சுகமளித்தலை பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது, இங்கிலாந்தின் உயரிய சபையைச் சார்ந்த யாரோ ஒருவர் வந்து அவரை பரிகசித்து, ஒரு நரியையும், ஒரு கூட்ட வேட்டை நாய்களையும் அவிழ்த்துவிட்டார். அப்பொழுது அவர் தன்னுடைய விரலை அவனுடைய முகத்திற்கு நேராக சுட்டிக்காட்டி, “சூரிய அஸ்தமனத்திற்குள்ளாக மூன்று முறை நீ உனக்காக ஜெபிக்கும்படி என்னை அழைப்பாய்'' என்றார். அவன் அன்று மாலையே ஜானை அவனுக்காக ஜெபிக்கும்படி கூப்பிட்டுவிட்டு மரித்துப்போனான். 90ஏன் மெத்தோடிஸ்டு சபையானது மீண்டுமாக அந்த ஸ்தானத்திற்கு திரும்பக்கூடாது? ஏன்? ஏனென்றால் அது மரித்துப் போய்விட்டது. சரியே! நீங்கள் அந்த பொட்டலத்திற்குள்ளே உற்றுப் பார்க்க பயப்படுகின்றீர்கள். ஏனென்றால் அது உங்களுடைய பாவங்களை வெளிப்படுத்தும். மெத்தோடிஸ்டுகளே அந்த பொட்டலத்தை மீண்டுமாக திரும்பிப் பார்க்கும்படி நான் உங்களை அழைக்கிறேன். பாப்டிஸ்டுகளே அந்த பொட்டலத்தை மீண்டுமாக திரும்பிப் பார்க்கும்படி நான் உங்களை அழைக்கிறேன். பிரஸ்பிடேரியன்களே , மற்றுமுள்ள உங்கள் யாவரையுமே அழைக்கிறேன். பெந்தேகோஸ்தேக்களே , கத்தோலிக்கர்களே மற்றும் உங்கள் யாவரையும் இப்பொழுதே தேவனுடைய கிறிஸ்மஸ் பொட்டலத்தை திருப்பிப் பார்க்கும்படி அழைக்கிறேன். அந்த அன்பளிப்பை திரும்பிப் பாருங்கள். அதன் பெட்டியை தூக்கி எறிந்துவிட்டு, அன்பளிப்பை எடுத்துக் கொள்ளுங்கள். அதுதான் அது. அற்பமான கிறிஸ்மஸ் குட்டி கட்டுக்கதை ஒப்பனைகளி லிருந்து விலகியிருங்கள். தேவனுடைய வெகுமதியை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள். ஓ, அது ஏராளமான காரியங்களை வெளிப் படுத்தும் என்று நான் அறிவேன். அதுதான் உங்களுக்குத் தேவை. துப்புரவாக்குதல், துருவித்தேடுதல். சபையோரே அது பயங்கரமானது என்பதை நான் அறிவேன். ஆனால் நாம் அதை பெற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அது தேவனுடைய வார்த்தையாய் உள்ளது. ஆம் ஐயா. அது உங்களுக்கான நன்மையாக உள்ளது. சரி! ஓ , ஆம்! 91அவர்கள், அவர்கள் அந்த நகரத்தை அடைந்தபோது ஒளியானது போய்விட்டது. எனவே அங்கே ஏதோ காரியம் தவறாயிருந்தது என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர். அவர்கள் இந்த ஸ்தாபனத்தை சேர்ந்தவுடனே, ஒளியானது சென்று விட்டது. “காரியம் என்ன?'' அவர்களோ, ”அவர் எங்கே? அவர் எங்கே? நிச்சயமாகவே நான் அதை இங்கே கண்டறிவேன். இது ஒரு பழைய ஸ்தாபனம், நீண்ட காலமாகவே இங்கே இருந்து வருகிறது. அது ஸ்தாபனங்களின் தலைநகரமான வாடிகன் நகரமாய் உள்ளது. நல்லது, நிச்சயமாகவே நான் கண்டறியத்தான் வேண்டும். நான் அவரை இங்கே கண்டறியத்தான் வேண்டும். அவர் எங்கே? 'அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரா யிருக்கிறார்' என்று கிறிஸ்துவானவர் கூறினாரே, அவர் எங்கே? 'சாயங்கால நேரத்திலே வெளிச்சம் உண்டாகும்' என்று கூறினவர் எங்கே? 'நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள் என்றுரைத்தவர் எங்கே? அவர் எங்கே? அவர் எங்கே?“ என்று கூச்சலிடத் துவங்கினர். ஒளியானது வெளியே தரித்திருந்தது. அந்த காரியம் அவர்கள் மனதில்பட்டு, அந்த நகரத்திற்கு புறம்பே நடந்து சென்றபோது, அங்கே மீண்டுமாக ஒளி தோன்றினது. சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும், மகிமையின் பாதையை நீ நிச்சயம் கண்டைவாய்; விலையேறப்பெற்ற இயேசுவின் நாமத்தில் அடக்கம் பண்ண ப்படும், அந்த தண்ணீர் பாதையில்தான் இன்றைக்கு வெளிச்சம் உண்டு . வாலிபரே, வயோதிபரே, உங்களுடைய எல்லா பாவங்களையும் விட்டு மனந்திரும்புங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் நிச்சயமாக உள்ளே பிரவேசிப்பார்; சாயங்கால வெளிச்சங்கள் தோன்றியுள்ளன தேவனும் கிறிஸ்துவும் ஒன்றே என்பது மெய்யே. 92ஆம், சகோதரனே, ஆம், ஐயா. உங்களுடைய எல்லா பாவங்களிலிலுமிருந்து மனம் திரும்புங்கள். பரிசுத்த ஆவி, தேவனுடைய வரம் நிச்சயமாக உள்ளே பிரவேசிக்கும். அவர் வாசலண்டை இருக்கிறார். [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்க பீடத்தின் மேல் தட்டத் துவங்குகிறார். - ஆசி.] “என்னை உள்ளே அனுமதியுங்கள். நீங்கள் என்னை உள்ளே அனுமதித்தால், நான் உங்களோடு போஜனம் பண்ணுவேன். நான் இந்த காரியங்களை உங்களுக்கு வெளிப்படுத்துவேன். நான் இயற்கைக்கு மேம்பட்டதை உங்களுக்கு காண்பிப்பேன். நான் உங்களுடைய சுகவீனத்தை குணப்படுத்துவேன். நீங்கள் என்னை வெறுமனே உள்ளே அனுமதித்தால், நான் - நான் உங்களுக்கான இந்த எல்லா காரியங்களைக் குறித்தும் அக்கறை எடுத்துக் கொள்வேன்'' என்கிறார். [சகோதரன் பிரான்ஹாம் பிரசங்கபீடத்தின் மேல் தட்டுவதை நிறுத்துகிறார்.] 93இன்றைக்கு பரிசுத்த ஆவியின் ரூபத்தில் தேவனுடைய வெகுமதி பொட்டலம் சுற்றப்பட்டுள்ளது. அப்பொழுது அது சுற்றப் பட்டு, தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்பட்டது. தேவனுடைய வெகுமதி பொட்டலம் அப்படியே எடுத்துக் கொள்ளப் பட்டு, அது மீண்டுமாய் திரும்ப சுற்றப்பட்டு, திரும்பவும் அனுப்பப் பட்டுள்ளது. ஆமென். அப்பொழுது அது தேவனுடைய குமாரனில் சுற்றப்பட்டிருந்தது. இன்றைக்கோ அது சபை என்றழைக்கப் படுகின்ற தேவனுடைய குமாரர்களில் சுற்றப்பட்டிருக்கிறது. அது உண்மை . தேவனுடைய வெகுமதி பொட்டலம் ஜனங்களுக்கு சுற்றப்பட்டது. அப்பொழுது அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது போன்றே இன்றைக்கும் அவர்கள் அதை மறுத்து விட்டனர். ''அவர்கள் வீட்டெஜமானையே 'பெயல்செபூல்' என்றும், அவர் நினைவுகளை வகையறுக்க முடிந்த காரணத்தினால் ஒரு குறிசொல்பவன் என்றும் அழைப்பார்களேயானால், உங்களை அவ்விதம் அழைப்பது அதிக நிச்சயமல்லவா? அவர்கள் வீட்டெஜமானையே அழைக்கிறார்கள் ........'' ஓ, என்னே! நாம் கண்டறிவோமாக. ஆம், வானசாஸ்திரிகள், அவர்கள் அதை ஏற்றுக் கொண்டனர். அவர்கள் ஏழ்மையாயும், தாழ்மையாயும் இருந்தனர். அவர்கள் அந்த விநோதமான ஒளியை கண்டிருந்தனர். 94நான் இங்கு மற்றொரு காரியத்தை சரியாக கூறும்படி விரும்புகிறேன். அவர்கள் இந்த ஒளியைக் கண்டபோது, அவர்கள் மகிழ்ச்சியாயிருந்தனரே! வேதம், “அவர்கள் ஆனந்த சந்தோஷ மடைந்தார்கள்'' என்று கூறியுள்ளது . ஓ , அவர்கள் சிறிது கூச்சலிட்டனர் என்றே நான் கற்பனை செய்கிறேன். நீங்கள் அவ்விதமாய் கற்பனை செய்யவில்லையா? [சபையோர், ”ஆமென்“ என்கிறார்கள். - ஆசி.) நான் சற்று அப்படியே கற்பனை செய்கிறேன். ஆகையால் அங்கே நீண்ட காலமாக பண்டைய ஸ்தாபனத்தில் இருந்து வருகிற அவர்கள் கண்டு, ஏதோ காரியத்தை கண்டறிவதற்கு முயற்சித்தபோது அங்கே ஒன்றுமே இல்லாதிருந்தது. அவர்கள் வாசலுக்கு புறம்பே வந்தபோது, அவர்கள் மீண்டுமாக பரிசுத்த ஆவியின் ஒளியானது தூரத்திலே பிரகாசிப்பதைக் கண்டனர். அந்த நட்சத்திரத்தின் மகிமை அவர்களைக் கவர்ந்து ஈர்த்ததைக் கண்டனர். அவர்கள் மிகுந்த சந்தோஷமடைந்தனர். அவர்கள் ஆனந்த சந்தோஷமடைந்தனர். ஓ, ஒரு நபர் மிகுந்த சந்தோஷமடைகின்றபோது என்ன செய்கிறான்? நீங்கள் பந்து விளையாட்டில் மிகுந்த சந்தோஷ மடைகின்றபோது, நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஓ, நீங்கள், ''ஹுரா - ஹுரா - பிம்டி - பம்' அவன் ஆட்டக் களத்தில் ஓடப்பார்க்கிறான். ஹ - ஹா! ஓ - ஹூ!“ என்று கூச்சலிடுகிறீர்கள். புரிகின்றதா? 95நீங்கள் “ஆனந்த சந்தோஷமடையும் போது'' மகிமை! அல்லேலூயா! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! என்று கூச்சலிடுகிறீர்கள். அது உண்மை . ஆனந்த சந்தோஷமாயிற்றே! ”நட்சத்திரம் உண்டு. அதுவே நம்மை வழிநடத்துகிறதே ! ஓ, இந்த ஸ்தாபனங்களிலிருந்து எங்களை தூக்கியெடுத்து, அந்த பரிபூரண ஒளியண்டை எங்களை வழிநடத்தும். மேற்குநோக்கி வழிநடத்தி, தொடர்ந்து நடத்தி உம்முடைய பரிபூரண ஒளியண்டை எங்களை வழிநடத்தும்.'' அப்படியே தொடர்ந்து வழிநடத்தும். நட்சத்திரமே ஒளியண்டைக்கு வழிகாட்ட வேண்டியதாக இருந்தது. முடிவிலே, அது அந்த குழந்தையின் மீது தரித்து நின்றது. அவர்கள் ........ (ஒலிநாடாவில் காலி இடம். - ஆசி.) இன்னும் ஒருசில வினாடிகளே. சரி, சரி. 96அவர் தம்மை ஏழ்மையான செம்படவனுக்கு வெளிப்படுத்தினார். அவர் வெளிப்படுத்தப்பட்டார். அந்த பொட்டலத்தில் அதனுள்ளே என்ன இருந்தது என்பது படிப்பறியாத, கல்வி கற்காத ஏழ்மையான செம்படவனுக்கு வெளிப்படுத்தப்பட்டது. அவர் தங்களுடைய சொந்தப் பெயரையும் எழுத முடியாதிருந்த மனிதர்களுக்கு தம்மை வெளிப்படுத்தினார்.அவர்கள் ஒரு சபையில் ஒரு கண்காணியாகவோ அல்லது - அல்லது வேறெதோ ஒன்றாகவோ இருந்திருக்க முடியாது. அவர்கள் அவ்வாறிருந் திருக்க முடியாது. அவர்கள் அந்த அளவு கல்லாதவர்களாய் இருந்தனரே! ஓ, என்னே ! அவர்கள் பயங்கரமாக இருந்தனரே! ஆகையால் அவர் தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். வேண்டப்படாதவர்களுக்கும், புறம்பே தள்ளப்பட்டிருந்தவர்களுக்கும் தம்மை வெளிப்படுத்தினார். அவர் தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். நேசிக்கப்படாதவர்களுக்கும் தம்மை வெளிப்படுத்தினார். அவர் நேசிக்கப்படாதவர்களுக்கு அன்புக்குரிய வராய் இருந்தார். வியாதியஸ்தர்களுக்கு, அவர்களுக்கு சுகம் தேவைப்பட்டது. அவர்கள் அந்த பொட்டலத்திற்குள் நோக்கிப் பார்க்கவும், அதைக் குறித்து என்ன என்பதை காணவும் ஆர்வம் கொண்டிருந்தனர். அவர் தம்மை அவர்களுக்கு வெளிப்படுத் தினார். அவர் பசியாயிருந்தவர்களை அப்பங்களையும், மீன்களை யும் கொண்டு போஷித்தார். ஓ, நாம் அதிலேயே தரித்திருக்கும் படியாக நான் அதின்பேரில் ஏராளமான காரியத்தை எழுதி வைத்தேன். ஆனால் நாம் அதை விட்டுவிட வேண்டும். புரிகின்றதா? அன்புக்குரியவர்களாயிராத எல்லா ஜனங்களுக்கும் தம்மை வெளிப்படுத்தினார். அவர்கள் ஒருவரும் வேண்டப்படாத வர்களாய் “மூடமதாபிமானிகள்'' என்று அவர்கள் அழைக்கப்பட்ட போதிலும் அவர் தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்தினார். ”நான் அவர்களில் ஒருவனாக இருக்கிறேன் என்று நான் கூற முடிந்ததற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆம், ஐயா! அவர் அன்புக்குரியவர் களாயிராதவர்களுக்கு, வேண்டப்படாதவர்களுக்கு, வியாதியுள்ளவர் களுக்கு, தேவையுள்ளவர்களுக்கு, பசியுள்ளவர்களுக்கு தம்மை வெளிப்படுத்தினார். ஆம். 97நான் பசியாயிருந்த மற்றொரு நபரைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஒருநாள், பவுல் எனும் பெயர் கொண்ட மனிதன், அப்பொழுது சவுலாய், பசியுள்ள இருதயம் கொண்ட ஒருவனாக இருந்தான். தமஸ்குவிற்கு செல்லும் தன்னுடைய பாதையில் பசியாயிருந்தான். அவன் என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாதிருந்தான். அவன் தேவனுக்காக ஏதோ ஒன்றை செய்ய விரும்பினான். ஒரு ஒளி அவனைச் சுற்றி பிரகாசித்தது. “சவுலே, சவுலே நீ ஏன் என்னை துன்பப்படுத்துகிறாய்?” என்றது. அவர் ஒரு பசியுள்ள இருதயம் கொண்ட பவுலுக்கு தம்மை வெளிப்படுத்தினார். அவர் துர்கீர்த்தியுள்ள ஒரு ஸ்திரீக்கு, ஆக்கினைக்குட் படுத்தப்பட்ட ஒரு பரபாஸுக்கு தம்மை வெளிப்படுத்தினார். அது உண்மை . பசியுள்ள இருதயம் கொண்ட ஒரு மனிதனுக்கு, ஒரு துர்கீர்த்தியுள்ள ஸ்திரீக்கு, புறம்பே தள்ளப்பட்டிருந்த எல்லோருக்குமே தம்மை வெளிப்படுத்தினார். நான் அந்த புகழப் படாத ஸ்திரீயைக் குறித்து சிந்திக்கிறேன். அவளுக்காக வெறுமனே ஒரு வினாடி தயவுகூர்ந்து அப்படியே ஒரு நிமிடம் என்னோடே பொறுத்துக் கொள்ளுங்கள். 98வேதாகமத்தில் சீமோன் என்ற பரிசேயன், ஓ, அவனும் கூட இந்த வெகுமதியை அறிந்துகொள்ள விரும்பினான். அவனே விரும்பினான். ஆனால் அவன் தன்னுடைய சொந்த சுயநல விருப்பத்திற்காக தன்னுடைய சொந்த சுயநல எண்ணங்களை ஐயமற தெளிவுபடுத்திக் கொள்ள விரும்பினான். எனவே அந்த பரிசேயன், அவன் என்ன செய்தான்? அவன் ஒரு பெரிய விருந்து வைத்திருந்தான். அவன் யாரோ ஒருவரை பரியாசம் செய்ய எண்ணினான். வேதம், சுவிசேஷ செய்தி அதை நமக்கு தெரிவிக்கிறது. இப்பொழுது நாம் முடிப்பதற்கு முன்னதாக அப்படியே ஒரு நிமிடம் அதை கவனியுங்கள். அவன், “இயேசுவானவரை வரவழைக்க வேண்டும் என்று அவன் சற்றே விருப்பம் கொண்டான்” என்பதை கூறினான். ஏனென்றால் அந்த பரிசேயன் உண்மையாகவே இயேசுவை நேசித்தான் என்று நான் கருதவில்லை. காரணம், அவன் இயேசுவோடு பொதுவான கருத்து ஏதும் கொண்டிராதவனாய் இருந்தான். அவன் ஒரு பண்டைய விரைத்துப்போன பரிசேயனாய் இருந்தான். அவன் - அவன் இயேசுவை வெறுத்தான். எனவே அவர் உண்மையிலேயே ஒரு தீர்க்கதரிசிதானா அல்லது இல்லையா என்பதை காண, அவன் அங்கு அவரை வரவழைத்து, அவரிடம் ஒரு சில குறும்பு விளையாட்டுகளை விளையாடலாம் என்று எண்ணினான். 99எனவே அவர்களை அனுப்பி அவரை வரும்படி கேட்டுக் கொண்டான். தூதை கொண்டு செல்பவனோ ஓடிவந்தான். அநேகமாக முழுவதும் புழுதியாய் அங்கே நடந்து சென்றிருப்பான். அநேகமாக இயேசுவின் பக்கத்தில் ........ ஜனங்கள் நிற்க, சுகமளித்தல் நடந்து கொண்டிருந்திருக்கலாம். அவர் களைப்புற்றிருந்தார். முடிவிலே, “நீ இன்றைக்கு அவரை காண முடியாது” என்று கூறினது பேதுருவாக இருந்திருக்கலாம். அவன், “ஆனால், திருவாளரே, என்னுடைய எஜமான் சீமோன் ரபீ. அவர் இங்கு யூதேயாவில் உள்ள பெரிய சபையின் மேய்ப்பராய் இருக்கிறார். ஏன்? நீங்கள் ........ அவர், அவர் உங்களுடைய போதகர் வந்து அவரை காணும்படி அழைத்திருக்கிறார். ஓ, ஒ, ஓ, அது அவருக்கான என்ன-என்ன ஒரு பெரிய பெயராய் இருக்கும். பார்த்தீர்களா? நீங்கள் அவரைக் காண வேண்டும்” என்றான். அவன், “நல்லது, அவன் என்ன கூறுகிறான் என்பதை காணும்படி, நான் உம்மை அழைத்துச் செல்வேன்'' என்றான். எனவே அவன் கூட்டத்தினூடாக தள்ளிக்கொண்டு சென்றான். சூரியனோ ஏறக்குறைய அஸ்தமித்துக் கொண்டிருந்தது. இயேசுவானவர் களைப்படைந்து சோர்ந்து போயிருந்தார். இதோ அந்த சிறிய தூதுவன் வருகிறான். அவன் அதற்குப் பதிலாக ....... கிறிஸ்துவின் பிரசன்னத்திலே! ஓ, அந்த தூதுவனோடு இருந்த காரியம் என்னவென்பதைக் குறித்து நான் அவ்வப்போது வியந்திருக்கிறேன். அவனோடிருந்த தவறு என்ன? இயேசுவண்டை நெருங்கி நின்றபோதிலும், “என் எஜமான் நீங்கள் வந்து அவரைக் காண விரும்புகிறார். என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அவர் ஒரு விருந்தை அங்கே ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். அவர் நீங்கள் ஒரு கௌரவிக்கப்பட்ட விருந்தினராக வர விரும்புகிறார்” என்று பரிசேயனிடமிருந்த ஒரு செய்தியையே இன்னும் உடையவனாயிருந்தான். 100ஓ, நான் அந்த செய்தியை அவரண்டை கொண்டு சென்றிருக்கக்கூடுமானால் நலமாயிருந்திருக்கும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அதை விரும்பமாட்டீர்களா? (சபையோர், “ஆமென்” என்கிறார்கள். - ஆசி.) அந்த பரிசேயன் என்ன கூறினான் என்பதையே நான் ஒருபோதும் நினைவில் கொண்டிருந்திருக்கமாட்டேன். நான் அவருடைய பாதத்தண்டையிலே வீழ்ந்து, “ஓ, கர்த்தராகிய இயேசுவே, ஒரு பாவியாகிய என் மீது இரக்கமாயிரும்” என்று கூறியிருந்திருப்பேன். நான் அதை கூறியிருப்பேன் என்று நான் விசுவாசிக்கிறேன். நீங்கள் அவ்விதம் செய்யமாட்டீர்களா? (“ஆமென்” அவன் எவ்வளவு நெருக்கமாக இயேசுவண்டை நின்றபோதும் தன்னுடைய பாவங்களைக் குறித்து மன்னிக்கும்படியாக வேண்டிக்கொள்ளும் தருணத்தை நிராகரித்து விட்டான். அது அவருக்கு நெருக்கமாக இருந்ததே! இல்லை, அவன் தன்னுடைய சிந்தைனையில் மிகவும் அதிகமாகவே அறிந்து வைத்திருந்தான். அவன் வேலைக்காரனாக இருந்தான். எனவே அவன் பரிசேயனுக்காக கேட்க வேண்டியதாயிருந்தது. 101இயேசுவானவர், இயேசுவானவர் பரிதாபமாக சோர்வுற்று, களைப்படைந்திருந்தபோதிலும், அவர் அசட்டை செய்யப்பட்ட வராகவும், அவனால் வெறுக்கப்பட்டவராகவும் இருந்தார் என்பதை அறிந்திருந்து, “நான் அங்கிருப்பேன்” என்றே அவர் தன்னுடைய தலையை அசைத்து சம்மதம் தெரிவித்தார். அப்பொழுதும் அவர் அங்கே இருப்பார் என்றும், அவர் அங்கு இருப்பார் என்றே கூறுகிறார். நீங்கள் கவலைப்பட வேண்டாம். அவர் அங்கிருப்பார். அவரை ஒன்றுமே தடுத்து நிறுத்த இயலாது. ஆகையால் அந்த நாளில் அவர்கள் அங்கு சென்றபோது, இவர்கள் தங்களுடைய எல்லா கொழுத்த கன்றுகளையும் அடித்து, தங்களுடைய எல்லா புது திராட்சை ரசத்தையும் மற்ற எல்லாவற்றை யும் கொண்டு வந்தனர். ஆனால் அவர்கள் இருந்த இடத்திற்கு ஏழ்மையான ஜனங்கள் வர அனுமதிக்கப்படவில்லை . ஓ , அவர்கள் அந்த மாட்டிறைச்சியை வெளிப்புறத்தில் பொன்முறுவலாய் வறுத்த போதோ அந்த ஆகாரம் என்னே நறுமணம்! அந்த ஏழ்மையான ஜனங்கள் அங்கே வெளியே நிற்க, அப்படியே அவர்களுடைய வாயில் உமிழ்நீர் சுரந்தது. அவர்கள் உள்ளே வரமுடியாதிருந்தனர். இல்லை , ஐயா. அது எவ்வாறாயினும், அது வெறுமனே புகழ் வாய்ந்தோருக்கானதாக மட்டுமே இருந்தது. எனவே அப்பொழுது அவர்கள் வெளியேலே நின்றிருந்தனர். அவர்கள் எல்லா திராட்சைப்பழங்களையும் மற்றவைகளையும் அந்நேரத்தில் பூத்திருந்த மலர்களையும் இல்லை முழுமையான திராட்சை குலைகளையும் வைத்திருந்தனர். அந்த திராட்சைப் பழங்களின் அருமையான நறுமணம், அவைகள் இனிப்பாக உள்ள போதும் மற்றும் எல்லா காரியங்களும் உங்களுக்குத்தான் தெரியுமே. அவன் தன்னுடைய புதிய திராட்சை ரசத்தையும் மற்ற எல்லாவற்றையும் வைத்திருந்தான். 102இயேசுவானவர் எப்படி கவனிக்கப்படாமல் அங்கு உள்ளே சென்றார் என்று நான் அடிக்கடி வியந்திருக்கிறேன். கீழை நாடுகளில் எவராவது உங்களை அவர்களுடைய இல்லத்திற்கு எப்போதாவது வரும்படி அழைக்கும்போது, நல்லது, உங்களுக்குத் தான் தெரியுமே, அவர்களின் உபசரணையில் மகத்தான ஜனங்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது ஜனங்கள் அந்நாட் களில், அவர்கள் நடந்து செல்லும்போது, அவர்கள் பாதரட்சைகளை அணிந்திருப்பர். அப்பொழுது அவர்கள் செய்த பாதங்களை கழுவுதலைக் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதைத்தான் நாம் இங்கே நினைவுகூருதலாக செய்கிறோம். அது ஒழுங்காக இருந்தது. உங்களை யாராவது அவர்களுடைய வீட்டிற்கு வரும்படி கேட்டுக்கொள்ளும்போது, அப்பொழுது அது இதைப் போன்ற ஏதோ காரியமாய் இருக்கும். அவர்கள் உங்களை வாசலண்டையிலே வாழ்த்துவார்கள். பின்னர் அவர்கள் எல்லா ஜனங்களினாலும், ''மிகவும் கீழ்த்தரமான பணி“ என்று அழைக்கப்பட்ட பணியினை அவர்கள் வைத்திருந்தனர். அவர்களில் சிலர் ரதங்களை ஓட்டினர். அவர்களில் சிலர் சமைத்தனர். உங்களுக்குத் தெரியும், அவர்களில் சிலர் தலைமை சமையற்காரர்களாக இருந்தனர். அவர்களில் சிலர் உக்கிராணக்காரர்களாக இருந்தனர். ஆனால் வீட்டிலிருந்த எல்லாரிலுமே மிகவும் குறைவான ஊதியம் செலுத்தப் பட்ட மனிதன் பாதங்களைக் கழுவும் பணிவிடைக்காரனாக இருந்தான். அவன் வெறுமனே ஒரு அற்பமான பணியாளனாக இருந்தான். 103சிந்தித்துப் பாருங்கள், என்னுடைய கர்த்தர் பாதங்களைக் கழுவும் ஒரு பணிவிடைக்காரராக இருந்தார் . அப்படியிருந்தும் நாம் ஏதோ ஒன்றை சிந்தித்துக்கொண்டு, நாம் குறிப்பிடத்தக்கவர் களாக உள்ளோமே என்றே நினைத்துக் கொள்கிறோம். சீஷர்களுடைய பாதத்தை மீனவர்கள், அழுக்கான மீனவர்கள், மேய்ப்பர்கள் போன்றவர்களை, அவர்களுடைய பாதங்களைக் கழுவின அவரை நோக்கிப் பாருங்கள். இதோ அந்த பாதம் - கழுவும் பணிவிடையாளன். நீங்கள் வாசலண்டை வருகின்றபோது, அவர்கள் - அவர்கள் உங்களுடைய பாதங்களை கழுவுவார்கள். ஏனென்றால் அங்கே நீங்கள் நடந்து செல்லும்போது, உங்களுக்குத்தான் தெரியுமே, குதிரைகள் மற்றும் விலங்குகள் அங்கு புழுதியான சாலைகளில் நடப்பதினால் உண்டாகும் தூசிகள் மற்றும் அழுக்குகள் உங்கள் கால்களில் ஒட்டிக் கொள்ளும் என்பதை நீங்கள் அறிவீர்கள். அது உங்கள் மீது ஒரு துர்நாற்றத்தை உண்டாக்கிவிடும். அவ்வேளையில் அந்த சூரியன், உங்களுடைய கழுத்திற்கு மேல் இருக்கும் என்பதை அறிவீர்கள். அந்த பாலஸ்தீனாவில் சூரியனோ, அதனுடைய நேரடிக்கதிர்கள் உண்மையாகவே உஷ்ணமாக இருக்கும். ஆகையால் அவர்கள் வாசலண்டையில் வருகின்றபோது, அவர்கள் தங்களுடைய பாதரட்சைகளை வெளியிலே வைப்பர். இவர்கள் அவர்களுடைய பாதங்களை கழுவுவர். பின்னர் தங்களுடைய பாதரட்சைகளை அணிந்து கொள்வர். அவைகள் சுத்தமாய் தனியாக வைக்கப்பட்டிருக்கும். இன்றைக்கு படுக்கை அறைக்கான பாதரட்சைகளை ஸ்திரீகள் அணிந்து கொள்வது போல ஒரு சிறு ஜோடி காலணிகளை அணிந்து கொள்வார்கள். அதைப் போன்ற ஏதோ ஒன்றை அவர்கள் அணிந்து கொள்வார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அப்படியே அவர்களுடைய பாதங்களைக் கழுவுவர். 104அப்பொழுது அவர்கள் தங்களுடைய தோள்களின்மீது ஒரு துவாலையை வைத்திருப்பார்கள். அதன்பின்னர் அவன் என்ன செய்வானென்றால், இவன் அவனுடைய முகத்திலிருந்து தூசியை துடைப்பான். இலாமிச்சை எண்ணெயை உபயோகப்படுத்துவர். ஓ, அது ஐஸ்வரியமுள்ள ஜனங்கள் உபயோகித்து வந்த விலையுயர்ந்த பொருளாக இருந்தது. தென் தேசத்து ராஜஸ்திரீ அவைகளில் சிலவற்றைக் கொண்டுவந்து, சாலமோனுக்குக் கொடுத்தாள். அது கீழை நாடுகளிலுள்ள ஆப்பிளிலிருந்து தயாரிக்கப்பட்டது. ஒரு மலரைப்போன்று, ஒரு சிறு ஆப்பிள் மலரைப்போன்றே இருக்கும். அது அங்கிருந்தே கிடைக்கிறது. மிகவும் விலையுயர்ந்தது. அவர்கள் அந்த இலாமிச்சையை எடுத்து, இவர்கள் அதை அவர்களுடைய முகம் முழுவதிலும் தேய்ப்பார்கள். அப்படிப்பட்ட எண்ணெயை, ஏனென்றால் அவர்களுடைய கழுத்து கருகிப் போயிருக்கும். பின்னர் ஒரு துவாலையை எடுத்து அதை முழுவதுமாய் அப்படியே துடைப்பர். பின்னரே அவர்கள் புத்துணர்ச்சி அடைவர். 105இப்பொழுது அதுதான் முதல் காரியமாக இருக்கிறது. அந்த பாதம் - கழுவும் பணிவிடையாளனை அவர்கள் அவ்விதமாக ஆயத்தமாக வைத்திருந்தனர். உண்மையிலேயே அவர்கள் ஒரு மனிதனுடைய வீட்டிற்கு வருவதைப் போன்றோ, பாரசீகர்களால் உண்டாக்கப்பட்ட அங்குள்ள பெரிய முரட்டுக் கம்பளங்கள் போன்றோ, அவர்கள் ஒரு தொழுவத்தில் இருந்தபோது நுகர்ந்ததைப் போன்றோ, தங்களுடைய முகம் முழுவதிலும் சூரிய உஷ்ணத்தால் ஏற்பட்ட கொப்பளங்களையோ அவர்கள் உணரமாட்டார்கள். அவர்கள் புத்துணர்ச்சி அடைந்திருப்பர். அதன் பின்னர் அவர்கள் உள்ளே வருகின்றபோது, அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பார்கள். அவர்கள் சந்தக்கும் பொழுது, எப்பொழுதுமே ஒரு விருந்தாளியை வரவேற்கும்போது, நீங்கள் வரவேற்கப்பட்டிருந்தால், அவர்கள் தங்களுடைய கரத்தை இந்த விதமாக சகோதரன் எட் என்று குலுக்குவார்கள். அவர்கள் இந்த விதமாக தங்களுடைய கரத்தைக் குலுக்குவார்கள். பின்னர் அவர்கள் தங்களுடைய ......... ஒரு நிமிடம் அப்படியே நில்லுங்கள், நான் உங்களுக்கு ஒன்றை காண்பிப்பேன். அவர்கள் தங்களுடைய கரங்களை இவர்கள் மேலே போட்டு தட்டிக் கொடுப்பார்கள். [சகோதரன் பிரான்ஹாம் உதாரணத்தோடு தெளிவிக்கிறார். சகோதரன் எடியை நான்கு முறை தட்டிக் கொடுக்கிறார். - ஆசி.) அந்த விதமாக பின்னர் இவர்கள் தங்களுடைய கரங்களினால் மாற்றி தட்டிக் கொடுப்பார்கள். சகோதரன் பிரான்ஹாம் மீண்டுமாக சகோதரன் எடியை நான்கு முறைகள் தட்டிக் கொடுக்கிறார்.) அந்த விதமாகவே அவர்கள் அதைச் செய்தனர். அது ஒரு வரவேற்பாக இருந்தது. அப்பொழுது நீங்கள் ஒரு சகோதரனாக இருக்கிறீர்கள். நீங்கள் அருமையாக உணருவீர்கள். உங்களுடைய பாதம் கழுவப்பட்டதாகிறது. நீங்கள் -நீங்கள் முழுமையாக எண்ணெய் பூசப்பட்டிருக்கிறீர்கள். 106அதன்பின்னர், அவன் செய்த அடுத்த காரியம், அவர்கள் ஒருவரையொருவர் கழுத்தில் முத்தமிட்டனர். அது அவர்களுக்கு வரவேற்பை ஏற்படுத்தினது. அந்த வரவேற்பளிக்கும் முத்தமே கடைசி காரியமாக இருந்தது. யூதாஸ் அந்த உபசரிப்பின் முத்தத்ததை இயேசுவுக்கு கொடுத்தது நினைவிருக்கிறதா? “சிநேகிதனே, நீ ஏன் அதைச் செய்தாய்?'' என்றார். புரிகின்றதா? அவர் அவனுடைய இருதயத்தை அறிந்திருந்தார். எனவே அவர்கள் ஒருவரையொருவர் வரவேற்றுக் கொண்டனர். நீங்கள் முழுவதும் தூசியோடு அந்த பழைய துர்நாற்றம் உங்களுடைய முகத்திலும், கால்களிலும் மற்ற இடங்களிலும் இருப்பதை போன்று நீங்கள் உணரமாட்டீர்கள். அந்த பண்டைய ஆடை தொங்கிக் கொண்டிருக்க, நீங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, நீங்கள் நடக்கின்ற காரணத்தால் புழுதியை அப்படியே வாரிக்கொள்ளும். ஆனால் அவர்களோ அங்கே உள்ளே செல்கின்றபோது அவ்விதமாக உணரவில்லை. ஆனால் நீங்கள் யாவரும் புத்துணர்ச்சி அடைந்த பின்பு அவன் வந்து, உங்களுடைய விருந்தாளி ........ நீங்கள் ஒரு கௌரவ விருந்தாளியாக இருக்கின்றீர்கள். அப்பொழுது அவன் வந்து உங்களை வரவேற்று உங்களுக்கு கழுத்திலே ஒரு முத்தம் கொடுக்கின்றான். ஏன்? நீங்கள் ஒரு சகோதரன். “உள்ளே வாருங்கள். நீங்கள் அந்த குளிர்பதன பெட்டியண்டைக்குச் சென்று, ஒரு இறைச்சி இடை யீட்டு அப்பத்தையோ, அல்லது எது வேண்டுமானாலும் உங்களுக்கு எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று கூறுவான். எனவே நீங்கள் வரவேற்கப்பட்டுவிட்டீர்கள். நீங்கள் உள்ளே வரவேற்கப்பட்டீர்கள். 107ஆனால் இயேசுவானவருக்கு அவையாவும் செய்யப்படா மலேயே எப்படி அவர் இங்கே உள்ளே சென்றார்? பார்த்தீர்களா? அவரோ மூலையில் அழுக்கடைந்த பாதத்தோடு, வரவேற்கப்படாமல் அமர்ந்து கொண்டிருந்தார். அநேகமாக அந்த பரிசேயன் ஏதோ ஒன்றைக் குறித்து பேசிக்கொண்டு இருந்திருக்க வேண்டும். உங்களுக்குத் - தெரியுமா? அவன் இயேசு உள்ளே வந்ததை ஒருபோதும் கவனிக்கவேயில்லை. அதுதான் இன்றைய சபைகளில், நம்முடைய அநேக பரிசேய சபைகளில் உள்ள காரியமாக உள்ளது. தேவனுடைய வல்லமை உள்ளே வருகிறது. அவர்களோ அதை கவனிக்கிறதில்லை. புரிகின்றதா? அவர் ஏதோ காரியத்தைச் செய்ய விருப்பம் கொள்கிறார். ஆனால் அவர் ஒருபோதும் வரவேற்கப்படுவதே இல்லை . அவனோ, அங்கே இருந்தான். ஒருக்கால் ஒரு கேலிக்குரிய காரியங்களை கூறிக்கொண்டு, போதகர் ரபி இன்னார்- இன்னார் மற்றும் ரபீ இன்னார்- இன்னாரோடு ஒரு பெரிய நேரத்தை அங்கே செலவழித்துக் கொண்டிருந்திருக்கலாம். அவர்கள் இயேசுவை கவனிக்கவில்லை. 108அவர் உள்ளே நழுவிச் சென்று எங்கோ அங்கே ஒரு மூலையில் அமர்ந்திருக்க வேண்டும். என்னால் அவரை அங்கே அவருடைய அழுக்கான பாதத்தோடும், வெயிலினால் ஏற்பட்ட எரிச்சலான கழுத்தோடும், வரவேற்பு முத்தமில்லாமல் இருப்பதை காண முடிகிறது. ஓ, அழுக்கான பாதத்தோடு இயேசு இருப்பதை. நீங்கள் அதை விந்தையாக உணரவில்லையா? அவர்கள் அவரை அங்கே “ஜேசு! ஜேசு!” என்று அழைக்கிறார்கள். “ஜேசு” அழுக்கான பாதத்தோடு மூலையில் அமர்ந்திருந்தார்“ என்று கூறப்பட்டுள்ளது. ஓ, தேவனே, அது எப்படி இருக்கக்கூடும்? எவருமே அவரண்டை கவனம் செலுத்தவில்லை. ஆனால் ஒரு சிறிய விபச்சாரி (ஓ, என்னே !) ஒரு துர்கீர்த்தியுள்ள ஸ்திரீ, அவள் அவ்வழியாக கடக்க நேரிட்டது. ஒருக்கால் அவள் - ஒருக்கால் அவள் ........ அங்கே பட்டிணத்தில் யாருமே இல்லாதிருந்திருக்கலாம். எல்லோருமே, புகழ்வாய்ந்தோர் அனைவருமே இந்த விருந்திற்கு சென்றுவிட்டிருந்தனர். எனவே அவளுடைய வியாபாரம் மிகவும் மோசமாக இருந்தது. எனவே அவள் அதை கண்டுகொண்டாள். “இங்கே இந்த பரிசேயனுடைய வீட்டிலே இங்கே உள்ள இவையாவும் என்ன?” எனவே அவள் அங்கே சென்றபோது, அநேகமாக அந்த வேலியடைப்பின் சந்தினூடாக சுற்றும்முற்றும் பார்த்திருப்பாள். “ஓ, என்னே!” அவள் ஒரு மூலையில் நோக்கிப் பார்க்க நேர்ந்தது. அவர் அங்கே தன்னுடைய தலையை தாழ்த்தினவாறு, அழுக்கான பாதத்தோடு, உஷ்ணத்தினால் கழுத்தில் ஏற்பட்ட எரிச்சலோடு , வரவேற்கப் படாமல், அவருக்கு எவருமே எந்த கவனமும் செலுத்தாதிருப்பதை அவள் கண்டாள். 109ஆனால் அது அவளுக்கு வெளிப்படுத்தப்பட்டது. ஓ, அவளுடைய கண்களை அவள் தேய்த்து, “அது அவர்தானா? என்னைப் போன்ற ஒரு ஸ்திரீ அந்த சபையினரால் இழுத்து வரப்பட்டு மரிக்கும்படி கல்லெறியப்படப் போவதாக இருந்தபோது, அவளைக் காப்பாற்றினது அதே மனிதன்தான். அப்பொழுது அவர், ''ஸ்திரீயே உன்னை குற்றம் சாட்டினவர்கள் எங்கே? என்றாரே. அது அவராகத்தான் இருக்க வேண்டும்” என்று கூறுகிறதை என்னால் காணமுடிகிறது. புரிகின்றதா? விசுவாசம் கேட்பதினால் வருகிறது. அது அவர்தான் என்பது அவளுக்கு வெளிப்படுத்தப் பட்டிருந்தது. அவள், ''ஆனால் பாருங்கள், அவர் வரவேற்பில்லாமல் இருக்கிறார். அவர் அழுக்கான பாதத்தோடு உள்ளார். அதைக் குறித்து நான் என்ன செய்யமுடியும்? நான் ஒரு ஸ்திரீயாயிற்றே. நான் அங்கே உள்ளே சென்று ஏதாவது கூற நேர்ந்தால், அவர்கள் - அவர்கள் என்னை வெளியே, அந்த இரும்பு கம்பிகளுக்கு வெளியே எறிந்து விடுவார்களே. இப்பொழுதோ, நான் - நான் ஒரு துர்கீர்த்தி யுள்ள ஸ்திரீயாக இருக்கிறேன். நான் ஒரு துர்கீர்த்தியுள்ளவள் என்பதை அவர் - அவர் அறிவார். நான் ஒரு மோசமான ஸ்திரீ என்பதை அவர் அறிவார். எனவே நான் அதைக் குறித்து, என்ன செய்ய முடியும்?“ என்றாள். 110அவள் திரும்பி நடந்து, “ஓ, நான் ஏதோ காரியத்தை செய்யத்தான் வேண்டும். அவர் வரவேற்பின்றி உள்ளாரே. ஆனால் நான் ஜீவனைப் பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரே வழி அதுதான் என்ற எதோ காரியம் எனக்கு வெளிப்படுத்துகிறது'' என்று கூறுகிறதை என்னால் காணமுடிகிறது. அதுதான் காரியம். ஓ , சகோதரனே, ''அந்த பொட்டலத்திற்குள் என்ன உள்ளது என்பதை நான் காண விரும்புகிறேன். என்னுடைய பாவங்களை மன்னிக்கும் ஏதோ காரியம் அங்கே உண்டு என்பதை நான் அறிவேன். நான் ஒரு விபச்சாரியாக இருந்தாலும், நான் பொல்லாத வளாயிருந்தாலும், நான் அந்த கிறிஸ்மஸ் பொட்டலத்தினுள்ளே நோக்கிப் பார்க்க விரும்புகிறேன். எனக்காக ஏதோ ஒரு காரியம் அங்கே உண்டு என்பதை நான் அறிவேன். ஒவ்வொருவருக்காகவும், ஏதோ காரியம் உள்ளது. பாவியான நண்பனே அது உண்மை. சூதாட்டக்காரனுக்கான ஏதோ காரியம் உள்ளது. பொய்யனுக்கான ஏதோ காரியம் உள்ளது. ஒவ்வொரு நபருக்காகவும் ஏதோ ஒன்று உண்டு. உங்களுக்காக இந்த கிறிஸ்மஸ் பொட்டலத்தில் ஏதோ காரியம் உள்ளது. அதை ஒருபுறமாய் தள்ளிவிடாதீர்கள். எப்படியாக பரிசேயரும், மூடத்தன மான முட்டாளும் மினுமினுப்பானதை எடுத்துக் கொண்டு, வெகு மதியை தூர எறிந்து விட்டனர். என்ன ஒரு பரிதாபமான காரியம்! இதோ அவர் வருகிறார். அவர் அங்கே அமர்ந்து கொண்டிருக்கிறார். 111இந்த ஏழ்மையான சிறிய ஸ்திரீ ஒருக்கால் அவள் தான் ஜீவிக்கிற வீட்டிற்குச் சென்று, அங்கே உள்ளே கீச்சிடும் படிகளில் மேலே ஏறியிருக்கலாம். அவளுடைய பணப்பையில் அல்லது மற்ற ஏதோ ஒன்றில் கொஞ்சம் பணத்தை எடுத்திருக்கலாம். அவள், “ஓ, நான் என்ன செய்ய முடியும்? இப்பொழுது ஒரு நிமிடம் பொறுங்கள். நான் இதை பின்னாக வைப்பது மேலானது, ஏனெனில் நான் - நான் ஒரு துர்கீர்த்தியுள்ள ஸ்திரீ என்பதை அவர் அறிவார். ஆனால் இதுவே என்னுடைய ஒரே நம்பிக்கை, அதுவே நான் செய்யக்கூடிய ஒரே காரியமாக உள்ளது. நான் அந்த விருந்திற்கு அழைக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் இருந்தாலும், நான் அவரிடம் செல்லத்தான் வேண்டும்'' என்றாள். ஒ, இன்றிரவு ஜனங்கள் அதைக் காண முடிந்தால் நலமாயிருக்கும் என்று நான் விரும்புகிறேன். அவரண்டை சேருங்கள் அல்லது அழிந்து போங்கள். அது என்ன வித்தியாசத்தை உண்டு பண்ணுகிறது? நீங்கள், ''உருளும் பரிசுத்தர்'' என்றழைக்கப்படுகின்றீர்கள் அல்லது வீசியெறியப்படு கின்றீர்கள். இல்லையென்றால் அதைக் குறித்த வித்தியாசம் என்ன? அவரண்டை செல்லுங்கள். அவரண்டை செல்லுங்கள், அதுவே உங்களுடைய ஒரே நம்பிக்கை. 112அவள் கீழே சென்று, இதை எடுத்துக் கொண்டாள். அங்கிருந்த யூத நபர்களில் ஒருவன் வியாபாரம் மோசமாய் உள்ளது என்று கூறிக்கொண்டு, அங்கு பின்னாக அமர்ந்து தன்னுடைய பணத்தை எண்ணிக்கொண்டிருப்பதை என்னால் காணமுடிகிறது. ஒவ்வொருவரும், எல்லாருமே அந்த விருந்திற்கு சென்று விட்டிருந்தனர். இந்த ஸ்திரீயோ உள்ளே நடந்து சென்றாள். “நல்லது, இங்கு நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” அவள் பண்டைய வெள்ளி நாணயத்தை , கிட்டத்தட்ட, அதற்கான முப்பது நாணயங்களை கடையின் கஜானா மேஜையில் கொட்டினாள். ''ஹா -ஹா! ஸ்திரீயே உனக்கு என்ன வேண்டும்?“ பாருங்கள், அது வித்தியாசத்தை உண்டுபண்ணியது. அவள் என்னவா யிருந்தாள் என்பதை அவன் கண்டான். ஆனாலும் அவள் கொஞ்சம் பணம் வைத்திருந்ததைக் கண்டபோது அது வித்தியாச மானது. புரிகின்றதா? அதுதான் இன்றைய உலகம். நீங்கள் பணத்தை உடையவர்களாயிருந்தால், நீங்கள் ஒரு பெருஞ்சுட்டுப் புள்ளி. நீங்கள் பணத்தை உடையவர்களாயிருக்கவில்லை யென்றால், நீங்கள் - நீங்கள் ஒன்றுமற்றவர்கள். ”ஓ அதுதான் வித்தியாசம். உனக்கு என்ன தேவை?'' ''எனக்கு - எனக்கு நீங்கள் வைத்துள்ள மிகச் சிறந்த இலாமிச்சை எண்ணெயில் மிகவும் சிறந்தது தேவை. நான் வைத்திருப்பது இவ்வளவுதான். நான் இதை எண்ணிப் பார்க்கட்டும், முப்பது நாணயங்கள். அப்பொழுது நாற்பது நாணயங்கள் இருந்தன.'' “ஓ, ஆம், அதனால் இங்குள்ள இந்த அருமையான புட்டியை வாங்கலாம்.'' “எனக்கு அது தேவை.” “உனக்கு எண்ணெய் வேண்டும் என்று நீ கூறுகிறாயா?” “எனக்கு அது தேவை. எனக்கு அந்த முழுபுட்டியும் தேவை.” அவளிடமிருந்தது அவ்வளவுதான். 113சகோதரனே அதைத்தான் நீ செய்ய வேண்டும். அதுவே நீ செய்த ஒவ்வொரு பாவத்திற்கும் கிரயமாகும். அதுவே ஒவ்வொன்றிற்கும் கிரயமாகும். ஆனால் அதை அளிக்க மனதாய் இருங்கள். எனவே அவள் நழுவி அந்த வேலியண்டைக்குச் சென்றாள். அங்கே அவள் கவனித்துப் பார்ப்பதை என்னால் காண முடிகிறது. அவர் இன்னமும் தொடப்படாதவராக அங்கு அமர்ந்திருப்பதை அவள் காண்கிறாள். அந்த பரிசேயப் போதகர் நம்முடையநம்முடைய விலையேறப்பெற்ற கர்த்தரை கவனியாமலும், அறியாமலும், இன்னமும் அங்கே தன்னுடைய கேவலமான, கேலியான காரியங்களையும், மற்றவைகளையும் அங்கிருந்த மற்றவர்களோடு கூறிக்கொண்டே தொடர்ந்து ஏதோ சில பெரிய காரியங்களைக் குறித்து பேசிக்கொண்டிருக்கிறான். அவள், “நான் எப்படி உள்ளே நுழையமுடியும்?” என்றாள். ஆகையால் இப்பொழுது அவள் உண்மையிலேயே எளிதாக உள்ளே நழுவிச் சென்று, அவர் இருந்த இடத்தை அடைவதை நான் காண்கிறேன். அவள் அவரை நோக்கிப் பார்த்தாள். அவளுடைய முகத்திலிருந்து கண்ணீர் வழிந்தோடுவதையும், அவளுடைய பெரிய பழுப்பு நிறக்கண்களால் அவரை இந்தவிதமாய் நோக்கிப் பார்ப்பதையும் என்னால் காணமுடிகிறது. அவள் அந்த புட்டியை பலமாக குலுக்கித் திறந்து அந்த தைலத்தை அவருடைய பாதத்தின் மேல் ஊற்றினாள். இயேசுவானவர் அழுக்கடைந்த பாதத்தோடு அமர்ந்திருப்பதை அவன் அனுமதிக்கக்கூடாதவளாயிருந்தாள். நீங்கள், “என்னிடத்தில் ஒன்றுமில்லை” என்கிறீர்கள். ஆகையால் அதைக் குறித்த ஏதோ காரியத்தை நீங்கள் ஏன் செய்யக்கூடாது? இன்றைக்கு நாட்டில், “உருளும் பரிசுத்தர், மார்க்க வெறியன்'' என்னும் இழிவான பெயரை அவர் பெற்றிருக்கிறார். அதைக் குறித்து ஏதோ காரியத்தை நீங்கள் ஏன் செய்யக்கூடாது? எழும்பி, ”கர்த்தருடைய நிந்திக்கப்பட்ட சிலருடைய வழியையே நான் தெரிந்து கொள்வேன். நான் அந்த பொட்டலத்தை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இருக்கிறேன்'' என்று கூறுங்கள். 114அவள் எண்ணெயை அவருடைய பாதத்தின் மீது ஊற்றினாள். அதினால் அந்த முழு அறையையே பிரகாசமாக்கி யிருக்கலாம். அது விலையுயர்ந்ததாக இருந்தது. இயேசுவுக்காக மிகவும் சிறப்பானது ஒன்றுமேயில்லை . உங்களுடைய சிறப்பையே அவருக்கு அளியுங்கள். நீங்கள் பெற்றுள்ள ஒவ்வொன்றையும் அவருக்கு அளியுங்கள். உங்கள் ஜீவியத்தை, உங்களுடைய ஆத்துமாவை, உங்களுடைய சரீரத்தை, உங்களுடைய நேரத்தை , நீங்கள் பெற்றுள்ள எல்லாவற்றையும் அவருக்கு அளியுங்கள். அவள் நோக்கிப் பார்க்க நேர்ந்தது. அவள் அங்கே நின்று கொண்டிருந்தாள். ஓ, என்னே ! அவள் இந்த எண்ணெயை அவருடைய - அவருடைய தலையின் மேல் ஊற்றினாள். அப்பொழுது அது பாதத்தண்டை வழிந்தோடத் துவங்கியது. ஓ, அவள் - அவள் அவருடைய பாதத்தை பற்றிப் பிடித்துக்கொண்டு, அவைகள் அழுக்காய் இருந்ததைக் கண்டாள். அவள் ஒன்றுமே வைத்திருக்கவில்லை. அப்பொழுது அவள் - அவள் தன்னுடைய பாவங்களைக் குறித்து சிந்தித்தாள். அவள், “நிச்சயமாகவே, அவர், அவர் என்னை ஆக்கினைக்குட்படுத்துவார்'' என்றாள். எனவே அவள் அந்த எண்ணெயை அவருடைய கழுத்தின் மேல் ஊற்றி, அதை தேய்த்தாள். பின்னர் அவள் அங்கு அமர்ந்து, அவருடைய பாதத்தைப் பற்றிக்கொண்டாள். அவள் விழுந்தாள், அவள், “ஓ, நான் இந்த மனிதனுக்கு முன்பாக நிற்கும் அவ்வளவு மோசமான பாவியாக இருக்கிறேன். நான் அத்தகைய ஒரு பாவி” என்று கதறத் துவங்கினாள். அவள் தன்னுடைய பெரிய அழகான கண்களினால் மேலே நோக்கிப் பார்த்தாள். அவள், “அவர் - அவர் இந்த அறையிலிருந்து என்னை உதைத்துத் தள்ளுவார்'' என்றே நினைத்துக் கொண்டாள். ஆனால் அவர் ஒருபோதும் அசையவேயில்லை . அவர் அப்படியே அமர்ந்தபடியே அவளை நோக்கிப் பார்த்தார். ஓ, நான் அதை விரும்புகிறேன். அவர் அப்படியே அமர்ந்தபடியே அவளை நோக்கிப் பார்த்தார். ”ஓ, அவர் என் இருதயத்தை அறிந்திருக்கிறார். என்னால் இப்பொழுதே அவரை என்னுடைய சிந்தையில் பகுத்தறிந்து உணரமுடிகிறது. நான் நல்லவள் அல்ல என்பதை அவர் அறிந்திருக்கிறார். கர்த்தாவே நான் அதை அறிவேன். ஆனால் நீர் அழுக்கான பாதத்தோடு இருப்பதை என்னால் பார்த்துவிட்டு நிற்க முடியவில்லை. என்னால் அப்படியே நிற்க முடியவில்லையே. நீரே என்னுடைய ஒரே நம்பிக்கை. என்னால் நிற்க முடியவில்லையே“ என்றாள். அவருடைய பர்தத்திற்கு என்னே அழகான தண்ணீர், ஓ, மனந்திரும்புதலின் கண்ணீராயிற்றே! ஓ! ஓ! அதைப் போன்ற ஒன்றையுமே அந்த பண்டைய பரிசேயனால் அளிக்கமுடியவில்லை. தண்ணீர்கள், அவளுடைய கன்னங்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருக்கின்றது. 115அவள் அவைகளை தேய்க்கத் துவங்கினாள். (சகோதரன் பிரான்ஹாம் இரண்டு முறை முத்தமிடும் சத்தங்களை உண்டாக்குகிறார். - ஆசி. அவருடைய பாதத்தை முத்தமிட்டாள். ஓ, அது அவளுடைய ஆண்டவர்; அவருடைய பாதத்திற்கு முத்தமிட்டாள். அவள் அதை ஈரமில்லாமல் துடைத்தெடுக்க துவாலையை வைத்திருக்கவில்லை. எனவே அவள் தன்னுடைய தலையின் உச்சியில் முடித்து கொண்டை போட்டிருந்த அவளுடைய சுருள்வடிவான தலைமுடியானது கீழே அவிழ்ந்து விழுந்திருக்க வேண்டும் என்று நான் யூகிக்கிறேன். அவள் தன்னுடைய முடியை எடுத்து, அதினால் அவருடைய பாதத்தை துடைக்கத் துவங்கினாள். அவருடைய பாதத்தை முத்தமிட்டாள். “கர்த்தாவே, நீர் அறிவீர்.'' (முத்தமிடும் ஒரு ஓசை ''கர்த்தாவே, நான் - நான் ஒரு பாவி என்பதை நீர் அறிந்திருக்கிறீர். நான் இந்த விதமாக உமக்கு முன்பாக இங்கே நிற்க வெறுக்கிறேன். ஆனாலும் அழுக்கான பாதத்தோடு உம்மைக் கண்டு நிற்கமுடிய வில்லை.” ஓ, என்னே! இயேசு அழுக்கான பாதத்தோடு வரவேற்கப்படாமல், கழுத்தில் ஒரு முத்தம் கொடுக்கப்படாமல் இருந்தார். அவளோ, அவருடைய பாதத்தை முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். “கர்த்தாவே!” (முத்தமிடும் நான்கு சத்தங்கள்) “என் ஆண்டவரே! ஓ, கர்த்தாவே, நான் - நான் - நான் ஒரு பாவி.'' (இரண்டு முத்தமிடும் சத்தங்கள்] ”கர்த்தாவே, நீர் என்னை அறிவீர்.'' 116ஏறக்குறைய அந்த நேரத்திலே அந்த பண்டைய பரிசேயன் திரும்பிப் பார்த்தான். “ஹு!” “இப்பொழுது அங்கே பாருங்கள். அங்கே நோக்கிப் பாருங்கள். அந்த விதமான கூட்டமே அதை பரிசுத்த ஆவி என்று அழைத்து வருகிறது.'' புரிகின்றதா? அவர்கள் மாற்றமடைந்திருக்கவில்லை. ”அது என்னவென்பதை நோக்கிப் பாருங்கள். அவர் எந்தவிதமான ஜனங்களோடு சகவாசம் செய்கிறார் என்பதைப் பாருங்கள். நீங்கள் பரிசுத்த ஆவியைக் குறித்தும், தெய்வீக சுகமளித்தலைக் குறித்தும் பேசுகிறீர்கள். அது என்ன? பட்டிணத்தின் குப்பை.'' நிச்சயமாகவே, அவளுக்கு அது வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. அந்த பொட்டலத்தினுள்ளே என்ன உள்ளது என்பதை அவள் அறிந்திருந்தாள். அவள் அந்த நேரத்தை மட்டும் அறிந்திருந்தாள். மற்றெந்த நேரத்திலும் அவள் எங்கு வேண்டுமா னாலும் செல்லலாம். அவள் பரிசேயனிடத்திற்குச் செல்ல முடியாதிருந்தது. அவன் அவளை சபையிலிருந்து உதைத்து தள்ளிவிடுவான். அவர்களுடைய சங்கத்தின் ஸ்தானத்தில் இடம் பெற முடியவில்லை . ஆனால் பாவிகளுக்கான ஒரு சங்கம் இருந்தது. நான் அதைக் குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு பாவி வரக்கூடிய ஒரு இடம் உண்டு. கிலேயாத்திலே பிசின் தைலம் உண்டு. அது காயத்தை முழுமையாக சொஸ்தமாக்கி விடும். அவள் அதை கண்டறிந்திருந்தாள். அவள் அந்த வெகுமதி யை அறிந்து கொள்ள விரும்பினாள். அவள் அவருடைய பாதத்திற்கு முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். பண்டைய பரிசேயனோ, “ஹா-ஹா! பையன்களே இங்கே வாருங்கள். ஹு! ஹு! அதோ உங்களுடைய தீர்க்கதரிசி. பார்த்தீர்களா? அவர் ஒரு தீர்க்கதரிசியாக இருந்திருந்தால், அவருடைய பாதத்தை கழுவிக்கொண்டிருக்கும் ஸ்திரீ எந்தவிதமானவள் என்பதை அறிந்திருப்பார். அங்கே பாருங்கள். மூடமதாபிமானத்தைப் பற்றி பேசுகிறீர்களா? அது என் வீட்டையே அவமானப்படுத்துகிறது'' என்றான். 117இயேசுவோ ஒரு வார்த்தையும் கூறாமல் அப்படியே நின்று அந்த ஸ்திரீயைக் கவனித்தார். பின்னர் கொஞ்சம் கழித்து ....... அந்த அழகான பரிசேயன் எதை சிந்தித்துக் கொண்டிருந்தான் என்பதை அவர் அறிந்து கொண்டார். எனவே அவர் எழும்பி நின்றார். அந்த ஸ்திரீ, “ஓ ! ஓ, இதோ - இதோ என்னுடைய வேளை. அவர் - அவர் - அவர், அவர் - அவர் என்னை ஆக்கினைக்குள்ளாக்கு வார். அவர் - அவர் - அவர் என்னை இந்த வீட்டை விட்டு துரத்துவார்” என்று கூறுவதை என்னால் காணமுடிகிறது. அவர் அந்தவிதமாக எழும்பி நின்று பார்ப்பதை நான் காண்கிறேன். அவர் இப்பொழுது நல்லவிதமாக உணருகிறார்; அவருடைய பாதம் கண்ணீரினால் குளிப்பாட்டப்பட்டது. ஓ, தேவனே என்னை உருவாக்கும். அவருடைய பாதம் ஒரு உண்மையான இருதயத்தின் மனந்திரும்புதலின் கண்ணீரினால் குளிப்பாட்டப்பட்டது. அவள் நன்னடத்தை கெட்டவளாயிருந்தும், அவள் இந்த நேரத்தில் சுத்தமாக கழுவப்படக்கூடிய ஒரு ஊற்றண்டையிலே இருந்தாள். அங்கே அவள் அமர்ந்து கொண்டிருந்தாள். அவளுடைய முகத்தில் கண்ணீ ரோடும், மட்டுமீறி கதறியழுத அவளுடைய முகம் முழுவதும் கறைப்பட்டிருந்ததையும் என்னால் காணமுடிகிறது. அவளுடைய சுருள் முடிகள் யாவும் கீழே அவிழ்ந்து முழுவதும் கண்ணீ ராலும், அவருடைய பாதத்திலிருந்த அழுக்கோடும் இருந்தது. அவளோ அங்கு நின்றுகொண்டு, “என்ன சம்பவிக்கப் போகிறது?” அவன் என்னை தூக்கி எறிந்து விடுவான். அவன் இங்கே உள்ளே வந்ததற்காக என்னை சிறையில் அடைத்துவிடுவான்'' என்று வியப்புற்றிருந்தாள். 118அவர் அப்படியே எழும்பி நின்றார். அவர், “சீமோனே, நான் உனக்கு கூறவேண்டிய ஒரு வார்த்தை உண்டு. நீர் என்னை உம்முடைய வீட்டிற்கு அழைத்தீர். நான் உள்ளே வந்தபோது நீர் என் பாதத்திற்காக ஏதும் தண்ணீர் வழங்கவில்லை. நானாகவே கழுவிக்கொண்டிருப்பேன். ஆனால் நீர் எனக்கு தண்ணீரே தரவில்லை ” என்றார். ஓ, தேவனே ! “என்னுடைய கழுத்து எரிந்து கொண்டிருக்கும் போது, அதற்கு பூசிக்கொள்ள நீர் எனக்கு எண்ணெயை கொடுக்கவில்லை. சீமோனே, நீர் அதைச் செய்யவில்லை. நீர் என்னை முத்தமிட்டு, எனக்கு வரவேற்பளிக்கவில்லை. ஆனால் இந்த ஸ்திரீயோ, அவள் தன்னுடைய கண்ணீரினால் என்னுடைய பாதத்தை கழுவியுள்ளாள். அவள் என் பாதத்தை முத்தமிட்டாள். அவள் இங்கு உள்ளே வந்தது முதற்கொண்டு அவள் அதைச் செய்யாமல் ஓய்ந்திருக்கவில்லை. சீமோனே, நான் உனக்கு எதிரான ஒரு சில காரியங்களை குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் அவளுடைய .......'(தீர்க்கதரிசிதானா அல்லது இல்லையா?) ”நான் அவளுக்கு கூறுகிறேன். அவளுடைய அநேக பாவங்கள் மன்னிக்கப் பட்டிருக்கின்றன.“ ஓ தேவனே! 119அது என்னவாயிருந்தது? அந்த வெகுமதி பொட்டலத்திற் குள்ளே என்ன இருந்தது என்பதை அவள் கண்டறிந்திருந்தாள். அங்கு அன்பு இருந்ததை அவள் கண்டுணர்ந்திருந்தாள். அங்கே மன்னிப்பை அவள் கண்டிருந்தாள். அவள் அதை கண்டிருந்தாள். ஓ, எப்படியாக அந்த தேவனுடைய விலையேறப்பெற்ற வெகுமதி அவள் பேரில் கிரியை செய்கிறதை அவள் கண்டாளே! அந்த தேவனுடைய வெகுமதியானது அவளுக்கு அளிக்கப்பட்டதை அவள் கண்ட போது, அது எவ்வளவாய் அவளை உணர்வடையச் செய்திருக்க வேண்டும். அவளுடைய பாவங்கள் மன்னிக்கப் பட்டிருந்தன. 120பரபாஸ் அந்த நாளை எவ்வளவாய் உணர்ந்திருக்க வேண்டும். நீங்கள் பரபாஸின் சம்பவத்தை அறிவீர்கள். பரபாஸ் சட்டத்திற்கு புறம்பாக பிடிக்கப்பட்டு, மரண தண்டனைக்குட்பட்ட குற்றவாளிகளை அடைத்து வைக்கும் இடத்தில் வைக்கப்பட்டு, அடுத்த நாள் காலையில் மரிக்கப் போவதாயிருந்தான். அவன் ஒரு திருடனாய் இருந்தான். அவன் சட்டத்திற்கு புறம்பானவனாக இருந்தான். அவன் ஒரு கொலைகாரனாக இருந்தான். அவன் ஒரு குற்றவாளியாக இருந்தான். அவன் அந்த முழு இரவும் அந்த சிறையில் மேலும் கீழும் நடந்து கொண்டும், தன்னுடைய தலைமுடியை பிய்த்துக் கொண்டுமிருந்தான். ஏனென்றால் அவன் அடுத்தநாள் காலை மரணதண்டனைக்கு, ஒரு சிலுவையண்டைக்கு செல்லவேண்டியவனாக இருந்தான். அவன் மரிக்கவிருந்தான். எப்படியாய் அந்த இரவு அவனுக்கு தீய கனவுகளை தோற்றுவித்தது? எப்படியாய் அவனால் அமைதியாய் இருக்கக் கூடாமற் போயிற்று? அடுத்த நாள் காலை, சிற்றுண்டியோ அல்லது ஒன்றுமே யில்லாமல் ஓநாய்களுக்கு மத்தியில் இருப்பதைப்போல் தன்னுடைய இரத்தம் கசியக்கூடிய வேதனையை உணர்ந்தான். அவன் திடீரென்று சங்கிலிகளின் சலசலப்பையும் (சகோதரன் பிரான்ஹாம் அணிவகுத்துச் செல்லும் ஓசையை தன்னுடைய பாதத்தினால் ஆறுமுறை உண்டாக்குகிறார். - ஆசி.] போர் வீரர்களின் மிதியடி ஒலியையும் கேட்கிறான். இதோ நான்கு அல்லது ஐந்துபேர் வருகின்றனர். ஒருக்கால் ஒரு - ஒரு ரோமப் போர்வீரர்களின் படையே ஈட்டிகள் மின்னிட அங்கே நடந்து வந்திருக்கலாம். அந்த பெரிய சிறையதிகாரி திறவுகோலை கொண்டு திறந்து, “பரபாஸே வெளியே நடந்துவா'' என்றார். “ஓ, என்னை கொன்றுவிடாதீர்கள்! இரக்கமாயிருங்கள்!” “பரபாஸே, தவறு ஏதும் இல்லை . நீ விடுதலையாகிவிட்டாய்” ''என்ன எனக்கா ?'' “நீ விடுதலையானாய்” “நான் எப்படி விடுதலை பெற்று வந்தேன்?” யாரோ ஒருவர் அந்த வழியைச் சுட்டிக்காட்டினார். அந்த வெகுமதியானது மரணத்தில் பரபாஸின் ஸ்தானத்தை எடுத்துக் கொண்டதை அவன் கண்டபோது, அது அவனுக்கு எதை சுட்டிக் காட்டியிருக்க வேண்டும். நானும் அதே வழியில் உணர்ந்தேன். தேவனுடைய வெகுமதி மரணத்தில் என்னுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டது. எப்படியாய் அங்கே ஆணிகள் அறையப்பட்டு சிலுவையின் மேல் அந்த கள்ளன் மரித்துக் கொண்டிருந்தான். மரித்துக்கொண்டிருந்த கள்ளன் தன் நாளில் அந்த ஊற்றைக் கண்டு பூரித்தான்; அவனைப் போன்று இழிவானவனாய் நான் இருந்தாலும் என் பாவங்கள் யாவையும் கழுவியருளும். (ஆம்.) விசுவாசத்தால் நான் அந்த ஊற்றை கண்டது முதற்கொண்டு, எனக்கு வெளிப்படுத்தப்பட்டதால் உம்முடைய காயங்களினால் ஓடும் இரத்தத்தினால் நிவர்த்தியடைந்தேன் மீட்பின் அன்பே என்னுடைய மெய்கருத்தாய் இருந்து வருகிறது, நான் மரிக்குமளவும் அதுவே பொருளாயிருக்கும் (அது உண்மை . ஓ!) 121முடிவாக இதை கூறுவேனாக. இன்றைக்கு கிறிஸ்மஸ் என்பது ஒரு ஒட்டக முத்திரையிடப்பட்ட சிகரெட்டுகளாக, ஒரு இராஜ பிரதிநிதி முத்திரையிட்ட சிகரெட்டுகளாய், நான்கு ரோஜா முத்திரையிட்ட மதுபானமாய் அல்லது சீரக மதுபானமாய், ஒரு அழகான கிறிஸ்மஸ் கட்டுக்கதை படத்தாளில் சுற்றப்பட்டதாய் உள்ளது. ஆனால் அவர்கள் இன்னமும் தேவனுடைய கிறிஸ்மஸ் வெகுமதியை புறக்கணிக்கிறார்கள். அவர்கள் அதை விரும்புகிறதில்லை. நான் அதை விரும்புகிறேன். நான் அதை பெற்றுக் கொண்டதற்காக மகிழ்ச்சியடைகிறேன். ஓ, இம்மானுவேல், தேவன் மாம்சமாகி, நமக்கு மத்தியிலே வாசம் செய்து, புறக்கணிக்கப்பட்டு, ஆக்கினைக்குட்படுத்தப்பட்டு, எல்லா காலங்களினூடாகவும் அவரை ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு இருதயத்திற்கும் அவருடைய கிருபையானது இன்றைக்கும் தொடர்ந்து நீடித்துள்ளது. நாம் நம்முடைய தலைகளை அப்படியே ஒருவிசை தாழ்த்துவோமாக. 122இன்றிரவு, இந்த கட்டிடத்தில், இந்த கிறிஸ்மஸ் நேரத்தில், கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதான நினைவு விழாவில் தேவன் முதல் கிறிஸ்மஸ் வெகுமதியை அளித்ததை நினைத்து நான் வியப்புறுகிறேன். இன்றிரவு அந்த வெகுமதி பொட்டலத்தின் உட்புறத்திலே நோக்கிப் பார்க்க விருப்பம் கொண்டால், பாவியே அங்கே உன்னை நேசிக்கிற யாரோ ஒருவரை, உனக்காக மரித்த யாரோ ஒருவரை, உனக்காக தம்முடைய ஜீவனையே கொடுத்த யாரோ ஒருவர் அங்கே இருப்பதை காணமாட்டாயா என்று நான் வியப்படைகிறேன். இன்றிரவு அவருடைய கந்தையான ஆடையை, “மூடமதாபிமானி, உருளும் பரிசுத்தர்” என்று அவர்கள் அவரை அழைக்கும் அந்த அழுக்கான ஆடையை எடுத்து, அதில் உங்களை சுற்றிக்கொண்டு, தேவனுடைய நிந்திக்கப்பட்ட சிலருடைய வழியை தெரிந்த கொள்ள மனமுடையவர்களாக இருப்பீர்களா? இன்றிரவு நீங்கள் இந்த கட்டிடத்தில் இருந்து ஜெபத்தில் நினைவு கூரப்பட வேண்டுமென்று விரும்பினால், நீங்கள் உங்களுடைய கரத்தை வெறுமனே உயர்த்தி, “இந்த கிறிஸ்மஸ் இரவிலே, நான் தேவனுடைய கிறிஸ்மஸ் வெகுமதியை, தேவனுடைய உண்மையான கிறிஸ்மஸ் வெகுமதியை ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறுவீர்களா? ஸ்திரீயே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. கிர்லை (Girlie) தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. சகோதரியே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. அங்குள்ள வாலிப ஸ்திரீயை தேவன் ஆசீர்வதிப்பாராக. ஆம், இன்னும் வேறு யாராவது ஜெபத்தில், நினைவு கூரப்பட வேண்டுமென்று விரும்புகிறீர்களா? என் சகோதரனே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 123யாராகிலும் ஒருவர், “கர்த்தாவே, நான் அந்த வழியைத் தெரிந்து கொள்வேன். நான் உம்மை அழுக்கான பாதத்தோடு காணமாட்டேன். நான் ஒருபோதும் நின்று ....... நான் அவர்களோடு சேர்ந்து கொள்வேன். நான் தேவனுடைய இராஜ்ஜியத்தில் வருவேன். நான் -நான் நிந்திக்கப்பட்டவர்களில் ஒருவனாய் இருப்பேன். கர்த்தாவே, என்னோடே தங்கியிரும். இன்றிரவு என்னோடே வீட்டிற்கு வாரும். நான் உம்முடைய நாமத்தினால் எல்லா அழுக்கையும் கழுவுவேன். கர்த்தாவே, நீர் என் பாவங்களை கழுவியருளும். என்னை ஜீவனுள்ளவனாய் ஜீவிக்கச் செய்யும். இப்பொழுது நான் செய்து கொண்டிருக்கிற வழியில் அல்ல; நான் உம்முடையவர்களை கறைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். நான் - நான் உம்மை கறைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் உம்மேல் அதிக கறையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன். கர்த்தாவே, இன்றிரவே என்னுடைய மனந்திரும்புதலின் கண்ணீரோடு போகவிடும். இப்பொழுது நான் உம்மை என்னுடைய இரட்சகராக ஏற்றுக்கொள்ள கல்வாரியின் பாதத்தண்டையிலே தாழ்மையாய் வருகிறேன்'' என்று கூறுங்கள். நாம் ஜெபிப்பதற்கு முன்னர் மற்ற யாராவது உள்ளனரா? வெறுமனே உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். சரி. 124விலையேறப்பெற்ற கர்த்தாவே, இன்றிரவு நாங்கள் உம்மண்டை வழி நடத்துகிறோம். கர்த்தாவே இன்றிரவு தங்களுடைய கரத்தை முழுமையாக உயர்த்தினவர்கள் ஒரு சில ஸ்திரீகளாகவே இருந்ததைப் போன்று தென்படுகிறது. ஒருக்கால் அவர்களும் கூட கீழ்நோக்கி பார்க்கக்கூடும் ......... அவர்களில் சிலர் வாலிபப் பெண்களாகவும், வெறுமனே வாலிபப் பருவத்தினை உடையவர்களே தங்களுடைய கரங்களை உயர்த்தினர். அவர்கள், கர்த்தாவே, அவர்கள் அதை மனதில் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் - அவர்கள் உலகத்தோடு ஆக்கினைக்குட்படுத்தப்பட வேண்டுமென்று விரும்பிவில்லை. இப்பொழுதே அவர்கள் உம்மை ஏற்றுக்கொள்ள விரும்புகிறார்கள். இந்த கிறிஸ்மஸ் நேரத்திலேயே தேவனுடைய பொட்டலத்திற்குள் நோக்கிப் பார்க்கவும், நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளவும் விரும்புகின்றனர். அதை அருளும் கர்த்தாவே, இப்பொழுது அவர்களுடைய பாவத்தின் மன்னிப்பிற்காக அவர்களுக்கு நீர் திறந்தருளும். நீர் தாவீதின் வீட்டில் உள்ள ஒரு ஊற்றை அவர்களுக்குத் திறந்தருளும். அதுவே பாவத்திற்காகவும், அசுத்தத்திற்காகவும் திறந்துள்ளது. அங்கே பாவிகள் அவ்வெள்ளத்தில் மூழ்கி தங்களுடைய பாவக்கறையை போக்குகின்றனர். அதை அருளும் கர்த்தாவே. கர்த்தாவே, இன்றிரவு அவர்களோடே வீட்டிற்குச் சென்று, அவர்களோடே தரித்திரும். கர்த்தாவே, அவர்களுக்கு என்ன இருக்க வேண்டுமோ அதை ஜீவனுள்ளதாக்கும். அதை அருளும். எங்கள் மத்தியில் சுகவீனமாயுள்ளோரையும், அல்லலுற்றிருப் போரையும் சுகப்படுத்தும். நீரே சகாயமற்றவர்களுக்கு சகாயராய் இருக்கிறீர். நீரே அவர், கர்த்தாவே, மற்றவர்கள் செய்ய முடியாததை செய்யக்கூடியவரே. நீரே நிரந்தரமான கிருபையாய் இருக்கிறீர். நீர் தேவனுடைய வெகுமதியாய் இருக்கிறீர். கர்த்தாவே, நாங்கள் உம்மை தாழ்மையோடு விசுவாசிக்கிறோம். நாங்கள் விடி வெள்ளியை பின்தொடருகிறோம். அந்த ஒளியானது ஆவியின் அபிஷேகத்தினால் எங்களை அந்த பரிபூரண வெளிச்சத்தண்டைக்கு, அந்த தேவனுடைய வெகுமதியண்டைக்கு, நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் வரையில் நாங்கள் அதை பின்தொடருவோம். கர்த்தாவே, அதை அருளும். இப்பொழுதே நான் உம்மண்டை அவர்களை ஒப்புவிக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இன்றிரவே அவர்களுடைய ஆத்துமாக்களை ஏற்றுக்கொண்டு, அதை கல்வாரியின் சிவப்பான இரத்தத்தில் கழுவியருளும். நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். 125கர்த்தாவே என்னோடு தங்கியிரும். (சகோதரன் பிரான்ஹாம் வாய்கூட திறவாமல் பாடத் துவங்குகிறார். - ஆசி.......... ஜீவனிலும், மரணத்திலும் என்னைத் தேற்ற கைவிட்டு விடாதேயும். ஓ, கர்த்தாவே, என்னோடே தங்கியிரும். நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடு அவரை நேசிக்கின்றீர்களா? (சபையார், “ஆமென்” என்கிறார்கள். - ஆசி.) பண்டைய காலத்தின் நிமித்தமாக மீண்டும் ஒருமுறை, “நான் அவரை நேசிக்கிறேன். அவர் முதலில் என்னை நேசித்த காரணத்தால் நான் அவரை நேசிக்கிறேன்'' என்று பாடுவோம். இப்பொழுது ஒவ்வொருவரும் பாடுவோம். நான் அவரை நேசிக்கிறேன் ஏனெனில் அவர் ........ நாம் நம்முடைய கரங்களை அவரண்டையில் உயர்த்துவோமாக. சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தினிலே. இப்பொழுது நீங்கள் முன்னாலோ, பின்னாலோ, உங்களுக்கு பக்கத்திலோ உள்ள யாரோ ஒருவரிடம் கரங்களை குலுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன்; ஏனெனில் அவர் முதலில் என்னை நேசித்தார் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி ......... தேவனுடைய கிறிஸ்மஸ் வெகுமதியை ஏற்றுக் கொண்டிருக்கிற யாவரும் உங்களுடைய கரங்களை இப்பொழுது உயர்த்துங்கள். நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை நேசிக்கிறேன் ஏனெனில் அவர் முதலில் என்னை நேசித்தார் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தினிலே. 126நீங்கள் அவரை நேசிக்கவில்லையா? [சபையார், “ஆமென்” என்கிறார்கள். - ஆசி.) அவர் அற்புதமானவரல்லவா? [“ஆமென்” சரி, நாம் இப்பொழுது எழும்பி நிற்போம். துன்பமும் துயரமும் கொண்ட பிள்ளையே, இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல்; அதுவே உனக்கு ஆனந்தத்தையும், ஆறுதலையும் அளிக்கும், எனவே, நீ எங்கு சென்றாலும் அதைக் கொண்டு செல். விலையேறப்பெற்ற நாமம், ஒ எவ்வளவு இனிமையானது! ஒ, எவ்வளவு இனிமையானது! பூவின் நம்பிக்கையும், பரத்தின் ஆனந்தமுமாமே; விலையேறப்பெற்ற நாமம், விலையேறப்பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமையானது! பூவின் நம்பிக்கையும், பரத்தின் சந்தோஷமுமாமே. இப்பொழுது மெதுவாக, இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல் ஒவ்வொரு கண்ணிக்கும் அதுவே ஒரு கேடயம்; சோதனையின்போது ......... சோதனைகள் சூழும்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ........ சூழும்போது அந்த பரிசுத்த நாமத்தை ஜெபத்தில் உச்சரி. விலையேறப்பெற்ற நாமம், விலையேறப்பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமையானது ஓ, எவ்வளவு இனிமையானது! பூவின் நம்பிக்கையும், பரத்தின் சந்தோஷமுமாமே; விலையேறப்பெற்ற நாமம், விலையேறப்பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமையானது பூவின் நம்பிக்கையும், பரத்தின் சந்தோஷமுமாமே! இயேசுவின் நாமத்திலே ....... இப்பொழுது நம்முடைய தலைகளைத் தாழ்த்திப் பாடுவோமாக. அவருடயை பாதத்தில் சாஷ்டாங்கமாய் விழுந்து பணிவோம், நம்முடைய யாத்திரை முடிவடைகையிலே, நாம் பரத்தில் அவரை இராஜாதி இராஜாவாக முடிசூட்டுவோம். விலையேறப்பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமையானது! எவ்வளவு இனிமையானது! பூவின் நம்பிக்கையும், பரத்தின் சந்தோஷமுமாமே; விலையேறப்பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமையானது! பூவின் நம்பிக்கையும், பரத்தின் சந்தோஷமுமாமே!